பதவி வாங்கும் கருவி
கவிஞர் பொன்மணிதாசன் கவிதை பெட்டியிலே பணமிருக்கும்பேருசொல்ல ஆளிருக்கும்வட்டிக்கென்று சென்றபணம்வளர்ச்சியிலே தானிருக்கும் ஒட்டிசில உறவிருக்கும்உறவினிலும் முரணிருக்கும்அட்டியிலை பெற்றப்பேருஆகாசம் தொட்டிருக்கும்! வீட்டுக்கே சாமிவரும்வீராப்பு பேசவரும்ஓட்டுக்கு பணங்கொடுத்தால்ஓடோடிப் பதவிவரும் மாட்டுக்கும் மரியாதைமறக்காமல் தேடிவரும்நாட்டுக்குள் இவருக்கென்றுநாற்புறமும் புகழுவரும்! வந்தநோய் விரட்டவரிசையிலே மருத்துவரும்அந்தநோய் தீர்ப்பதற்குஆயிரமாய் செவிலியரும் எந்தபணம் கொடுத்தாலும்ஏற்காமல் முதுமைவரும்அந்தநாள் வந்துவிட்டால்அடுத்தநொடி தனிமைவரும்! அறிவார் அறியவரும்அறிவார்ந்த தத்துவத்தைவிரிவாய் சொல்வதென்றால்விடுகதை யந்தவித்தை புரியாமல் ஆடும்களம்பூமியடா நீயறிந்தால்தெரியாமல் வந்தநிலைதெளிவாக்கு மிந்தகதை! பொன்மணிதாசன்