பகையொன்றுமில்லை
என் வால் பிடித்து வரும்
வஞ்சனைகளை விரட்ட
வேண்டிக்கொண்டிருக்கையில்
எலுமிச்சை தந்து அருள்வாக்களித்த
கடவுளின் சொல்லை நம்பி
புலிக் கோடிட்ட பூனையின் கதையாய்
பரிகாரம் பல செய்து
கதவைத் தட்டும் அதிர்ஷ்ட தேவைதைக்காய்
ஆரத்தித் தட்டுடன்
கால்கடுக்கக் காத்திருந்தால்
ஆசையைக் கொல்லென்று
செவியில் அறைந்து சென்றான்
புத்தன்
சுயம் தெளிந்து
ஆசையைத் தூண்டிய
கடவுளைத் தேடினேன்
எனக்கும் அவருக்குமிடையே
பகையொன்றுமில்லை
ஆனாலும்
தாடையைத் தோளில் இடித்து
முகத்தை வான்முட்டத் தூக்கிவைத்தபடி
பொடிநடையாகச் சென்றவர்
சன்னமாக மின்னிக்கொண்டிருக்கிறார்
பல மில்லியன் ஒளியாண்டுகளுக்கு
அப்பால்
- யாழினி ஸ்ரீ

பானுரேகா
June 2, 2023அற்புதம் யாழினி 🎈💐💜
Manohari Gurunathan
June 2, 2023அருமை! அருமை! வாழ்த்துக்கள் கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரியே
சுவடு மன்சூர்
June 2, 2023யாழினியின் ஆக்கம் அருமை..
வாழ்த்துகள் யாழினி..😍😍😍
Jothi Saran
June 2, 2023Super
அம்மைநாதன்
June 2, 2023அருமை கவிதாயினி 👌
ம. செ. மோகன் ராஜா
June 2, 2023கவிதாயினி யாழினிக்கு வாழ்த்துக்கள் 🌹 🌹 🌹
bharathichandran
June 9, 2023பெரிய பாராட்டுகள். சிறப்பான கவிதை இது.
சுதர்சனம்.E.S
June 15, 2023இருக்கிறாரா இல்லையா என்கிற இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான பதிலாக தெரிகிறது இரண்டாம் பாகம்!😇😇😇
வாழ்த்துகள்!