மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைக்கின்றன! முத்தரசன் ஆவேசம்!

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைக்கின்றன! முத்தரசன் ஆவேசம்!

தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு செயல்பாடுகள் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை அறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனைச் சந்தித்தோம்… “ கொரோனா கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் முக்கியமாக தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள்  எப்படி இருக்கிறது?” “கட்சியில் பதவிப் போட்டி, ஆட்சியில் அதிகாரப் போட்டியும் தானென்ற ஆளுமையை முன்னிலைப் படுத்தவேண்டும் என்பதிலும் ஒட்டுமொத்த ஊடகங்களும் தங்களை முன்னிறுத்தியே செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் மூத்த அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். தமிழக அரசியலே […]

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை நோயை பற்றிய முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி…. மஞ்சள் காமாலை நோயானது சித்த மருத்து வத்தில் சிறப்பாக குணப்படுத்த படுகிறது. ஆனால் அதில் பல வகைகள் உள்ளன. அதில் குறிபிட்ட ஒரு வகையை மட்டும் தான் சித்த மருத்துவத்தில் குணப்படுத்த இயலும். இப்போது எத்தனை வகையான மஞ்சள் காமாலை இருக்கிறது என காண்போம்.  1.ஹீமோலைட்டிக் மஞ்சள் காமாலை இவ்வகை மஞ்சள் காமாலையானது , முன்பு கூறியது போல் இரத்த சிவப்பணுக்களின் வாழ்க்கை காலமான 120 நாட்களுக்கு […]

பிழைத்துச் செத்தவன்

பிழைத்துச் செத்தவன்

அண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என்னய்யனே……..’ என செல்போன் ஒலித்தது வெளிவாசலில்  உட்கார்ந்திருந்த எனக்கு சன்னமாய்க் கேட்டது. எழுந்து போய்ப் பார்த்தேன். ஊரிலிருந்து மாதவன் அழைத்திருந்தான். “சொல்லுடா மாதவா” சுவாரஸ்யமின்றிக் கேட்டேன். “திருநா செத்துட்டான்டா….  உடனே கிளம்பி வா” பதற்றத்துடன் ஒலித்தது மாதவன் குரல் “ஏன்டா…?? என்னாச்சு?” “நேர்ல வா பேசிக்கலாம்”  போனைத் துண்டித்துவிட்டான். உடனே பேண்டை மாட்டிக் கொண்டு பஸ்ஸ்டாண்ட் கிளம்பி விட்டேன். […]

காற்றே…

காற்றே…

உருவம் இன்றி அலைந்து திரியும்என்னுயிர் காற்றே …நீ …..விரைந்திடும் வழியில்புரிந்திடும் திருவிளையாடல் கோடி பார்வை இன்றிஎன் திசை அறிந்துபாய்ந்து வருகிறாய்பாசம் கொண்ட தலைவன் போலபாசாங்கு செய்கிறாய்…. கால்கள் இன்றிகடக்கும் பாதையில்காவல் நிற்கிறாய்காதல் கொண்ட தலைவனாய்கவிதை சொல்கிறாய்…… கைகள் இன்றிகன்னம் வைத்து களவு செய்கிறாய்கள்ளம் கொண்ட காதலனின்கைவிரல் போலகளைந்த என் ஆடையினில்வேவு பார்க்கிறாய்……. ஆவல் கொண்டுஉன்னைப் பற்ற கைகள் நீட்டினேன்தேடல் கண்டு மகிழமறைந்து அரூபமாகிறாய் ஊடல் கொள்ள எண்ணிஎன்னை உரசிப் பார்க்கிறாய்நாடல் கொண்டநங்கை மனம் நயந்து போகாமல்பாடல் கொள்ளும் […]

வீடு இழத்தல்

பழைய வீட்டின் லட்சுமிமூலையில் தகரஸ்டாண்டில் வைத்து தினந்தோறும் துடைத்து சூடம் காட்டி வெள்ளிக் கிழமைகளில் பூச்சரம் சார்த்தி புதுவீடுகட்ட பூமி பூசை நாளில் என்னையே வணங்கி நின்றாய். வீட்டை இடிக்கையில் எங்கள் சாமியென்று வேலியோரம் பத்திரப்படுத்தினாய். வேலிமாற்றி மதில்சுவராகும்போது தெருமுக்கில் விநாயகர் மேடையோரம் இடம் பெயர்த்தாய். வீடுகட்டி முடிந்து புரோகிதன் பட்டியலிட்ட புதுச்சாமிப் படமொன்றுடன் புதுவீட்டில் நீ குடியேற கைதொழ நாதியற்றுப்போன சாமியானேன் நான் தெருமுனையில். உனக்கென்ன ராசா … புது வீடு புதுச் சாமி. வீடிழந்தவன் […]

