சொல்லும் பொருளும்

450.00

இருபதாம் நூற்றாண்டுத் தமிழியற் புலத்தை வளம்பெறச் செய்த சிறந்த அறிஞர் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் கு.பரமசிவம், பண்டைத் தமிழ் இலக்கியம் தொடங்கிப் பாரதி இலக்கியம் வரை ஆழ்ந்த பயிற்சி கொண்ட இலக்கியவாணராகவும் உலக இலக்கியத் தோய்வாளராகவும் மரபிலக்கண அறிஞராகவும் மொழியியல் வல்லாளராகவும் தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்த பெருமைக்குரியவர்.

இக்காலத் தமிழ்மரபு, இக்கால மொழியியல் அறிமுகம் முதலிய நுட்ப நோக்கினைக் கொண்ட அவர்தம் நூல்கள் காலங்களை வென்று, அறிஞர் கு.பரமசிவம் அவர்களின் தனித்த இடத்தைத் தமிழுலகில் உறுதிசெய்கின்றன. இம்மூத்த பேராசிரியரின் ஆய்வுக்கொடைகள் அனைத்தும் முழுதுறத் திரட்டப்பெற்றுத் தமிழுலகின் பார்வைக்கு இலக்காகாத சூழலில், முதன்முறையாக முனைவர் மா. பூங்குமரி அவர்கள் அறிஞர்கு. பரமசிவம் அவர்களின் பத்தொன்பது அரிய கட்டுரைகளைத் தேடித் திரட்டியளித்துள்ளார். தமிழாய்வு வரலாற்றுக்கு அருங்கொடையாக மலரும் இந்நூலை அரிதின் முயன்று தொகுத்துள்ள தொகுப்பாசிரியர், அறிஞர் கு. பரமசிவம் அவர்களின் நேரடிக் குடும்ப மரபினர்; அப்பெருமகனாரின் அறிவு மரபினை அடியொற்றும் புலமையாளர். பெரியபுராண யாப்பியலை ஆராய்ந்த திறனாளர், புத்திலக்கிய ஈடுபாடும் கொண்ட பரந்த இலக்கியப் பயிற்சி வாய்ந்தவர். இவரது தேடலில், உழைப்பில் உருப்பெற்றுள்ள இந்நூலால் தமிழாய்வுலகம் வளமும் வனப்பும் கொள்கின்றது.

முனைவர் ய. மணிகண்டன்

பேராசிரியர் தலைவர், பாரதியியல் ஆய்வாளர் தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சொல்லும் பொருளும்”

Your email address will not be published. Required fields are marked *