சங்கநாதம் ஓய்ந்தது

சங்கநாதம் ஓய்ந்தது

தோழர் சங்கரய்யா அவர்களின் 99ஆவது பிறந்தநாளையொட்டி, தோழர் 99 என்ற தலைப்பில் சுவடு மின்னிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை, இன்று அவரின் மறைவையொட்டி மீள்பதிவு செய்கிறோம். தோழர் சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம். தோழர் 99 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தோழர்.சங்கரய்யாவின் மூதாதையர்கள். இவரது முன்னோர்கள் பரம்பரையாக கிராம அதிகாரிகளாக இருந்தவர்கள். இவரது தந்தை நரசிம்மலு கிராம அதிகாரியாக வேலை செய்ய விருப்பமில்லாமல் பொறியாளர் பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் ஜப்பான் கம்பெனியில் மெக்கானிக்கல் […]

ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

கட்டுரை: அக்ரி பரத்வாஜ் யூரல் மலையும் ஆறும் என அமைந்துள்ள பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குடியேறிய இனம் ‘ஸ்லாவ்’. பின்னர் ‘ரோஸ்’ அல்லது ‘ரூஸ்’ எனப்பட்டவர்கள் படையெடுத்தனர். இவ்விரு இனத்தவரும் கலந்து தோன்றிய இனமான ரஷ்யர்கள் வாழ்ந்த பகுதிதான் ரஷ்யா எனப்பட்டது. நவ்கோரட்-டைத் தலைநகராகக்கொண்டு ரூஸ் தலைவர் ரூரிக் என்பவர் ஸ்லாவ் இனத்தவரின் வேண்டுகோளின்படி ஆண்டு வந்தார். இவரது ஆதரவாளர்கள் ரூஸ் எனப்பட்டனர். இவர்களால் வரி வசூலிக்க நியமிக்கப்பட்டவன்தான் இவான். மூன்றாம் இவான் (ஐவான்) பைசாண்டையின் […]

தலைகீழாகத்தான் குதிப்பேன்

தலைகீழாகத்தான் குதிப்பேன்

அரசியல் நையாண்டி: ஆர்னிகா நாசர் உதயசங்கர் ஸ்கூட்டி பெப்பை ஓட்டியபடி அந்த குறுக்குச் சந்துக்குள் புகுந்தான். எதிரில் ஒரு இ-பைக் மோதுவது போல வந்து சறுக்கி நின்றது. இ-பைக்கில் அமர்ந்திருந்த சீனிவாசன் இரைந்தான். “உனக்கு என்னோட மோதுரதே பழக்கமாகிப் போச்சு உதயா!” மோத வந்தது நீயா நானா?” இருவரும் ஓரமாய் ஒதுங்கி அவரவர் வாகனங்களை ஸ்டாண்டிட்டனர். “அப்புறம்?” “ரொம்ப சந்தோஷமா இருக்க போல சீனி…” “ஹிஹி… ஆமா… எங்க மோதானியின் சாதனைகளை நினைச்சா எனக்கே மார்பளவு 65 […]

சாபத்தில் பிறந்தவர்கள்

சாபத்தில் பிறந்தவர்கள்

கவிதை: செ. புனித ஜோதி நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர் நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து கொண்டிருக்கிறோம்உடலை நாங்கள்கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்உண்பதற்கும் உடுப்பதற்கும்உறங்குவதற்கும் இடமின்றிபரந்த தேசத்தில் தினம் தினம்அலைக்கழிக்கப்படுகின்றோம்அலைகளாய் நாங்கள்காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்மூச்சுவிடக்கூடஉரிமையற்று இருக்கின்றோம் அத்தனையும்மனிதமற்ற மனங்களின்வன்மத்தில் விளைந்தவிளைச்சல்கள் அவர்களின் ரொட்டித் துண்டுகளில்பழக்கூழ் போலத் தடவித்தடவிஉண்டு மகிழ்கின்றனர்எங்கள் குருதியை காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்அரசியல் ஆதிக்கத்தில்திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்செத்த பிணமாய் ஏனெனில் நாங்கள்திரிசங்கு நேரத்தில் பிறந்தஅகதிகள்

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் காந்தி பிறந்ததினத்தை நேற்று நாடே பெருமையுடன் நினைவு கூர்ந்தது. அவரின் அறவழிப் போராட்டங்கள் குறித்து சிலாகித்துப் பேசப்பட்டது. தமிழ்நாட்டில், காந்தி காட்டிய அறவழியில் ஆசிரியர்கள் போராட்டக் களம் கண்டு வருகின்றனர். காந்தி நடத்திய அறப்போராட்டம் ஆங்கிலேயரின் மனத்தையே மாற்றி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டது. ஆனால் ஆசிரியர்களது அறப் போராட்டம் நமது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழர்களின் நெஞ்சையே தொட மறுக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நடக்கும் பல நிகழ்வுகளைப் பட்டியலிட்டால், […]

நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்

நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்

பகத்சிங் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பகத்சிங் இருந்த அறையில் ஏகப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருந்தன. இவையெல்லாம் ஜெயதேவ் மூலமாக வந்த புத்தகங்கள். கொஞ்ச நாட்களாகவே அந்தச் சிறையறை ஒரு நூலகம்போல் மாறியிருந்தது. வரவழைக்கப்பட்டப் புத்தகங்களில் ‘வரலாற்றுப் பொருள் முதல்வாதம்’ என்ற நூல் இல்லை. பஞ்சாப் பொது நூலகத்திலிருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற நூலைப் பெற்று அனுப்பிவைக்குமாறு ஜெயதேவுக்கு ஒரு கடிதம் எழுதினார் தணியாத அறிவு தாகம் கொண்டிருந்த பகத்சிங். ‘ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் […]

நோட்டாவை நோக்கி ஆசிரியர்கள்?! 

நோட்டாவை நோக்கி ஆசிரியர்கள்?! 

விடியலை நம்பி இருளில் வீழ்ந்தோம் – குமுறும் ஆசிரியர்கள் பொதுவாகவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு எப்போதும் வாரி வழங்குவதாக ஒரு பேச்சு இங்குண்டு. அதிலும் குறிப்பாக, ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளைக் கொட்டிக் கொடுப்பதாகப் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு கருத்து ஆழ வேரூன்றி இருப்பதை மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகவே, அஇஅதிமுக தலைமை உள்ளிட்ட எவருக்கும் ஆசிரியர்கள் மீது எப்போதும் முழுதாக நம்பிக்கை இருப்பதில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் […]

மக்களின் சொர்க்கம்; அரசின் தலைவலி

மக்களின் சொர்க்கம்; அரசின் தலைவலி

முகப்புக் கட்டுரை நான் பணியில் இருந்தபோது சக பெண் தோழர்கள் வெளிநாடு போவதற்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்பார்கள். அது ஒரு பெரிய நடைமுறை. எல்லா மட்டங்களுக்கும் சென்று, காரண காரியங்கள் ஆராயப்பட்டு, மூன்று மாதம் கேட்டால் இரண்டு மாதம் விடுமுறை தருவார்கள். நாங்கள் சங்கத்தின் மூலம் போய்ப் பேசி, மூன்று மாதங்கள் வாங்கித் தருவோம். இதில் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நிறைய பேர் கனடாவிற்குச் செல்ல விண்ணப்பிப்பார்கள். இதன் பின்னால் உள்ள ரகசியம், பணி ஒய்வு […]

கிழவனிடம் காதல் கொண்டேன்

கிழவனிடம் காதல் கொண்டேன்

புதிதாக ஒன்றையும் சொல்லிவிடப் போவதில்லை இக்கட்டுரை. எண்ணற்ற ஆளுமைகள் சொல்லியிருப்பவற்றைக் காட்டிலும் அரிதாக எதனையும் அள்ளித் தந்துவிடப் போவதில்லை நான். நூற்றாண்டைத் தாண்டியும் ஒடுக்குமுறையாளர்களைக் கனவிலும் கிலி கொள்ள வைக்கும் அக்கிழவனைப் பற்றிப் பேச என்னிடம் என்ன மிச்சமிருக்கிறது?! ஆனாலும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்கள் எண்ணற்றோர். அவர்களை நேசிக்கும் அதே வேளையில், எனது அதீத நேசிப்பென்பது இவ்வுலகில் இருவர் மீது மட்டுமே. அதிலொருவர், புரட்சியாளன் சேகுவேரா; மற்றொருவர், கலகக்காரன் ஈ.வே.ராமசாமி. தனது இனம் ஒடுக்கப்பட்டது, […]

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் விடிந்த காலைப்பொழுதேபெரியார் கைபிடித்த கதிரொளியேசாதியக் கைமுறித்த தமிழ்வேலேதமிழ்க்கொடி யேற்றிய அறிஞனே நாவிரித்தால் தமிழும் ஆங்கிலமும்காவிரியாய்க் கரைபுரளும் நானிலமேபாவிரித்துப் பரணிபாடும் நின்புகழ்நீவிரித்த விரல்வழி தேடியோடும் ஒன்றேகுலம் ஒன்றேதேவன் – உன்வாக்குநன்றேகுலம் நன்மைசெயல் – உன்வாழ்வுகுன்றேயுயர் குணமேகொளல் -உன்வாய்மைநன்றேதமிழ் கொண்டதேவன் – நீயேஅண்ணா இறைவன் எங்குமில்லை என்றாய்இருப்பினுமவன் ஏழை சிரிப்பிலென்றாய்சாதிசமயம் மூடங்க ளென்றாய்சாதிப்போம் வாவாதம்பி யென்றாய் நீதிதேவனையே நீயாரென்று கேட்டாய்நாடாளுமன்ற நர்த்தனம் புரிந்தாய்முதலமைச்சாய் ஆளவும் செய்தாய்முடியாச்சோகம் ஆழ்த்தியே சென்றாய் நீயிருந்த காலம் பரிதியும் சிரித்ததுநீயில்லாக் காலம் புழுதியாகிப் போனதுநீயிருந்த […]

