அலமு

300.00

‘அலமு’ தொகுப்பிலுள்ள பெருங் கதைகள் அனைத்தும் ஊர்ப்புறங்களின் வெட்டவெளிக் காடுகளைப் போன்றே வெளிச்ச, வெளிறிய பதிவுகளாக ஆவணங்களாகிக் காத்திருக்கின்றன. இம்மி பிசகாமல் நடைமுறையில் வாழ்ந்துவருவது போன்றே மொத்தக் கதையாடலையும் நகர்த்த இவரால் முடிந்திருக்கிறது. இரு நூற்றைம்பது பக்கங்களுள் ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளாக ஒரு கிராமம் பெற்றிருக்கும் மகத்துவங்களையும் மாற்றங் களையும் காட்டி இந்நூல் மெல்லிய ஓடையின் சலசலப் பென நகர்ந்து செல்கிறது.

கிராமத்தின் பல அடுக்குகளையும் இடுக்குகளையும் அதன் வாசம் மாறாமல் ஒன்றுவிடாமல் எப்படி இவர் எழுதுகிறார் என்றே வியக்கத் தோன்றுகிறது. ஓர் அகன்ற அலைபெருக்கும் பேராறு மாதிரி விரியும் ஒவ்வொரு படைப்பும் எங்கே. எப்போது கிளையாறுகள் மாதிரி நிறைய கிளைக் கதைகள் உருவெடுத்துக்கொண்டே இருக் கின்றது. அதன் நிலைப்பாட்டில் நிலை நிற்காமல் பயணப்பட்டுக் கொண்டே செல்கிறது. பெருங்கதைக்குள் சிறுசிறு கதைகள் பிரிந்துகொண்டே இருக்கின்றன. அவை அச்சு அசலான பட்டிக்காட்டை இசைத்துக்கொண்டே இருக்கின்றன. குறும்புதினங்கள் மொத்தத்தில் ஒரு காட்சித் திரையென வியாபித்து நிற்கின்றன.

முனைவர் செ. வீரபாண்டியன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அலமு”

Your email address will not be published. Required fields are marked *