மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி

80.00

கார்க்கி உலகப் புகழ்வாய்ந்த எழுத்தாளர்: அக்டோபர் புரட்சியை உயர்த்திப் பிடித்தவர்; லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர் என்பனவெல்லாம் பொதுச் செய்திகள். கார்க்கியின் பிறப்பு, வறுமைச் சூழலில் வளர்ந்தது. இலக்கியவாதியாக இருந்தாலும் புரட்சிகரக் குழுக்களுடனான தொடர்பு. அக்டோபர் புரட்சிக் காலத்தில் அவரது அரசியல் பார்வைகள் பங்கேற்பு. புரட்சிக்குப் பின்னரான சோவியத் அரசுகளின் காலத்தில் கார்க்கி எதிர் பார்த்தவை – ஏமாற்றங்கள், சோவியத் தலைமை கார்க்கியிடம் எதிர்பார்த்து ஏமாந்தவை மற்றும் கொண்டாடியவை போன்ற செய்திகள் இந்நூலில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடன் கார்க்கிக்கான உறவுகளும் காந்தி கார்க்கியை அறிந்ததும் கார்க்கி காந்தியை அறிய விரும்பியதும் சொல்லப்பட்டுள்ளன.

கார்க்கியின் அரசியல் பாதை குறித்த எளிய, மிகச் சுருக்கமான அறிமுகம் இளம் தலைமுறைக்குக் கிடைக்க வேண்டும் என்பது இந்நூலின் நோக்கம், அவரது இலக்கிய உலகத்தை மட்டும் அறிந்தவர்களுக்குக்கூட இந்த அறிமுகம் பயனுள்ளதாகவே இருக்கும்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி”

Your email address will not be published. Required fields are marked *