சூதாட்டம் – விளையாட்டா?

சூதாட்டம் – விளையாட்டா?

சூதாட்ட விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று 50ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். விளையாட்டு என்பது மனத்தையும் உடலையும் பலப்படுத்துவதற்கான, செழுமைப்படுத்துவதற்கான ஒரு செயல்முறை. மற்றவர் திறனைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஊக்கமளிப்பது. தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றிபெற வேண்டும் என்ற பாடத்தைக் கொடுப்பது. தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி என்பதைப் பயிற்றுவிப்பது. இறுதிவரை போராடும் குணத்தைக் கற்றுக் கொடுப்பது. வெற்றியும் தோல்வியும் வாழ்வில் இயல்பானவை என்பதை […]

தேச பக்தக் கலைஞர்

தேச பக்தக் கலைஞர்

மதுரகவி பாஸ்கர தாஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது.கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, விஸ்வநாத தாஸ் என்று அந்தப் பட்டியல் மிக நீளமானது. அந்தப் படடியலில் பிரதானமாக முன்னால் வருபவர் கலைஞர் மதுரகவி பாஸ்கர தாஸ். மதுரகவி பாஸ்கர தாஸ் தமது படைப்பாற்றலால் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அக்கினிப் பொறி தட்டும் தேசிய எழுச்சிப் பாடல்களால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்களிடம் தேசபக்த உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தார்.பிரிட்டிஷ் அரசு நாடகத் […]

இலக்கியம் ஒரு தொழில் அல்ல

இலக்கியம் ஒரு தொழில் அல்ல

புதுமைப்பித்தன் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சமூக விமர்சனத்தையே முனைப்பாகக் கொண்டு எழுதிய படைப்பாளி புதுமைப்பித்தன். கூர்மையான சமூக விமர்சனங்களை, பகடியுடனும் முற்போக்குச் சிந்தனையுடனும் இலக்கியச் சுவை பொலிந்திட எழுதியவர். இவரது இயற்பெயர் சொக்கலிங்கம் விருத்தாச்சலம் (சொ.வி) ஆகும். 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25இல் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்றார். இவரது தந்தை நிலப்பதிவுத் தாசில்தாராகப் பணிபுரிந்து 1918இல் ஓய்வுபெற்ற பிறகு திருநெல்வேலிக்குத் தனது குடும்பத்துடன் […]

தீராக் காதல்

தீராக் காதல்

திரை விமர்சனம் நிறைவேறாத காதலின் நாயகன் கௌதமுக்கு வந்தனாவுடன் திருமணமாகி, ஐந்து வயதில் ஆர்த்தி என்கிற மகள் இருக்கிறாள். நாயகி ஆரண்யா, பிரகாஷ் என்பவனுக்கு மனைவியாக இருக்கிறாள். எதிர்பாராதவிதமாக, கௌதம் – ஆரண்யா சந்திப்பு பாலக்காடு சந்திப்பில் நிகழ்கிறது. நீருபூத்த நெருப்பாக இருந்த பழைய காதல் நினைவுகளை அச்சந்திப்பு விசிறிவிட, மீண்டும் காதல் உணர்வு தீப்பற்றிக்கொள்கிறது. விளைவு என்ன ஆனது என்பதுதான், ஜி.ஆர்.சுரேந்திரநாத்துடன் இணைந்து ரோகின் வெங்கடேசன் எழுதி இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள  ‘தீராக் காதல்’ […]

