இறைக்காதல் கவிதைகளின் ஆற்றுப்படுத்துதலின் வாயிலாக கங்கா பாஸ்கரன் சிவனை அடைய விழைகிறார். உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் திகழ்கிற அவனுக்குள் காற்றில் எரித்து கரையும் கற்பூரத்தைப் போலக் கலந்துவிட வேண்டுவதுதான் கங்காவின் இந்தக் காதல் துதி. ஆலகாலத்தை அமுதமென உண்பதும் சுடலைப்பொடி பூசினாலும் புதிய மணம் வீசுவதும் அவனால் மட்டுமே ஆகும். அவை அவனது திருவிளையாடல்கள். அவனை அமுதத் தமிழால் அடைக்கலம் வேண்டி கங்கா அழைக்கிற ஓங்காரத்தில் “பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும்’ என்று பாரதி பாடிய வரிகளின் / வலிகளின் உட்தொனி பூசை மணி ஓசையாய் ஒலிப்பதை உற்றுக் கேட்டால் உணர முடியும்.
கவிஞர் பழநிபாரதி









Be the first to review “காதல் துதி”