அடித்தட்டு மக்களின் அரசியல் ஆளுமை

அடித்தட்டு மக்களின் அரசியல் ஆளுமை

அண்ணா பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சின்ன காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, போற்றத்தக்க ஆட்சியாளராக, அறிவார்ந்த கருத்துக் கரூவூலமாகத் திகழ்ந்தவர் என்று, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை அன்போடும் வாஞ்சையோடும் நினைவு கூர்கிறது. அவரிடமிருந்து பொங்கிப் பிரவாகம் எடுத்த தமிழ் ஊற்றுதான் அரசியல் வானில் விஸ்வரூபமாக எழுந்து நின்று, பேரறிஞர் அண்ணா என்று அனைவர் மனத்திலும் பதிய வைப்பதற்குக் காரணமாக இருந்தது. சொல் புதிது, பொருள் புதிது எனத் தமிழ் மொழியின் புதிய அடையாளமாகத் திகழ்ந்தார். மேடைத் தமிழுக்கு […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 13

திருப்பூர் எனும் திருப்புமுனை – 13

மெத்தனப் போக்கில் மத்திய மாநில அரசுகள் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை உள்ளடக்கியது. பல்லடம் தாலூகாவின் கீழ் ஒரு கிராமமாக அறியப்பட்ட திருப்பூர், நாளது தேதியில் ஒரு மாவட்டத்தின் தலைநகராக, மாநகராட்சியாக உயர்ந்துள்ளதென்றால் அதற்கான முக்கியக் காரணம் பின்னலாடைத் தொழில் வளர்ச்சி. மாநில அரசிற்கும் சரி, மத்திய அரசிற்கும் சரி, வரி வருவாயினை ஈட்டித் தரும் முதன்மை மாவட்டங்களில் ஒன்று திருப்பூர். கூடுதலாக, அந்நியச் செலாவணியைக் கணிசமாக ஈட்டித் தருவதிலும் திருப்பூர் […]

ஜி 20 மாநாடா? ஜி-இன் துதிபாடும் மாநாடா?

ஜி 20 மாநாடா? ஜி-இன் துதிபாடும் மாநாடா?

ஜி 20 நாடுகள் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு உறுப்பு நாட்டுக்குத் தலைமைப் பொறுப்பு அளிப்பது மரபு. அந்த அடிப்படையிலேயே இந்தியாவிற்கு இந்த ஆண்டில் மாநாட்டை நடத்தும் வாய்ப்புத் தரப்பட்டது. அது வாய்ப்பு என்பதைக் காட்டிலும் பொறுப்பு என்பதே சரியானதாக இருக்கும். ஆனால் பாஜகவினர், மோடி அரசின் விளம்பரத் தம்பட்டத்திற்கு இந்த மாநாட்டைக் கூச்சமின்றிப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மாநாடு நடக்கும் அரங்கத்திற்கு வெளியே பல மைல் தூரத்திற்கு மோடியின் ‘கட் அவுட்கள்’ வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழை மக்களின் குடியிருப்புகள் […]

வந்தே பாரத் வடை 

வந்தே பாரத் வடை 

நகைச்சுவைச் சிறுகதை குளித்து முடித்து வெளியே வந்தார் சின்னமலை. வயது 42. உயரம் 170 செமீ, மார்பளவு 40 அங்குலம். திராவிட நிறம், தூக்கி வாரப்பட்ட சொற்பக் கேசம், சகுனி கண்கள், மீசை இல்லாத சுயசவர முகம். பூஜையறைக்கு வந்தார். அனுமன் விக்கிரகம் முன் வந்து நின்று, அனுமன் சாலீஸா மந்திரத்தை ஓத ஆரம்பித்தார். “ஜெய ஹனுமானே! ஞானக் குணக்கடலே!உலகத்தின் ஒளியே வானரர் கோனே!ராம தூதனே! ஆற்றலின் வடிவமே!அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே…” தொடர்ந்து ஓதி முடித்தவுடன் […]