நித்தியத் தேவை

நித்தியத் தேவை

கவிதைகள் நித்தக் கோடி மூச்சுமுட்டும் நெருக்கடியில்சேமிப்பைத் திரட்டிய களைப்போடுவிதவிதமான காரணங்கள் சுமந்துதிரள்கிறது கூட்டம் எப்போதும் வரம்பெல்லைக்கு உட்படாமலேகையில் வந்து சேர்கிறதுமானம் மறைக்கக் கண்டுபிடிக்கப்பட்டஆடம்பரம் துண்டு விழும் பணத்தைஎதில் சரிக்கட்டுவதென்ற யோசனையானதுமழுப்பித் திணிக்கப்படுகிறதுகட்டைப் பைகளுக்குள் வெளியே வரும்போதுபொறாமையோடு திரும்பிப்பார்க்க வைக்கின்றனதினமொரு புத்தாடையுடுத்தும்ஜவுளிக்கடை பொம்மைகள் தேவை உங்கள் இருப்பை மீறியாராவது ஏங்கினால்உடனே விட்டுக்கொடுத்துவிடுங்கள் கசியும் விழிநீரையாரும் அறியாதபடிதுடைத்துக் கொள்ள சிறிது நேரமேனும்சுதந்திரக் காற்றைச்சுவாசிக்க அருகில் கடக்கும்பேருந்திலிருந்து வரும்எதிர்பாராத சிறு புன்னகையைத்தரிசிக்க வயிற்றுவலியை முகபாவத்தில்பிறரறியாவண்ணம்மறைத்துக்கொள்ள பழைய காதலைபயணப் பொழுதுகளில் அசைபோட்டுஉயிர்த்திருக்க தேவைப்படலாம்அவர்களுக்கு […]

1946 இறுதிச் சுதந்திரப் போர்

1946 இறுதிச் சுதந்திரப் போர்

கடற்படை எழுச்சியின் கதை ஆங்கில மூலம் : பிரமோத் கபூர்தமிழில் : ச.சுப்பாராவ் நூலறிமுகம் ஒரு புரட்சியைத் தயார் செய்யும் கட்சியானது வெகுஜனப் பரப்பில் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல குழுக்களாக இயங்கும். தகவல் தொடர்பு, தபால் தந்தி, தொலைபேசி மற்றும் போக்குவரத்து போன்ற கேந்திரமான துறைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் புரட்சிக்காரர்கள், புரட்சியின்போது துறைகளின் செயல்பாட்டைத் தமது கரங்களில் எடுத்துக்கொள்வார்கள். மக்கள் திரளிலிருந்து உருவாகும் புரட்சிகர இராணுவத்தோடு அரசின் படையும் ஒன்றிணையும் நேரத்தில் ஒரு புரட்சி வெற்றி பெறும். […]

மர(ற)ப்பேனா?

மர(ற)ப்பேனா?

சிறுகதை அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொண்டுதான் பிரசவிக்கிறாள் பெண். பெற்றெடுத்த குழந்தையின் பிஞ்சு முகத்தில் விழித்துப் பார்க்கும் அந்தக் கண்களில்தான் தன் அத்தனை வேதனைகளையும் ஒளித்து வைத்துக்கொண்டு பூரிப்பு அடைக்கிறாள். அக்குழந்தையின் முதல் சிணுங்கலில் அவளின் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை ஒரு ஆண் உணர வேண்டுமென்றால், அவனும் ஒரு படைப்பாளியாக இருந்தால் மட்டுமே முடியும். படைப்பாளர்கள் தங்கள் படைப்பை எழுதி முடித்தபின் ஏற்படும் மனநிலையை ஒத்தது அந்தத் தாயின் மனது. உணர்வுகளுக்கும் மூளையின் எண்ணங்களுக்கும் இடையில் விரல்கள் […]

