ஒரு நதியின் பின்னால் எத்தனை வரலாறுகள்! அதன் அழிவுக்குப் பின்னால் எத்தனை சம்பவங்கள்! எத்தனை சூழ்ச்சிகள்! எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களின் அனுபவங்கள்தான் இந்த நாவலில் வரும் சம்பவங்கள் எனக் கருதுகிறேன். நதி எவ்வாறு மாசுபடுகிறது, யாரால் அழிவைச் சந்திக்கிறது, நாம் ஏன் நதியைப் பாதுகாக்கவேண்டும் என்பதற் கெல்லாம் அவர் கூறும் காரணங்களும் விளக்கங்களும் புள்ளிவிவரங்களும் போராட்டக் களங்களும் நதியைக் காப்பாற்ற அவர் முன்வைக்கும் கோரிக்கையும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. தாமிரபரணி மட்டு மல்ல; உலகிலுள்ள நீர்நிலைகளை நேசிக்கும் அனைவரும் இந்த நாவலை அவசியம் வாசிக்க வேண்டும்.
ரா. மந்திரமூர்த்தி திரைப்பட இயக்குநர்









Be the first to review “நீர்மம்”