கம்பரக்கத்தி

260.00

கம்பரக்கத்தி என்ற இந்தப் பிரதியை ஒரு காந்தத் துண்டாக நாம் உருவகப்படுத்தினால், அதன் இரு புலங்கள் இருவேறு உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும். அவை ஆணின் தனிமையும் பெண்ணின் வாதையும்தான்.
இந்தப் பிரதியின் இயங்குதளம் கிராமம்தான். முழுக்க முழுக்க கிராமத்தை, அதன் உணர்வை, அதன் மனிதர்களை, கிராமம், மறைத்திருக்கும் பக்கங்களை, உள்ளொடுங்கிய அதன் கசடுகளை, அதன் பெருமிதங்களை, தொன்மங்களைக் காட்டிச் செல்வதுதான் இந்த நூலின் சிறப்பு. பிய்த்துப் பிய்த்துக் கொடுக்கப்பட்ட ஒரு கிராமிய நாவலின் பக்கங்களாக இந்தக் கதைகள் நம்முள் படபடக்கின்றன.

வாசிப்பு சுவாரஸ்யம் கொண்ட, பயணத்தின்போது சட்டெனப் படித்து அசைபோடும் விதமாக சின்ன சின்ன கதைகளாக வடிவமைக் கப்படிருக்கிறது. புதிய கோணத்தில் கிராமிய மனிதர்களின் வாழ்வை 360 டிகிரியில் தந்துள்ள சிறந்த சிறுகதைத் தொகுப்பு இது.

இந்தத் தொகுப்பு வெளிவந்த பின் முத்து ஜெயாவுக்கு வேறு அறிமுகம் தேவையில்லை. கம்பரக்கத்தியே ஆகச் சிறந்த அறிமுகப் படலமாக அமையும்.

எழுத்தாளர் அமிர்தம் சூர்யா

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “கம்பரக்கத்தி”

Your email address will not be published. Required fields are marked *