செவ்வகக் கூண்டு

செவ்வகக் கூண்டு

கவிதை அடைத்து வைக்கத் தோதானசதுர வடிவத் தர்ப்பூசணிகள்தம் இடம் தாண்டிபெட்டியின் மூலைகளைச் சுவாசிக்கஇடம் கேட்டு நச்சரிப்பதில்லை இதய வடிவத் திராட்சைகள்ஏற்கனவே ஏற்றிருந்தகோள வடிவை நீங்கியதில்ஏதொரு பதட்டமுமின்றித்தான்காற்றிலாடுகின்றன குண்டுக் கத்தரிக்காய்கள்புடலங்காயைப் பிரதியெடுத்ததில்குட்டையாகிப் போனதுகல் கட்டும் காய் மென்தோல் தக்காளிகள்வன்முறைக்கு மாறிவெகுநாட்களாயிற்று மெழுகிட்ட ஆப்பிள்ஆறு மாதமாய் அழுகாமலிருப்பது கண்டுகடித்துப் பார்க்கும் ஆசைகடவுளுக்கே வருகிறது ஒட்டுருவாக்கத்தில்குயில் முட்டையெனஆரஞ்சையும் ஏற்கிறதுமாமரம் வயலோரங்களில் குலுங்கிக் கிடந்தநினைவு மறந்துபாக்கெட்டுகளில் தஞ்சமடையத்தயாராகவே இருக்கின்றனஹைபிரிட்டில் சுட்ட பழங்கள் வெட்டி ஒட்டும் கலையில் தேறியசிற்றினம் ஒன்றின்மொத்த வாழ்வையும்செவ்வகத்துக்குள் அடக்கிச்சிரிக்கிறது இயற்கை

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

கவிதை நீள் சன்மார்க்க வெண் தந்தம்வண்ணத்துப் பூச்சிகளுக்குவளைந்துகொடுப்பதைக் கண்டுஉங்கள் எண்ணப் புழுக்களால்துளையிட்டு நுழைய முயல்கிறீர்கள் நெருப்பைத் துளையிடபுழுக்களால் முடியுமோ? சன்மார்க்கத்தைத் துளையிட்டுசனாதன இசை கேட்க விரும்பும்உங்கள் செவிகளால்சத்ய தரும சாலையின்சடசடப்பைத் தாங்க இயலுமா? உங்கள் அகப் பைகுப்பைகளை வாரக்கூடியதுதரும சாலையின் அகப்பைஎளியோரின் தவிப்பைத் தீர்க்கக் கூடியது இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்களெனமீண்டும் சொல்கிறோம் மட்கும் மட்கா என்றஇரண்டுள்ளும் அடங்காதவற்றைமறுசுழற்சி செய்ய முயன்றுசூழலுக்கு ஏன் சீர்கேடு செய்கிறீர்கள்? ஞானசபைக்கு வந்துநாடக சபையின் வசனமானஇந்திரசபை போலிருக்கிறது என்கிறீர்கள்இல்லைஇங்கே கற்பகத் தரு ஏதுமில்லை […]

அவன் என்னைப் போலவே இருப்பான்

அவன் என்னைப் போலவே இருப்பான்

சிறுகதை கம்பீரமான சிவப்புக் கட்டடத்தில் பரபரப்பான திருவல்லிக்கேணியில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் பழைமையான மகப்பேறு மருத்துவமனை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை. இப்போதும் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆனால் கோஷா ஆஸ்பிடல் என்றால் சின்ன குழந்தைகூட வழி சொல்லிவிடும். கிட்டத்தட்ட முந்நூறு வருடங்களுக்கும் மேலாக இது ஓய்வின்றி இயங்கிவருகிறது. அன்றைய மெட்ராஸில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் இங்கே பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இது அரசு இலவச மருத்துவமனையாக இருப்பதால் இன்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழைகளுக்கு […]

பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு

உள்ளங்கையின் இதயரேகையைவிரல்முனைகள் நான்கும் அழுத்தஒலிவாங்கிமுன் விரைப்புடன்பாடிக்கொண்டிருக்கும் தேசியகீதத்தின்ஏதோவொரு ஏகார ஓசையில்வந்துத் தொலைக்கும்கொட்டாவியை எப்படித் தடுப்பது?! சுதேசி கோஷத்துடன்பரிந்துரைக்கப்பட்டதால்251 ரூபாய் செலுத்திவிட்டுக் காத்திருக்கும்எனக்கான செல்போன்தயாராகிவிட்டிருக்குமா?! பேரிடரில் பிழைத்தவர்கள்அளித்த கொடையில்பிழைப்பு நடத்தியவர் யாரோ?! உலகப் பணக்காரர்களின்வரிசைக் கோடுகளைபரோட்டோ சப்ளையர் கோடுகளாக்கிவிளையாடும் கபடிக் குழுவில்எனக்கும் இடம் கிடைக்குமா?! சற்றுப் பொறுங்கள் தேசத்துரோகச் சட்டம் பாயும்முன்ஆளுங்கட்சியில்ஐக்கியமாகிவிடுகிறேன்

