கதை என்பது கதாசிரியனுக்கு ஒரு சாக்குதான். அவன் கதையை முன்னிட்டு, பல தர்க்கங்களை உருவாக்குகிறான்; விவாதங்களைத் தொடங்கி வைக்கிறான்; சமூகம் குறித்த அவனது பார்வையைப் பரிமாறுகிறான். அப்போது அவனது பேனா நட்சத்திர வாக்கியங்களைப் பிரசவித்துவிடுகிறது.
சீராளன் ஜெயந்தனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் சிறப்பு. இதன் கதம்பம். பலவிதமான மணம் மற்றும் சுவை. ஒவ்வொரு கதையிலும் கதையின் முக்கிய நிகழ்விடங்களை வாசகர் மனத்தில் ஓவியங் களாக்கிவிடுகிற மாயவித்தையை இவரின் எழுத்து மிக எளிதாக நிகழ்த்திவிடுகிறது. பல கதைகளிலும் ஆடுபவராக அல்லது ஆட்டுவிப்பவராகப் பெண்களே இருக்கிறார்கள். பல கதைகளில் சக்தியின் கூத்து நிகழ்கிறது.
- எழுத்தாளர் வே. எழிலரசு









Be the first to review “athikara vinayakar”