நாம் வாழும் இந்த பூமியில் பல கோடி உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மனித இனமும் அவற்றில் ஒன்று. இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள் ஒவ்வொன்றிலும் விலங்குகளிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறைகள், விலங்குகளைப் பாதுகாப்பதன் அவசியம், அவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையையும் தனித்துவத்துடனும் புதிய கோணத்திலும் எழுதியுள்ளார் வாண்டு மாமி.
கிளி, ஆந்தை, எருமை, அணில், பூனை, பன்றி, பாம்பு. நாய்க்குட்டி. கொக்கு. ஒணான். குரங்கு. முதலை, யானை, சிட்டுக்குருவி, புறா, பட்டாம் பூச்சி, காக்கை உள்ளிட்ட பல்வேறு பறவைகளும் விலங்குகளும் இந்தக் கதைகளில் வருகின்றன.
இந்தக் கதைகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். புதிய செய்திகள் பலவற்றை இந்தக் கதைகள் வழியே நீங்கள் அறிந்துகொள்வீர்கள். வாருங்கள். விலங்குகளின் உலகத்துக்குள் நாமும் கொஞ்சம் உலா போய் வருவோம்.









Be the first to review “தண்டால் எடுக்கும் ஓணான்”