நாய் வால்

240.00

ஓர் எழுத்தாளன் சொல்லத் தேர்ந்த விஷயத்தை வாசகர்க்கு நச்சென்று சொல்லிவிட ஏற்ற வடிவம் சிறுகதையே. ஒரு சிறுகதையை எழுதி முடித்தபிறகு அந்த எழுத்தாளன் அடையும் நிறைவே அதன் வெற்றி. வாசகர்களால் அல்லது இலக்கிய அமைப்புகளால் அப்படைப்பு எப்படிப் பார்க்கப் படுகிறது என்பது அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும் அரிய உற்சாகம். அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் சாதாரண விஷயமே சிறுகதைக்குக் கருவாய் அமைந்து சிறக்கிறது.

சிறுகதையைப் படிக்கின்றபோது வாசகன் எந்தக் குறுக் கீட்டையும் சந்திக்கக்கூடாது. படைப்பின் ஆற்றொழுக்கான நடை வாசகனைக் கைப்பிடித்து ஒய்யாரமாய் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதனை நான் எதிர்பார்க்கிறேன். அறிந்துகொள்ள வேண்டிய சிறு செய்தி ஒன்றையேனும் சிறுகதைகள் வாசகனுக்குக் கடத்த வேண்டும்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “நாய் வால்”

Your email address will not be published. Required fields are marked *