மார்கழியில் பாடப்படும் திருப்பாவையில், ஆண்டாள் ஒவ்வொரு பாடலையும் ஏலோர் எம்பாவாய் எனப் பாடி முடித்திருப்பாள். இதை ஏல்+ஓர்+எம்பாவாய் எனப் பிரிப்பர். இந்தச் சொல்லுக்கு ‘அன்பிற்குரிய தோழியே’ என்பது பொருள். மற்றொரு விளக்கப்படி, ஏல் என்றால் ஏற்றுக்கொள் என்றும், ஓர் என்றால் யோசித்துப்பார் என்றும் பொருள் உண்டு. இந்நாட்களில், அதிகாலையில் துயில் எழுவதால் கண்ணனின் அருள் கிடைக்கிறதோ இல்லையோ, அழகிய கோலங்களின் தரிசனம் கிடைக்கப் பெறலாம். ஏலோர் எம்பாவாய்.
- குடந்தை அனிதா









Be the first to review “ஏலோர் எம்பாவாய்”