வேள்பாரி வாசகர் மன்றம் வாசகப் பரப்பி னூடே தோழமையை மலரச்செய்து படர்கிறது.
செயலும் சிந்தனையும் ஆக்கமும் ஊக்கம் பெறும் களமாக வாசகர்
மன்றம் வினையாற்றுகிறது. இம்மன்றம் மூலமாக இணைந்த வாசகர்கள் பறம்பு பாட்டாபிறை குழுவின்மூலம் படைப்பாளி களைக் கண்டறிந்து அவர்களின் படைப்பு களை நூல்களாக வெளியிட்டுப் புதிய துவக்கங்களை உருவாக்குகின்றனர்.
எழுத்தாளர் சு. வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர். சூடாமணியின் கதைகள் உருவாக்கிய மடைதிறப்பை நந்தினி ஆறுமுகத்தின் கதைகளில் நாம் தரிசிக்கலாம். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளிலும் பெண்தான் மையம். 360 டிகிரியில் பெண்ணைத் தன் கதைகள் வழியாக அலசுகிறார் நூலாசிரியர், சிறுகதைவெளியில் ஆர். சூடாமணியின் இடத்தைநோக்கி இவர் நகர்கிறார். அதற்கான சமிக்ஞைதான் இந்த அசுணமா.
எழுத்தாளர் அமிர்தம் சூர்யா
நந்தினியின் கதைகளில் காணக்கிடைப்பவை வாழ்வியல் அறமும் நேர்மறைச் சிந்தனைகளுமே. தன்னுடைய அனுபவங்களையும் அவதானிப்புகளையும் தன்னோடு பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி, இந்தச் சமூகத்திற்கும் கடத்தும் ஒரு முயற்சியாகவே இந்த அசுணமா சிறுகதைத் தொகுப்பைப் பார்க்கிறேன்.
– பா. திருப்பதி வாசகன்









Be the first to review “அசுணமா”