வரலாற்றை எழுதுபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதால், பெண்களின் பெயர்களும் அவர்களின் பங்களிப்பும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. பெண்கள் அதிகமாகக் கலந்துகொண்ட இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் வரலாறு முறையாகத் தொகுக்கப்படவில்லை. ஆண் ஆளுமைகளைச் சார்ந்தும் அவர்களின் உறவுகளாகவும் மட்டுமே பெண்களின் முகங்கள் வந்துபோகின்றன.
சங்ககாலத்தின் முதற்பொருளின் கருப்பொருளாக இடம்பெறும் திணைக்குடிகளின் பெண்பால் அடையாளங்கள், ஆண்பாலின் அடையாளத்தையே முதன்மைப்படுத்துகின்றன. போருக்குக் காரணமாகப் பெண்ணையும் அவளைப் பெற்ற தாயையும் குற்றஞ்சாட்டுதல் அன்றும் இன்றும் மாறவில்லை.
விருந்தோம்பல் கடந்து வந்த பாதையில், பெண்ணின் அகப்போராட்டம் புதைந்திருக்கிறது. எழுதப்பட்ட பக்கங்களை மறுவாசிப்பு செய்வதன் மூலம், எழுதப்பட வேண்டிய சமூக அரசியலைப் பண்பாட்டுத் தளத்திற்கு எடுத்துச் செல்ல இக்கட்டுரைகள் முன்னுரையாக அமையும்.









Be the first to review “பண்பில் ஆண்மை”