சந்திரமுகி கதையில் வரும் காட்சிகள்
மிகச்சிறந்த திரைப்படத்தைப் பார்ப்பது போல உள்ளன. இச்சிறுகதைகளைத் தொலைக்காட்சிகள் தொடராக எடுத்து ஒளிபரப்பினால் அனைத்து மக்களையும் சென்றடையும். நகைச்சுவை மிளிரும் இந்தச் சிறுகதைகள், தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்குக் கிடைத்த தரமுள்ள முத்திரைக் கதைகள் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.
ராஜேஷ் திரைக்கலைஞர்
புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்-ஐயும் பொன்னகரத்தையும் படித்துப்படித்து ஆகர்ஷித்துப் போற்றிப் புகழும் இலக்கியகர்த்தாக்கள் ஒரு காலந்தில் தோழர் ஞானபாரதியின் கதைகளையும் மேடைதோறும் முழங்குவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
கா.சு. வேலாயுதன்
எழுத்தாளர்
தோழர் ஞானபாரதி இந்தக் கதைகளை எழுதி ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால், காலவெளியின் பருண்மையைத்தாண்டி அவை எளிதாக நம் மனவெளிக்குள் புகுந்துகொண்டு நம்மை கர்சிக்கின்றன. கதைகளின் பொதுப்பண்பாக வியாபித்திருக்கும் சமூக அக்கறையும் மனிதநேயமும்தான் அவற்றின் காலங்கடந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்வேன்.
இரா, கோமதி சங்கர் எழுத்தாளர்









Be the first to review “சந்திரமுகி”