இருந்தும் இல்லாதது…

இருந்தும் இல்லாதது…

வட்டிக்கடையில் உப்புப்படிந்தகட்டுக்கட்டான பணத்தை‘எண்ண’ முடியாமல் எண்ணிகஜானாவில் நிரப்பும்ஏழை கணக்கப்பிள்ளை! ஒவ்வொரு ஞாயிறும்அறுநூறு கிலோ கறியைஅறுத்து அளந்துபோட்டுவிட்டுஒரு துண்டு இறைச்சிக்காகஒரு திருமண அழைப்பின்தேதியினை அன்றாடம்மனக் காலண்டரில் கிழிக்கும்கசாப்புக்கடைச் சிப்பந்தி! வண்ணங்களின் குழைவுகளில்தோய்ந்த தூரிகையைப்போல்கனவு ஓவியங்களைத் தீட்டிகலர் கலர் பொம்மைகளோடுபுழுங்கிப் பொறாமையில் தவிக்கும்புடவைக் கடை பெண்! மூக்கைத் துளைக்கும் மசாலா –நாக்கைத் தூண்டும் பதார்த்தம்..வயிற்றைக் கொல்லும் எதார்த்தம்!எஞ்சிய எச்சில் தட்டுகளைஎப்போதும் ஏந்திச் செல்லும்புலனடக்கம் அறியாபுலம் பெயர்ந்த சிறுபிள்ளை! இவர்கள் எல்லோரை விடவும்இரவு வயிற்றுக்கு ஒன்றுமில்லாமல்முழங்கையைத் தலையணையாக்கிமுடங்கி தூங்கப்போகும் அந்தமூடைத் தூக்கும் தொழிலாளிஒருவகையில் […]

ஜார்ஜ் ஃப்ளாய்ட்டு நாள்

ஜார்ஜ் ஃப்ளாய்ட்டு நாள்

அமெரிக்க வரலாற்றின் முக்கியத் திருப்பம்! அமெரிக்கா சற்றே அடங்கி இருக்கிறது. பற்றி எரிந்த கூக்குரல்கள் சற்றே ஆசுவாசம் அடைந்திருக்கின்றன. மக்களுக்குள் ஓர் ஒழுங்கு வந்திருக்கிறது. போராட்டங்களில் தற்போது கூர் நோக்கு வந்திருக்கிறது. அமைதியாக, ஆனால் வலிமையாக மக்கள் போராடிக் கொண்டிருக் கிறார்கள்.. ஒரு மாபெரும் மாற்றத்துக்கான துவக்கமாக மக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே கடந்த மே 25 ம் தேதி துவங்கியது. யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், ஒரு வேளை செய்தியைக் கவனிக்கத் தவறியவர்களுக்காக […]

இன்றைய சூழலில் கல்வி

இன்றைய சூழலில் கல்வி

இந்தியாவின் இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான துயரத்தின் ஒற்றை அடிப்படையாகக் கல்வியின்மை இருக்கிறது – தாகூர் அவரது கூற்று 150 வருடங்கள் கடந்து இன்றும் இந்தியாவைப் பல வழிகளில் அழுத்திக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. சமூக முன்னேற்றம்  என்பது கல்வியை அடிப்படையாகக் கொண்டே நிகழும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஒரு மனிதன் இந்த சமூகத்தில் தனக்கான  எல்லாவித சுதந்திரத்தையும் புரிந்து கொள்ள உதவுவது கல்வி தான். மடை திறந்த அறிவை வழங்குவதும் கூட […]

தனித்து விடப்படுகிறதா தமிழகம்?

