ஓய்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியரான கவிதாயினி அமுதா பொற்கொடி ஆசிரியப் பணியில் சுமார் 37 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். 2016ஆம் ஆண்டு முதல் கவிதைகள், கட்டுரைகள் எழுதத் தொடங்கிய இவர், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும் அவர்களிடம் நற்சிந்தனைகளை விதைக்கும் பொருட்டும் சிறார் பாடல்கள் மற்றும் கதைகளும் எழுதத் தொடங்கினார்.
கல்விப் பணியும் கவிதை புனைதலும் எனது இரு விழிகள் என்று குறிப்பிடும் இவர், இதுவரை !! கவிதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், 17 சிறார் பாடல் தொகுப்புகள், ஒரு சிறார் கதைத் தொகுப்பு என இதுவரை 32 நூல்களைப் படைத்துள்ளார். மிகுநிறை படைப்புச் செம்மல் விருது. திருப்பூர் சக்தி விருது, சாதனை மகளிர் விருது, சிகரம் தொட்ட சாதனைப் பெண்மணி விருது, C.L.R சிறந்த பெண் கவிஞர் விருது, சௌமா இலக்கிய விருது, அன்புத் தமிழச்சி விருது இவற்றுடன் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

Be the first to review “சங்கிலி பூங்கிலி”