காசநோய் முற்றி வாழ்வின் விளிம்பு வரை சென்று மரணத்தின் நிழலை மிதித்துத் திரும்பியவர் கோமு. மனநிலை தவறியவராகத் தனியறையில் அடை பட்டுக் கிடந்ததை அவர் கடந்துவந்த சுவடுகள் உணர்த்துகின்றன. கோமுவின் அப்பா முத்துப்பொருணன் ஒரு கவிஞர். அவர் சேர்த்து வைத்த புத்தகங்கள் தமக்குக் கிடைத்த மாபெரும் பொக்கி ஷங்கள் என்று கோமு பெருமையாய்ப் பல நேரங்களில் கூறியிருக்கிறார். கோமு மதுப்பிரியராக அறியப்பட்டவர். அதுகுறித்து எவ்வித மன உறுத்தலும் அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை. சாந்தாமணி என்ற கேரக்டரை வைத்து கோமு எழுதிய பல கவிதைகள் இலக்கிய வாசகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவை. வா.மு.கோமகள் என்பது அவரின் இயற்பெயர். அதில் வா என்பது வாய்ப்பாடியைக் குறிப்பது.
நக்கலுக்கும் நையாண்டிகளுக்கும் பெயர் போனவை கோமுவின் படைப்புகள், எள்ளலும் பகடியும் இவர் எழுத்து முழுக்கத் துள்ளி விளையாடும். விளிம்பு நிலைவாழ் மளிதர்களின் ஏக்கங்களை, தவிப்புகளை, பாலியல் வேட்கைகளை, வாழ்க்கைப்பாடுகளைத் துல்லியமாகச் சித்தரிப்பன இவர் எழுத்துகள். வாழ்வின் எழுதப்படாத பகுதிகளையும் பிறர் எழுதவே தயங்குகின்ற விசயங்களையும் எவ்விதச் சமரசமுமின்றி எழுத்தாக்கி இலக்கியச்சூழலில் நிலைபெற்றவர். இந்தத் தொகுதியின் கதைகள் புதிய கருப்பொருள்களுடன் புதிய வடிவத்தில் கலந்துகட்டி இருக்கின்றன.
கவியோவியத்தமிழன்









Be the first to review “போர்கே ஒரு பஞ்சர் ஒட்டுபவர்”