வல்வில் ஓரி

330.00

கொல்லிமலை மூலிகைக் காற்றாய்ப் புத்துணர்ச்சி தரும் புதினம்

ஐந்திணைகளில் முதன்மையாகத் திகழும் குறிஞ்சி நிலமான கொல்லி மலையை ஆட்சி புரிந்தவன் ஆதன் ஓரி. தனது கொடையுள்ளத் தால் கடையெழு வள்ளல்களில் ஒருவராய் வைத்துப் போற்றப்படுபவன் வல்வில் ஓரியை முன்வைத்து வரலாற்றுப் புதினம் வடித் திருக்கும் எழுத்தாளர் அசோக்குமார், ஈராயிரம் ஆண்டுகள் முந்தைய காலத்தைக் கதைக் களமாக்கும்போது எழும் சவால்களை அழகும் திறனும் கொண்டு நேர்கொள்கிறார்.

வாசகனைக் கால இயந்திரத்தில் அமர வைத்து அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று வாசிக்கும்போதே கொல்லியின் மூலிகைகளைச் சுவாசிக்கும் பேருணர்வை உருவாக்கிவிடக்கூடிய மொழி, உரைநடை யாய்ச் சுழன்று உச்சம் கொள்கிறது. கவிநடையும் உரைநடையும் கலந்த மொழிநடை பேரழகு எனில், தத்துவங்களும் உவமைகளும் அற்புதத்திலும் அற்புதம்.

வீரமும் ஈகையும் இரு விழிகளெனக் கொண்ட வல்வில் ஓரியின் ஆட்சியில் மக்களின் வாழ்க்கை. செழுமை, நாகரிகம். புவிசார் சித்திரம் என விவரிக்கும்போது அந்தக் காலத்தின் வெளியில் நம்மைக் கட்டிப் போடுகிறார். வீரம் செறிந்த, ஈகை குளிர்ந்த தமிழர்தம் மரபார்ந்த வாழ்வியலை வல்வில் ஓரி வாயிலாக உணரும் தருணம் உன்னத மானது. கொல்லிமலை மூலிகைக் காற்றாய் வாசகனுக்குப் புத்துணர்ச்சி வழங்குகிறது இப் புதினம்.

எப்போதும் பேரன்புடன்

முனைவர் தமிழ்மணவாளன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “வல்வில் ஓரி”

Your email address will not be published. Required fields are marked *