தனித்து விடப்படுகிறதா தமிழகம்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு முழுவதுமாக 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் கொரோனா தடுப்புக்கான மாநில அரசின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசிடமிருந்து தமிழகம் கோரிய நிதி இதுவரை கிடைத்தபாடில்லை. ஆனால் பொருளாதார மந்தத்தால் இந்திய மாநிலங்கள் அனுபவித்து வரும் நிதி நெருக்கடிகளைக் கண்டு கொள்ளாத மாதிரி கடந்து செல்கிறது மத்திய […]

திரு தாய் அவளே…

திரு தாய் அவளே…

இலக்கியங்களில் எத்தனையோ தமிழ்ச் சமூகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் மனித சமூகங்களின் ஆண் பெண் எனும் இரு பிரிவுகளிலும் சேராமல் வாழ்ந்து வருகின்ற திருநங்கைகளுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் “திரு தாய் அவளே…” எனும் குறும்படம் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. போராட்டமே வாழ்க்கையெனப் பயணிக்கும் திருநங்கைகளுக்கு எதிரான கௌரவக் கொலைகளும், பாலியல் வன்முறைகளும் நிகழ்ந்து வந்தாலும் சமகால வாழ்வியலில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும், உணர்வுகளின் அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சிறப்பாகப் பேசுகிறது இந்தக் குறும்படம். தற்போதைய சூழலில் தங்களுக்கென […]

ஊருக்கு ஊரு பிழை! குளறுபடியான அரசின் திருத்தம்!

ஊருக்கு ஊரு பிழை! குளறுபடியான அரசின் திருத்தம்!

தமிழக அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ள ஊர்ப்பெயர் களின் திருத்தத்தில் காணப்படும் ஒலிக்குறிப்புக் குழப்பங்கள்! தமிழக அரசு சமீபத்தில் செய்துமுடித்துள்ள சீக்ரெட் ஆபரேசன் தான் அனைவராலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கொரோனாவை விரட்டியடிக்க எதாவது திட்டம் தீட்டிட்டாங்களா என்றெல்லாம் நப்பாசைகொள்ள வேண்டாம். தமிழகத்திலுள்ள ஊர்ப்பெயர்கள் பலவற்றின் ஆங்கில மொழியாக்கத்தில் கொண்டுவந்துள்ள திருத்தத்தைத்தான் குறிப்பிடுகிறேன். எழும்பூர் என்பதை எக்மோர் என்று குறிப்பிடுவதையும், திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன் என்று குறிப்பிடுவதையும், தூத்துக் குடியை டூட்டிகொரின் என்று குறிப்பிடுவதையும் மாற்ற வேண்டுமெனப் பலகாலமாக பேசப்பட்டு வந்ததுதான். […]

இன்னும் எத்தனை லாக் டவுனோ!

இன்னும் எத்தனை லாக் டவுனோ!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் கடந்த மூன்று மாதங்களைக் காட்டிலும் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும் சமூகப்பரவல் இல்லை என்ற அதே பழைய பல்லவியை அரசு இன்னமும் பாடிக் கொண்டுள்ளது. பெரம்பூர் இரயில்வே மருத்துவமனை, ஆவடி ஐ.சி.எஃப். மருத்துவ மனைகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் அரசின் பட்டியலில் வராதது, சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் அரசின் செயல்பாட்டில் உள்ள குளறுபடி களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தற்போது சென்னை மற்றும் சுற்றுபுற […]

என்ன நடக்கிறது எல்லையில்?

என்ன நடக்கிறது எல்லையில்?

இசுலாமிய வெறுப்பை மக்களிடம் வளர்ப்பதற்காக, பாகிஸ்தானை மட்டுமே இந்தியாவின் எதிரியாகச்  சித்தரித்து வந்த மோடி தலைமையிலான அரசு, இந்திய ஒன்றியத்தின் தென்கோடி முனைக்கு கூப்பிடு தொலைவில் உள்ள இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களிடமிருந்து சிங்கள அரசு அபகரித்த பகுதியில் தனது இருப்பைச் சீனா நிலைநிறுத்திய போதும், தமிழகத் தலைவர்கள் பலரும் எச்சரித்தபோதும்கூட சீனா குறித்து மோடி அரசு கவலை கொள்ளவில்லை. மாறாக  சீன அதிபரை மாமல்லபுரம் அழைத்து வந்து குலாவியது. ஆனால் தற்போது லடாக் பகுதியில் கடந்த […]