போன்சாய் மரம்

80.00

ஈரோட்டைச் சேர்ந்த சரிதா ஜோ, கதைசொல்லி,சிறார் எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் மற்றும் குங்ஃபூ தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டை பெற்றவர். 700க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இதுவரை 13 சிறார் இலக்கிய நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது மந்திரக் கிலுகிலுப்பை மூன்று விருதுகளையும் 7 கடலுக்கு அடியில் மர்மம் ஐந்து விருதுகளையும் பெற்றுள்ளன. தமுஎகச, சௌமா, எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம், வாசகசாலை விருது உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

போன்சாய் மரம் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் சூழலியல் சார்ந்த கருத்துகளுடன் முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய மாய யதார்த்தக் கதைகளாக, ஒரு கதம்ப மாலையைப் போலக் குழந்தைகள் கைகளுக்குக் கிடைத்துள்ளன என்பது சிறப்பு.

குழந்தைகள் உளவியலைப் புரிந்து, சமூகப் பிரச்சனை களைக் கதைகள் வழியே அவர்கள் கைகளில் கொண்டு சேர்த்தல் இன்றைய அவசியத் தேவை என்பதை உணர்ந்து கதைகளைத் தரும் சரிதா ஜோவின் பாய்ச்சல் பாராட்டத்தக்கது.

கொ.மா.கோ. இளங்கோ சிறார் எழுத்தாளர்

 

book-author

Publisher

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “போன்சாய் மரம்”

Your email address will not be published. Required fields are marked *