வெள்ளிக் கொலுசு சப்தம்
துள்ளிவரும் அலையாட்டம்
கள்ளி நீ ஓடையிலே
சொல்லி அழைக்குதடி
சோட்டையாட கேக்குதடி
பள்ளிப் பருவத்திலே
துள்ளியாடி போகயிலே
வெள்ளிக் கொலுசு சப்தம்
வேற்றுமொழி சொல்லலையே
கெஞ்சலடி நாவுன்னை
கொஞ்சவேண்டி நீயென்னை
நஞ்சைத் தின்னவைக்காமல்
நன்னெறியை தந்திடடி
Comments (0)