சந்திராயன் பயணத்தில்

சந்திராயன் பயணத்தில்

கவிதை கடக்கும் தொலைவுநீண்டதாக இருந்தாலும்சுங்கச் சாவடியில்லாததுதமது பயணத்தில்சுகமாக இருந்ததாய்சந்திராயன் சொன்னான் பள்ளம் மேடானசாலைகள்கூடநிலாவை அடையும் வரைஎங்கும் பார்க்கவில்லையெனஅவன் சொன்னதுஅதிசயமாய் இருந்தது சிறுநீர் கழிக்கஐந்து ரூபாய் வசூலிக்கும்சாலையோர உணவகங்கள்ஒன்றுகூடக் காணவில்லை எனசந்திராயன் சொன்னதுசரித்திர முக்கியத்துவமானது வழியில் காசு வாங்கஒரு கடவுள் கூடஉண்டியல் வைத்திருக்கவில்லைஎனச் சொன்னதுநம்ப முடியாத ஆச்சரியம் அனைத்து ஆவணங்களும்சரியாக இருந்தும்போக்குவரத்து விதி மீறலெனப்போலீஸ் பிடிக்காததைசந்திராயன் சொல்லிச்சிரித்தான் செல்கிற வழிகளில்விண்வெளி இடங்களைவீட்டு மனைகளாக்கிவிலை பேசி விற்கரியல் எஸ்டேட்நிறுவனங்களின்அறிவிப்புப் பலகையைப்பார்க்காததுசந்திராயனுக்கு ஷாக் உற்சாக பானம்அருந்திவிட்டுஉருண்டு புரண்டு கிடக்கும்எந்தப் பரமாத்மாக்களையும்தான் செல்லும் […]

பொது சிவில் சட்டம்தேவையா?

பொது சிவில் சட்டம்தேவையா?

ஆய்வரங்க நிகழ்வுத் தொகுப்பு சுவடு இணைய இதழ் மற்றும் இந்திய சமூக நீதி ஊடக மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பொது சிவில் சட்டம் தேவையா?’ என்ற ஆய்வரங்கம், கடந்த ஆகஸ்டு 12, சனிக்கிழமையன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள MEET அரங்கத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியர் அரிபரந்தாமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், சமூக சமய ஆய்வாளர் ஹமீது ஹுசைன் ஆகியோர் இந்த […]

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் திட்டத்துக்கு நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பலரும் தெரிவித்து வருகின்றனர். கோதுமை ரவா உப்புமாவுடன் காய்கறி, பருப்பு சாம்பார்; சேமியா காய்கறிக் கிச்சடி, வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், சோள காய்கறிக் கிச்சடி, ரவா கேசரி என, திங்கள் முதல் வெள்ளி வரை […]

அங்கேயே..

அங்கேயே..

கவிதை இரங்கற்பா எழுதிக்கொண்டிருக்கிறேன்விரைவில் வந்துவிடும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் மலர் மாலைகள்தயார் செய்ய நேரமாகலாம்வேம்பு நிச்சயம் இருக்கும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஆயிரம் முதலைகள்உடனே ஒப்புக்கொண்டுள்ளனபோட்டியில் கலந்துகொள்ளஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் வண்ணக் கோலாட்டம்மிதமாகத் தோன்றலாம்பறை அடித்து விளையாடகுத்தாட்டம் வரும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தள்ளிப் போகுமோகவலை வேண்டவே வேண்டாம்முகச் சவரமும் உடன் செய்வார்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தண்ணீர்ப் பானைக்காகத்தேடி அலைய வேண்டாம்தோளை வலுவாக வைத்துஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் என்ன!வாய்க்கரிசிக்கும் வழியில்லையா? அடடா!சரி, அதையும் நாங்களே தருகிறோம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் முறையாகச் செய்ய […]

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச் செல்வதையே இலக்காகக் கொண்ட, காலத்தால் உருவாக்கப்பட்டவர்தான் தோழர் ஜீவா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தோழர் ஜீவானந்தம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907 ஆகஸ்ட் 21ஆம் தேதி பிறந்தார் ஜீவா. ஜீவாவின் பெற்றோர் பட்டம் பிள்ளையும் உமையம்மையும் அன்றைய ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்கள். பொருளாதார வசதியில் […]

அரச விருந்தாளி

அரச விருந்தாளி

நகைச்சுவைச் சிறுகதை முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன், திருமணமானவன், மனைவி அவனை விட்டு விலகி நான்கு வருடங்கள் ஆகின்றன. மீன் அங்காடியில் மீன்களை வெட்டிச் சுத்தம்செய்து தரும் பணியைச் செய்து வந்தான். குரூர நகைச்சுவை உணர்வு கொண்டவன். மாஜிஸ்டிரேட், பழைய திரைப்பட நடிகர் உசிலைமணியின் சாயலில் இருந்தார். அரசு வழக்கறிஞர் எழுந்து, மெதுவாக நடந்து ராக்கப்பனிடம் வந்தார். “நீதானே […]