பட்டதாரி ஆசிரியர், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A3) அமைப்பின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC)தமிழகக் குழு உறுப்பினர், தமிழால் இணைவோம் உலகப் பேரியக் கத்தின் தலைமைச் செயலாளர், தீவிர கல்விச் செயல்பாட்டாளர்.
கல்வியைப் பரந்துபட்ட கழுகுப் பார்வையில், தத்துவப்பூர்வமாக அணுகியே பழக்கப்பட்ட என்னைப் போன்றவர்களுக்கு, கல்வி சார்ந்த கீழ்மட்டப் பிரச்சினைகளுக்கு ஆசிரியர் உமா அவர்கள் அனுபவப்பூர்வமான சான்றுகளுடன் வினையாற்றி அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை வெளிப்படுத்தி யிருப்பது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. குறிப்பாக, பள்ளிக்கல்வியின் பண்புகளாகிய கற்றல் கற்பித்தல், தேர்வு முறைகள், மாற்றுக் கல்வி முறைகள் மற்றும் பள்ளிக் கல்வியியக் கக் கூறுகள், அவற்றின்பால் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் உட்பட பள்ளிக் கல்வியின் அனைத்து அம்சங்களையும் அலசியிருக்கிறார்.
கல்விக்கானபல்வேறு அம்சங்களின்பால் ஒரு ஆசிரியரின் அனுபவப்பூர்வமான பார்வையாக இந்நூலினை அணுகுவது சிறப்பாக இருக்கும். ஆசிரியர்கள் பலரிடையே கல்விப் பிரச்சினைகள் குறித்த புரிதல் இல்லாதது இக்காலத்தில் கண்கூடு. அதனைப் போக்குவதற்கு இந்நூல் பெரிதும் துணை நிற்கும்,
கல்வி பேராசிரியர் லெ. ஜவகர் நேசன், மேனாள் துணை வேந்தர்,
ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகம்.









Be the first to review “இன்றைய சூழலில் கல்வி”