கவிதை என்பது ஒரு கடிநாய்! இன்முகம் கொண்டு காண்போரின் நாணக்கன்னங்களையும்,துன்மூகம் கொண்டு காண்போரின் நாபிக் கமலங்களையும் சிவக்க வைக்கும் தன்மைகொண்டவை!கடிபட்டவன் என்கிற முறையில் சொல்லிக்கொள்கிறேன்!
காதலர்களே நீங்கள் கவிதாக்களோடு சேர்ந்து கவிதைகளையும் நேசிக்கத் துவங்குங்கள்! அதுவே தற்போதைய முன், பின், மேல், கீழ், வலது மற்றும் இடது நவீனத்துவ கவிதைச் சூழலின் கல்லீரலுக்கு நன்மை பயக்கும்! காதலிகளின் தகப்பன்மார்களின் கையிலிருக்கும் அரிவாளைவிடவும் கூர்மையானவை கவிதைகள் என்றால் ஒப்புக் கொள்வீர்களா?
முயன்று பாருங்கள்!அரிவாளின் கூர்மையையும் ஒருசேரசுவைக்கலாம்!
கவிதைகள் எப்போதும் கவிதைகளாக மாத்திரம் இருந்து விடுவதில்லை!
அவை சில நேரங்களில் விதைகளாக இருந்து விருட்சமாக முளைக்கும்!
அதுபோலவே ஒரு காதல் எப்போதும் காதலாகவே இருந்து விடுவதில்லை!
ஒரு கட்டத்தில் கடிநாயாக மாறி உங்களைத்துரத்தும்!
சொல்ல வேண்டியதை சொல்லியாகிவிட்டது!
அதுக்கப்புறம் உங்க இஷ்டம்!
இப்படிக்கு,
கவிஞர். சட்டம்பி









Be the first to review “களிறும் பிடியும் பின்னே ஞானும்”