ஆசிரியரைப் பற்றி…
பேராசிரியர் அ. பன்னீர்செல்வம் அவர்கள் 30 ஆண்டுகளாக ஆசிரியர் கல்லூரிகளில் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றி யவர். தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய ஆசிரியர் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி இயக்ககத்தின் முதல் இயக்குநர் இவர் 1960ஆம் ஆண்டு புதுதில்லியில் காட்சிக் கேள்வி கல்வி நிறுவனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். 1965-66இல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கொலரேடோ மாநிலப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்பிப்பில் சிறப்புத் தகுநிலை பெற்றவர்.
கிராமப்புற மாணவர்களது திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் 1972இல், தமிழக அரசு முதன்முதலில் தொடங்கிய புதுக்கோட்டை முன் மாதிரிப் பள்ளியின் முதல் முதல்வராக, சிறப்புப் பணியில் பொறுப்பேற்றார். அப்பள்ளியில் பல புதுமைகளைப் புகுத்தி 4 ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றினார்.
இயற்பியல் கற்பித்தல் முறை, பொருளறிவியல் கற்பித்தல் முறை, வேதியியல் கற்பித்தல் முறை, கல்வி நுட்பவியல், சூழ்நிலைக்கல்வி ஆகியவற்றில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூற்களைப் படைத் துள்ளர். இவருடைய கல்வி நுட்பவியல் (Educational Technology) இந்திய அளவில் பல்வேறு பல்கலைக் கழகங்களால் M.Ed. மாணவர்களுக்குப் பாட நூலாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
M.Ed. மற்றும் M.Phil (கல்வியியல்) ஆய்வாளர் களுக்கு நெறியாளராகத் திகழ்ந்துள்ளார். Ed CIL (புதுதில்லி) நிறுவனத்தில் மக்கள்தொகைக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வியில் சேர்க்கை சரிவு தொடர்பான இரு செயல் திட்டங்களைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளார். தற்போது வாழ்வியல் தொடர்பான நூல்களை எழுதி வருகிறார். தமிழ் இலக்கியங்களை அறிவியல் நோக்கோடு அணுகும் திறனாளர் இவர்.









Be the first to review “குறளினிது பொருளினிது -2”