வாமன அவதாரமெடுத்துப் படையெடுத்து வருகின்றன இன்றைய இளைஞர்களின் ஹைக்கூ கவிதைகள். அவற்றில் வாசகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும் அளவிற்கு வெகுசிலரின் படைப்புகளே சிறக்கின்றன. அத்தகைய சிறந்து நிற்கும் ஹைக்கூ கவிதைகளை இத்தொகுப்பில் தந்துள்ளார் சுந்தரசெல்வன். இதில், இயற்கையோடியைந்த வாழ்வியல் காட்சிகள் ஏராளம். அவற்றை அழகியலுடன் கவித்துவப்படுத்திக் காட்சி இன்பம் சேர்த்துள்ளார்.
– பெரணமல்லூர் சேகரன்


Rakesh.M
அந்தியில் பூத்த நந்தியாவட்டை வாசித்தேன் ஒவ்வொரு கவிதைகளும் நெஞ்சை தொட்டன.கவிஞர் அனைத்து கவிதைகளையும் ஆழ்ந்து சிந்தித்து எழுதி இருக்கிறார்..
நிச்சயம் இந்த புத்தகத்தை வாங்கி வாசித்தால் புதுவித வாசிப்பனுபவம் பெறலாம் என்பதே! உறுதி…
ஆரலி
அந்தியில் பூத்த நந்தியாவட்டை ஹைக்கூ கவிதைகள் மிகச்சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு கவிதைகளும் நெஞ்சை தொட்டு செல்கிறது. அவசியம் வாங்கி வாசிக்கலாம்..
SUJAI ELUMALAI
#அந்தியில்_பூத்த_நந்தியாவட்டை 📖
நந்தியாவட்டை மட்டும் பூத்திடவில்லை
புத்தகம் படித்தபின் ஆனந்தமும்
சில கேள்விகளும்
சில கவலைகளும் பூக்கின்றன.
கவிதை எழுதும் முறை என்பது
காட்சியுடன் பொய்யும் கொஞ்சம் புகழும் சேர்த்து
அலங்காரம் செய்து எழுதப்படும்.
ஆனால் இக்கவிதைகள் அனைத்தும் உண்மையுருவில்
எதார்த்தமான உண்மைகளை உவமையாக கொண்டுள்ளது.
அன்புத்தோழர் அ. சுந்தர செல்வன் அவர்கள் தன்னுடைய முதல் பதிப்பான #காற்றில்_அசைகிற_காலம் அடுத்து தன்னுடைய இரண்டாவது ஹைக்கூ கவிதை தொகுப்பு அந்தியில் பூத்த நந்தியாவட்டை சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் தன்னுடைய படைப்பான அந்தியில் பூத்த நந்தியாவட்டை புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் சிரமம் தன்னுடைய எண்ணத்தை மூன்று வறிகளுக்குள் சொல்வது. ஆனால் கவிஞர் சுந்தரசெல்வன் மிக நேர்த்தியான தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களை கொண்டு கவிதைகளை எழுதியுள்ளார்.
அந்தியில் பூத்த நந்தியாவட்டை இருமுறை வாசித்துவிட்டேன்
ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கதைகளை கூறுகிறது.
கிராம வாழ்வியலில் நாம் கண்டிராத அல்லது கண்டும் காணாமல் விட்ட பல நிகழ்வுகளை அருமையாக காட்சிநயப்படுத்தி கவிதைகளாக வார்த்திருக்கிறார். நானும் கிராமத்தில் வாழ்வதால் அவரின் பல கவிதைகளை என் வாழ்வியலோடு பொருத்திபார்க்க முடிகிறது
தன்னுடைய கவிதைகளில் தான் கண்ட காட்சிகளை மட்டுமல்லாமல் சமூகத்தில் நிகழும் சில அவலங்களையும்
தன்னுடைய கவிதைகளில் கூறியிருக்கிறார்.
இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் சமூக பார்வையோடு சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறையோடு இங்கு நிகழும் சில ஒடுக்குமுறைகளையும் சாதி வன்கொடுமைகளையும் தனது கவிதைகள் மூலம் கண்டிக்கிறார்.
தாய்மை, ஏழ்மை, வாழ்வியல், இயற்க்கை,ஆனந்தம், நிலா, மழலை மொழி, மழை, அரசியல், நாத்திகம், நம்பிக்கை, மூட நம்பிக்கை,பசி, தீண்டாமை, சாதி, ஒடுக்குமுறை, கம்யுனிசம் போன்ற பல்வேறு காட்சிகளையும் உணர்வுகளையும் மிகவும் நேர்த்தியாக உவமை படுத்தியிருக்கிரார் கவிஞர்.
கவிஞரின் சில கவிதைகள்
🍂 வறண்ட கிணறு
முளைக்கும் செடி
துளிர்க்கும் நம்பிக்கை
வாழ்வின் துன்ப காலங்களிலும் நம்பிக்கையோடு இருத்தல்.
🍂 மழையின் இசை
தவளையின் ஓசை
அலறியது ஊர்
கிராமத்து வாழ்வியல்.
🍂 அடிக்கடி கடைக்குச் சென்றன
அம்மாவின் வளையல்கள்
பசித்த வயிறுகள்
ஏழ்மையும் ஏழையின் பசியும்.
🍂 மனமெல்லாம் பரபரப்பு
நிலமெல்லாம் செங்கொடி
பஞ்சமி நில மீட்பு
பஞ்சமி நிலங்கள் மீட்டு தொடர்ந்து மக்களுக்காக குரல் குடுக்கும் செங்கொடி இயக்கங்கள்.
🍂 சாலையின் நடுவில்
கரும்புத் தோட்டம்
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம்.
என்னை மிகவும் பாதித்த என்னை தொந்தரவு
செய்கின்ற கவிதைகள்.
🍁அலங்கரிக்கப்பட்ட மங்கை
உடைபடும் வளையல்கள்
சாவமாய்க் கணவன்
🍁 வழி மறிக்கிறது
மேலத்தெரு
தலித் சடலம்
🍁 படபடக்கும் தேசியக்கொடி
பறக்கும் தன்மானம்
தலித் ஊராட்சித் தலைவர்
கவிஞர் சுந்தரசெல்வன் எழுதிய அத்தனை கவிதைகளும் அருமை. கவிஞர் மேலும் இதுபோன்ற படைப்புகளை படைத்திட வேண்டும்.
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் 📖
நூல். : அந்தியில் பூத்த நந்தியாவட்டை
வகைமை: ஹைக்கூ
ஆசிரியர் : அ. சுந்தரசெல்வன்
பதிப்பகம்: கொட்டாரம்
விலை. :110
அந்தியில் பூத்த நந்தியாவட்டை வெற்றியடைய வாழ்த்துகள் 💐
பேரன்பும்
வாழ்த்துக்களுடன்
சுஜய் ஏழுமலை
Malathy M
The author sundara selvam has shared his thoughts in three lines,each and every lines were be different and understandable to all.most of the lines gives social awareness,so it’s very interesting to read the anthiyil pooththa nanthiyaavattai haiko