திவ்யா weds பழனிச்சாமி

260.00

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாக இன்றளவும் சொல்லப்பட் டாலும் மணவாழ்வில் இணையும் இருவர் மனங்களால் இணைவதே முக்கியமாளது. காதலிக்கும் உரிமைக்குத் தடையாகக் குடும்ப அமைப்பு இருந்தாலும் பிள்ளை களின் மகிழ்ச்சியே முக்கியம் என்று காதல் மணங்களை ஏற்றுக்கொள்ளும் குடும்பங்களும் இல்லாமலில்லை. மனங்கள் இணைவதோடு மணவாழ்வு நிறைவுற்றுவிடுவதில்லை; உடலாலும் இணையும்போதுதான் இல்வாழ்க்கையின் தொடக்கம் நிகழ்கிறது. விரும்பியவளை மணமுடித்தவள் அந்த நுழைவாயிலை அடைத்துவிடும்போது அது குடும்பத் தினரைக் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது.

நாவினால் சுட்ட வடுவினும் வலி மிகுந்தது நிராகரிப்பு. அதிலும் பெண்ணின் நிராகரிப்பு ஓர் ஆணின் ஈகோவைச் சீண்டக்கூடியது. காதலுடன் அணுகியவள் மணமுடித்த மறுகணம் முதல் செய்த உதாசீனத்தை நாயகன் எவ்வாறு எதிர் கொண்டான்? பொருளாதாரத் தள்ளிறைவு அடைந்த பெண்ணிடம் இருப்பது தன்னம்பிக்கையா ? தலைக்கனமா? காதல் மணம் புரிந்தவர்களிடையே ஏனிந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்? ஆட்டத்தில் வென்றவர் யார்? அல்லது இருவரையுமே ஆட்டம் விழுங்கியதா? இப்படியான கேள்விகளுக்குக் கொங்கு மண்ணின் வாழ்வியல் மொழியில் விடை சொல்லும் இந்த நாவல் மணவாழ்வின் உறவுச் சிக்கல்களை மனோதத்துவ ரீதியில் அணுகிறது.

Category:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “திவ்யா weds பழனிச்சாமி”

Your email address will not be published. Required fields are marked *