முடிந்தது

முடிந்தது

கவிதை நெஞ்சைத் திருகிய வலியைசொல்லக்கூட நேரமில்லாதுநொடியில் முடிந்து போனான்ஒரு தகப்பன்சாமி அழுதழுது வற்றிப்போயிருந்தாள்தாய் அவள் மடிவிட்டு இறங்காதுஅழுகைகளை வேடிக்கை செய்துகொண்டிருந்தனசேய்களிரண்டு அணைந்து போகாதுஅழுகையைப் பற்றவைத்துக்கொண்டேயிருந்ததுகூட்டம் அவனின் மிச்சமெனஇனி இருக்கப்போகிறவர்களுக்காகத்தொழுதுவிட்டு வந்தேன்நான் அப்போதைக்குஅவரவர்க்குமுடிந்தது

இரைச்சல்

இரைச்சல்

சிறுகதை நரசிங்கபுரத்தின் கடைக்கோடி மூலையில் இருந்தது சேவல் வீடு. ஊர் ஒன்றும் பெரிதானது இல்லை. ஆள் இல்லாத வீடுகளையும் கணக்கில் கொண்டால் சரியாக நூற்றி இருபது இருக்கலாம். வேலைக்கு என்றும்  பஞ்சம் பிழைக்க என்றும் ஒற்றைப் பெண் குழந்தைகள் பின்னால் வாழப்போனவர்கள் என்றும் மனிதர்கள் ஊரைப்போல் நிற்காமல் நகர்ந்துவிட்டார்கள். சேவலுக்கும் பந்தங்கள் உண்டு. ஆனால் மனுசன் வாய் சும்மா இருக்காது. இரண்டொரு உறவுகள் நிலைத்திருக்க, பொய்யும் வேசமும் அவசியம் என்பதை வார்த்தை அளவுக்குக்கூட சரி என்று ஏற்றுக்கொள்ளாதவர் […]

யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

இன்று சர்வதேச யோகா தினம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, மதங்கள் ஏதுமற்ற பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகக் கலை, உடல் ஆரோக்கியத்திற்கான கருவியாகப் பயன்பட்டு வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட அந்தக் கலையை, பின்னாட்களில் வேத மதத்தினர் தங்களதாக்கிக்கொண்டதால், பிற மதத்தினர் அக்கலையை மதச்சார்பு கொண்டதாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இறை மறுப்பாளர்களும்கூட தங்கள் உடல்நலம் பேண யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி யோகப் பயிற்சிகள் செய்யும் காட்சிகள் […]

நிர்பந்தங்கள்

நிர்பந்தங்கள்

சிறுகதை கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம். ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் செண்பகத்திற்கு உண்மையாகவே கதவு தட்டப்படுகிறதா அல்லது பிரம்மையா எனும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் யார் இவ்வளவு வேகமாக கதவைத் தட்டுகிறார்கள்..! இன்னும் சற்று நேரத்தில் தர்காவில் வாங்கு சொல்லிவிடுவார்கள். நான்கு மணிக்கு எழுந்து வேலையைத் தொடங்கினால்தான் ஒன்பது மணிக்குள் சமையல் முடித்து மூன்று குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியும். ‘இப்படி மூன்றுமே பெண்ணாக பிறந்துவிட்டதே, ஒரு ஆண்குழந்தை இருந்தால் கணவனின் டீக்கடைக்கு எத்தனை உதவியாக இருக்கும்!? […]

