அலமாரியின் சில பக்கங்கள்

140.00

‘இந்திய ஆட்சிப்பணியும் சினிமாவும் மற்றும் நானும்’ புத்தக விமர்சனம், இருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சி. ஒன்று. ப்ரியா வெங்கடேசன் புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட்டு எழுதியிருப்பது. இரண்டாவ தாக. என் எழுத்துக்களின் பின்னிருக்கும் ஆதங்கத்தையும் மனிதாபி மானத்தையும் அடையாளம் கண்டு பாராட்டியிருப்பது.
பொதுவாக, புத்தக விமர்சனம் செய்வோர் பலசமயம் தரவுகள் காட்டாமலேயே வானுயரப் புகழ்வதும் இகழ்வதும் வழக்கமாக இருக்கிறது. தரவுகளைக் காட்டிப் பாராட்டும்போதுதான் புத்தகத்தின் ஆசிரியருக்கு மனநிறைவு ஏற்படும். அதை நூலாசிரியர் செய்திருக்கிறார். நன்றியும் வாழ்த்துகளும்.

ஞான ராஜசேகரன், இந்திய ஆட்சிப்பணி (ஓய்வு)
திரைப்பட இயக்குநர்

நண்பர் ப்ரியா வெங்கடேசன் அவர்களின் எழுத்துகளால் உயிர்பெற்றுள்ள இந்நூல், தற்கால இலக்கியங்களின் சிறுதுளி அழகையும் ஆளுமையையும் வெளிப்படுத்தும் ஒரு முயற்சி. பொதுவாக இலக்கியங்கள் எழுதுவது ஒரு பணியென்றால், அதைத் திறனாய்வுக்குட்படுத்திச் செழுமைப்படுத்துவது மற்றொரு பணி. ப்ரியா வெங்கடேசன் அந்தப் பணியைச் செவ்வனே செய்துள்ளார்.
தமிழ் இலக்கியங்கள் மற்றும் மொழியின் மீது அவர் கொண்ட அன்பும் பாசமும் இந்தப் பணியைச் செயல்படுத்தியுள்ளன. இந்த நூல், தற்காலத் தமிழ் இலக்கியத்தின் சீர்திருத்தத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்கும். அவருக்கு நம் வாழ்த்துகள்.

தரணி ராசேந்திரன்
திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அலமாரியின் சில பக்கங்கள்”

Your email address will not be published. Required fields are marked *