காந்தியின் சோசலிசத்தை மார்க்சிய வகைப்பட்டு அளந்தால், அதை ஏற்பிற்கு உகந்ததாகச் சொல்லமுடியாமல் போகலாம். ஆனால் காந்தியின் மொழியில், அவரது நடைமுறை வாழ்வின் அடியொற்றிப் பார்த்தால், அதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றாக இருக்காது. ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினமானதாக இருக்கலாம்.
விடுதலைக்குப் பின்னர் காந்தியை இடதுசாரிகள் மிக நிதானமாகப் பார்க்கத் தொடங்கினர். நேருவைத் தொட்டுக் கொள்ளலாம் என நினைத்த அவர்கள். அதே நேரத்தில் காந்தியை எடுத்துக்கொள்ளவில்லை. சற்று மரியாதை கூடிய விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். கம்யூனிஸ்ட் முன்னோடிகள் அம்பேத்கர், பெரியாருடன் கூட முரண் பட்டனர். விமர்சித்தே வந்தனர். தற்போது கம்யூனிஸ்ட்கள் உடன்பாட்டு முறையில் செயல்பட்டுவருவதைப் பார்க்கிறோம். அதேபோல் காந்தியைக் கைக்கொள்வதிலும் கவனம் செலுத்தியிருக்க முடியும்.
காந்தி வாக்கு அரசியலுக்கு உதவி செய்யாமல் போகலாம். அறம் சார்ந்த அரசியலுக்கு அவரைவிட நெருக்கமான வர்களை மார்க்சியர்கள் உணரமுடியாது. இந்தப் புத்தகம் அந்தத் திசைவழிக்குச் சற்று உதவினாலும் மகிழ்ச்சியே.


Be the first to review “தோழர் காந்தி”