தலித் இலக்கியமும் கறுப்பின இலக்கியமும் வரலாற்று ரீதியாக சில ஒற்றுமைக் கூறுகளைக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டும் அடிப்படையில் வேறு வேறானவை. மராட்டிய மாநிலத்தில் தலித் பயந்தர் விடுதலை இயக்கத்திற்கான தூண்டுகோலாகக் கறுப்பின விடுதலை இயக்கம் இருந்திருக்கிறது என்றாலும் தமிழ்ச் சூழலில் அது அவ்வாறாக இல்லை. காரணம், தமிழ்ச் சூழலுக்கு ஒரு தத்துவார்த்தப் பின்புலம் இருக்கிறது.
சாதியமும் பிரிக்க பெண்ணடிமைத்தனமும் முடியாதவை. இரண்டும் ஒன்றையொன்று பாதுகாக்கும் முள்வேலிகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சாதியத்தின் ஆணிவேரை அசைத்துப் பிடுங்கி எறிந்து மாற்றம் ஏற்படுத்தும் ஆற்றல் பெண்ணுடலுக்கு மட்டுமே இருக்கிறது. சாதி அடையாளமும் தீட்டும் தீண்டாமைக்கு உட்படுத்திய பெண்ணுடலை ஆயுதமாகக் கையாளுகின்றன, பெண்மொழிக் கவிதைகள்.
புதியமாதவி









Be the first to review “புதுக்கவிதை இயக்கமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்”