ஹேராம் என்றொரு திரைத்துவம்

160.00

‘ஹே ராம்’ ஒரு தமிழ்த் திரைப்படம் அல்ல; அது ஒரு இந்தியத் திரைப்படம். இன்னும் சொல்லப்போனால் தமிழில் எடுக்கப்பட்ட சர்வதேசத் திரைப்படம் என்றும் கூறலாம்.
ஹே ராம் திரைப்படத்தின் மய்யம் ‘காந்தியைக் கண்டடைதல்’ என்கிற ஒற்றை வரிதான், அந்த ஒற்றை வரியின் நீட்சியும் அதற்கான இலக்கைச் சென்றடைய அத் திரைப்படம் எடுத்துக்கொண்ட பின்னணியும் அதை நம்புகிற இடத்துக்குக் கொண்டுசெல்ல முனையும் கதாபாத்திரங்களும் நிழலும் எவ்வாறு பின்னப்பட்டுள்ளன என்பதைத் னக்கே உரிய நடையில் திறம்படக் கூறியுள்ளார் நெய்வேலி பாரதிக்குமார்.
இந்தத் திரைப்படத்தின் அவசியத்தை, கலை நுட்பத்தை, கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, ஒலிப்பதிவு, இசை, ஒளிப்பதிவு, ஒலிக்கோவை, கலை இயக்கம் என்று தனித்தனியே நிகழ்த்தப்பட்ட சாதனைகளை மிகத் தெளிவாக, உணர்வுப்பூர்வமாக எடுத்துச் சொல்லியிருப்பதில் நூலாசிரியர் தன் இலக்கில் வெற்றிபெற்றுள்ளார்.
இயக்குநர் ராசி.அழகப்பன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஹேராம் என்றொரு திரைத்துவம்”

Your email address will not be published. Required fields are marked *