Recommended Books
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வேர்களாகும் விழுதுகள்
₹130.00அரசுப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி
ஆசிரியையாகப் பணியாற்றும் முனைவர், ரமாதேவி இரத்தினசாமி, ஐ.நா., யுனெஸ்கோ, யூனிசெஃப், உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் நடத்திய கருத்தரங்கு களில் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், சார்க் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர்,
பெல்ஜியம் உலகக் கல்வி அமைப்பிள் உறுப்பினர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலையமைப் பின் தலைவர், அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பிள் மகளிர் வலையமைப்பின் தேசிய துணைத் தலைவர் என பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கிறார்.
இவருடைய முதல் நூலான ‘கனவுகள் மெய்ப் படட்டும்’ பரந்த வரவேற்பையும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதையும் பெற்றுள்ளது.



















