உரையாடும் வகுப்பறைகள்

120.00

 

வகுப்பறை குறித்துப் புதிய பார்வை வேண்டும்; புதிய வார்த்தைகள் வேண்டும். அதன் பொருட்டு நான் நம்பிக்கையோடு பார்ப்பது. இன்றைய ஆசிரியர்களை. அவர்களிடம் வகுப்பறைகள் இருக்கின்றன; வகுப்பறைகளில் குழந்தைகள் சூழ இருக்கிறார்கள். புரிதலோடும் உறுதிபடவும் பேசக்கூடிய ஆசிரியர்கள் பலரை இன்று நான் சந்திக்கிறேன். அரசுப்பள்ளியின் பெருமையாக விளங்கக்கூடிய ஆசிரியர்களில் ஒருவர் உமா மகேஸ்வரி.
அதிகாரத்தின் அடையாளமான பேச்சில் ஒரு வாய் மட்டும் திறந்திருக்கும். ஒற்றை வாயின் அதிகாரம் தகர்வது விழிப்புணர்வின் அடையாளம். விழிப்புணர்வும் விமர்சனமும் ஜனநாயகத்தின் அடித்தளம். ஜனநாயக வகுப்பறையில் அசையும் தலைகள் இல்லை; திறக்கும் இதயங்கள் மட்டுமே உண்டு. உரையாடும் வகுப்பறைகளே உயிரோட்டமான வகுப்பறைகள்

 – பேராசிரியர் ச.மாடசாமி, கல்வியாளர்

நான்கு சுவர்களுக்கு வெளியே சுழலும் உலகம், மாணவர்களின் பிஞ்சு மனங்களின் எதார்த்தமான சந்தேகங்கள், அறிவியல் விசித்திரங்கள், குடும்பச் சிக்கல்கள் என. சகலத்தையும் பற்றி உரையாடும் வகுப்பறையை உயிர்ப்புமிக்க உரை யாடல்களின் பல்கலைக்கூடமாக மாற்றியிருக் கிறார்.ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் நடந்த உரையாடல்களை அதன் உண்மைத்தன்மை மாறாமல் தரும் ஓர் அழகிய ஆவணத் தொகுப்பாக உமாமகேஸ்வரியின் இந்த நூல் வெளி வந்திருக் கிறது. தமிழ்நாட்டின் கல்விச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையாக அது பெரும் நம்பிக்கை யளிக்கிறது.

சுந்தரபுத்தன், பத்திரிகையாளர்

Category:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “உரையாடும் வகுப்பறைகள்”

Your email address will not be published. Required fields are marked *