தியானத்தையும் அமைதியையும் ஆன்மீகக் கிண்ணத்தில் குழைத்துக் குழப்பி வைப்போர் மத்தியில், தியானத்திற்கென லிங்கம் நிறுவித் தன்னைத் தென்னை யாக்கிக்கொள்வோர்களுக்கிடையில், தியானம் என்பது சாதரணனும் அணியக்கூடிய கலிங்கமே என எழுத்தால் நூல் நூற்றுத் தந்திருக்கிறார் மருத்துவர் நடராஜன் பெருமாள்.
கைத்தறியைப் போன்ற எளிமையான நடை, கருத்துகள் முறிந்து போகாமல் வாசகருக்குக் கொண்டு சேர்ப்பது சிறப்பு. அடி முதல் முடி வரை மேல் நோக்கிப் பாய்ந்துவிடாது, மெதுவாகச் சிறகை விரித்து மேலுயரும் தன்மையிலான
சொல்முறை வாசிப்பை இலகுவாக்குகிறது. யாவர்க்கும் எளிமையாய் உண்மை சென்றடைய வேண்டிச் செய்த அரும் முயற்சி இது. இந்நூலிலுள்ள கட்டுரைகளை வாசிப்பவர்கள் மறுபரிசீலனைகளின் கூட்டுப்புழுப் பருவத்தை எளிதாகக் கடக்கக் கூடுமென நம்புகிறேன்.
கவிஞர் தசாமி

Be the first to review “மருத்துவத் தியானம்”