மதத்தின் பெயரால் ஏற்படும் மூடநம்பிக்கைகளை,
அடிமைத்தன வாழ்வியலை, தனக்கே உரிய நையாண்டியில் பின்னியிருக்கிறார் ஜான் முறே. போலிப் போதர்களின் பொல்லாங்குகளைக் கண்டு வெதும்பிப்போன இயேசுவின் இதயத்திற்கு, இந்தக் கதைகள் சந்தோசத்தைக் கொடுக்கும். எந்த நோக்குக்காக இயேசு தனது கொள்கையையும் வாழ்க்கையும் அர்ப்பணித்தாரோ, அதிலிருந்து முற்றிலும் மாற்றம் பெற்ற சபைகளின் போக்குக்கு, இந்த எழுத்தாளராவது நல்லதொரு எழுத்துச் சாட்டையை முறுக்கியிருக்கிறாரே என்று, பிரபஞ் சத்தின் உள்ளொளி மெய்யாகவே பேருவகை கொள்ளும்.
எழுத்தாளர்மலர்வதி
சிறுபான்மையினர் பள்ளிகளும் கல்லூரிகளும் வியாபாரம் ஆகிவிட்டன. அதனால் சிறுபான்மை மக்களுக்குத்தான் எந்தவித அனுகூலமும் இல்லை. பாவம் என்கிற மனோபாவத்தை ஏழை மக்களின் மனத்தில் புகுத்தி, அவர்களை அடிமைகளாக வைத்திருக்கிற புண்ணியத்தைக் கிறித்தவம்தான் செய்தது என்கிறார் யுத்தப்பிரசங்கி ஜான் முறே. ‘என் பாவமே, என் பாவமே, என் பெரும்பாவமே’ எனக் கிறித்தவர்கள் நெஞ்சில் அடித்துக்கொள்வதை இன்றும் காண முடிகிறது. கள்ளப் போதகர்களை அடையாளம் காண இந்நூல் உங்களுக்கு உதவும்,
திருத்தமிழ்த்தேவனார்









Be the first to review “ஊச்சாளி”