ஜெயந்தன் நாவல்கள் தொகுதி 2

420.00

எதுவொன்றையும்பொதுப்புத்திப் பார்வை யில்லாமல் புதிய கோணமாய்வெளிப்படுத்தும் திறன்கொண்டிருந்தவர் ஜெயந்தன்.

ஒரு விசயத்தைச் சுற்றி அடைத்திருக்கிற புதர் விலக்கி, அகழி கடந்து, அதை மூடியிருக்கிற இருட்டிலிருந்துவெளிச்சத்தை எடுத்துவர முயல்கிற ஒருவர்அவர் அனைத்து

வகை ஆய்வுகளும் விவரங்களும் தரவுகளும் தன் விரல் நுனியில்

இருந்தால் தவிர அவர் எழுதத் தொடங்கமாட்டார். இடையில் தடைப்பட்டால், அந்த விசயத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கிறவரை தொடரமாட்டார்.

– பா. செயப்பிரகாசம்

ஜெயந்தன் தமிழில் எழுபதுகளில் உருவான நவீன லக்கியவாதிகளில்

குறிப்பிடத்தக்கவர். அதிகமும் பெரிய இதழ்களிலேயே

எழுதியவர். ஆனால் வணிக எழுத்தின் இலக்கணங்களை மீறிய வீரியமான சமூக விமரி சனத்தன்மை கொண்டவை அவரது படைப்புகள்,

இந்தியச் சமூகத்தின் தார்மீக வீழ்ச்சியைச் சித்தரிக்கும் அவருடைய படைப்புகள் இன்றும் முக்கியமானவை.

– ஜெயமோகன்

ஜெயந்தனின் நாவல்கள் அனைத்துமே எளிய மனிதர்களின் வாழ்வை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டவை. அதிலும் குறிப்பாக, அவை பெண்களை மையமாகக் கொண்டு சுற்றிச் சுழல்பவை.

பெண்களை மையப்படுத்திய படைப்புகள் என்பதால் அவர்களின் துயரங்களைப் பதிவு செய்வதோடு மட்டுமே நின்றுவிடாமல், அத்துயர்களி லிருந்து பெண்கள் விடுபடவேண்டிய அவசியத்தையும் விடுபடும் உபாயங் களையும் தனது பாத்திரங்கள் வாயிலாகவே அவர் முன்வைக்கிறார்.

ஜெயந்தனின் பாத்திரப் படைப்புகளும் விவரணைகளும் வசளங்களும் மிகக் கூர்மையானவை. அடிப்படையில் பெரியார் மற்றும் கம்யூனிச இயக்கத்தின் கோட்பாடு களோடு வளர்ந்த அவரின் எழுத்துகளிலும் பெண் விடுதலை மற்றும் மகளிர் மேம்பாடு குறித்த சிந்தனைகள் ஆங்காங்கே நறுக்குத் தெறித்தாற்போல் வந்து விழுவதில் வியப்பேதும் இல்லை.

ஜெயந்தனின் படைப்புகள் அனைத்தும் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும். புதுமைப்பித்தனின் படைப்புகள் அவர் காலத்தினும் கூடுதலாகத் தற்போது கவனம் பெற்றுள்ளதைப்போல், ஜெயந்தனின் படைப்புகளும் இனிவரும் காலங்களில் இலக்கிய உலகின் பேசுபொருளாக இருக்கும்.

Category:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஜெயந்தன் நாவல்கள் தொகுதி 2”

Your email address will not be published. Required fields are marked *