மில்லரின் மின்கம்பம்

220.00

மில்லரின் மின் கம்பம். வாழ்வில் சந்திக்கவே முடியாத கற்பனை மனிதன் ஒருவனைக் குறித்த முதற்சித்திரத்தைக் கண்ணுறத் தொடங்கும்போது வாசகனுக்குள் நேர்வது வெற்று அன்னியம் மட்டுமே. அதே பாத்திரம் பிரதியை முழுவதுமாக வாசித்து நிறைகிற கணம், வாசக மன ஆழத்தில் அணுக்கமான சினேக வெம்மையைத் தோற்றுவிப்பது சிலாக்கியம். பிரபு தர்மராஜ் எழுத்தின் வழி கிளம்பிய மில்லர் எனும் பாத்திரம் தன்னைப் படைத்தவனை விஞ்சி நிற்பது கவளத்திற்குரிய சிறத்தல், புதிய நடிகனுக்கு ஒரே இரவில் பெரும்பிம்பமாக உருவெடுப்பதற்கு உதவிக்கரம் செய்து தீர்ந்தழியும் அவனது முதற்பாத்திரத்தின் தியாகத் தோன்றலுக்கு எதிர்விளைதலாகவே மில்லர் எனும் பாத்திரம், தான் பிறந்திருக்கும் நாவலின் வழியாக வாசகாதி உலகத்தில் அடையவல்ல செல்வாக்கினைக் கருத

முடிகிறது. அங்கதத்தின் மெல்லிய

இழைகளைக் கதைகளாய்த் திரித்திருக்கும் பிரபுவுக்கு நிச்சயம் இந்தக் கதை பெயரும் பேறும் பெற்றுத் தரும். வாழ்வும் பகடியும் பிரிக்க முடியாதவைதான் இல்லையா?

எழுத்தாளர் ஆத்மார்த்தி

Category:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “மில்லரின் மின்கம்பம்”

Your email address will not be published. Required fields are marked *