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

MBBS மட்டுமே மருத்துவப் படிப்பு என பொதுப்படையாக எல்லார் மனத்திலும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பல் மருத்துவத்தைத் தேர்வு செய்வோர் சிலர். ஆனால் அதையும் தாண்டி நிறைய துணை மருத்துவப் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதைக் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடமோ பொதுமக்களிடமோ இன்னமும் இல்லை. மருத்துவர்கள்கூட அப்படிப்புகள் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும் புதிதாக உருவாகும் அந்தப் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகளின் காலி இடங்கள் வெகுவாக அளவாக நிரப்பப்படவே இல்லை. […]

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

நேற்றைய பதிவின் தொடர்ச்சி. முந்தைய பதிவை வாசிக்க https://hexamedia.in/p-2023-0619-01/ 2019இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவொரு ஆளையும் ‘பயங்கரவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருக்கும் சட்டங்களிலேயே மிகவும் ஆபத்தான சட்டமாக மாறிவிட்டது. புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன? இந்தச் சட்டங்கள் காங்கிரசு அரசால் கொண்டுவரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாஜக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக்காலத்தில் ஆண்டொன்றுக்கு  13 ஊபா வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு  34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான ஊபா […]

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.

இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act) எனப்படும் ‘சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது. இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டையும் எதிர்த்து முனைப்புடன் இயக்கம் நடத்த வேண்டிய தேவையை பாசிச எதிர்ப்பு மற்றும் […]

தோள்களில் கருவறை சுமப்பவன்

தோள்களில் கருவறை சுமப்பவன்

அந்தப் பாதங்கள் இன்னமும்ஓடிக்கொண்டேதானிருக்கின்றனஅந்தக் கைகள் இன்னமும்என் விரல் பிடித்துதான் நடக்கின்றனஅந்தத் தோள்கள் இப்போதும்எனைத் தோள் சாய்த்து ஆறுதல் தருகின்றன தாடி முடி குத்தும் இடத்திலெல்லாம்பரிசாகக் கிடைக்கும் அவரின் முத்தம்அவர் முத்தம் கொடுக்கும்போதெல்லாம்தாடிமுடி குத்தும் அவருக்கும் கருவறை உண்டுதோள்களில்அவருக்கும் தாய்மை உண்டுமனத்தில் என் பையனுக்குப் பிடிக்கும்என் பொண்ணுக்குப் பிடிக்கும்என்னவளுக்குப் பிடிக்கும்என வாழும் அவர்மறந்தே போகிறார்தனக்கு எது பிடிக்கும் என்று அப்பா எனும் பாறைகள்தான்தனக்குள்ளான மென்மைகளில்பூக்களைப் பிரசவிக்கின்றனஅப்பா எனும் வழிகாட்டிகள்தான்வாழ்க்கைப் பாதையின் முள்ளகற்றிநம் கால்களில் கவசம் பூட்டுகின்றன தந்தையர் தின […]

தற்கொலை முயற்சிக்குப்பின் தலைசிறந்த இலக்கியங்கள்

தற்கொலை முயற்சிக்குப்பின் தலைசிறந்த இலக்கியங்கள்

உலக இலக்கியங்களிடையே மிகுந்த தனித்தன்மையும் பெரும் சிறப்பும் பெற்று விளங்குகின்றன இரஷ்ய, சோவியத் இலக்கியங்கள். ரஷ்ய கலை இலக்கியத் துறையில் மாக்ஸிம் கார்க்கியின் பங்கு மகத்தானது. தனது வாழ்நாளை, கலை இலக்கிய வாழ்வாக வாழ்ந்து காட்டியவர் மாக்ஸிம் கார்க்கி. மேலை நாடுகளில் அன்றைய காலகட்டத்தில் நிலவி நின்ற பழைய இலக்கியக் கோட்பாடுகளிலும் சரி, புதிய இலக்கியக் கோட்பாடுகளிலும் சரி; கார்க்கி முழு அறிவு படைத்தவராக இருந்தார். கார்க்கி தன் பயிற்சியால் தயாரான கலைஞர். இசை, சிற்பம், ஓவியம் […]