மௌனத்தின் மொழிபெயர்ப்பு

250.00

மௌனத்தின் மொழிபெயர்ப்பு’ எனும் இந்நூலில் பெரும் பாலான கவிதைகள் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை, வன்புணர்வுக் கொடுமைகளை, மென்மையான காதலின்

ஆழமான நேசத்தை, இயற்கையின்மீதான ஆச்சர்யத்தைப் பேசும் அதே நேரத்தில், ஆண்டாண்டு காலமாக நம் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் மூடநம்பிக்கையின்மீது சரியான சவுக்கடியும் கொடுக்கின்றன.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாட்டுக்கொரு புலவன் பாரதி வரிசையில், பெண்களின் மனத்தில் வீரத்தையும் விவேகத்தையும் தூண்டும் விதமாகத் தன்னம்பிக்கையை விதைத்து முரசு கொட்டுகிறார் கவிதாயினி அமுதா பொற்கொடி. சமூக அவலங்களைக் களையத் தோள் நிமிர்த்தி ஆவேசமாய்ப் போர்க்கொடி தூக்கும் இவரின் கவிதைகளில் வள்ளலாரின் கருணை உள்ளமும் தெரிகிறது.

எல்லாக் கவிதைகளும் சிந்தனைச் செறிவோடும் இலக்கிய வளத்தோடும் திகழ்ந்து நம் மனத்தைச் செழுமை செய்கின்றன.

கவிஞர் அமுதா தமிழ்நாடன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “மௌனத்தின் மொழிபெயர்ப்பு”

Your email address will not be published. Required fields are marked *