மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை நோயை பற்றிய முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி….
மஞ்சள் காமாலை நோயானது சித்த மருத்து வத்தில் சிறப்பாக குணப்படுத்த படுகிறது. ஆனால் அதில் பல வகைகள் உள்ளன. அதில் குறிபிட்ட ஒரு வகையை மட்டும் தான் சித்த மருத்துவத்தில் குணப்படுத்த இயலும்.
இப்போது எத்தனை வகையான மஞ்சள் காமாலை இருக்கிறது என காண்போம்.
1.ஹீமோலைட்டிக் மஞ்சள் காமாலை
இவ்வகை மஞ்சள் காமாலையானது , முன்பு கூறியது போல் இரத்த சிவப்பணுக்களின் வாழ்க்கை காலமான 120 நாட்களுக்கு முன்பே உடைய ஆரம்பிப்பதால் வருகிறது. அதிக அளவு இரத்த சிவப்பணுக்கள் உடைவதால் அதிகளவு இணையமற்ற பிலிரூபின்கள் உருவாகின்றன. இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும்.
இதன் அறிகுறிகள்:
வயிற்று வலி
அடர்த்தியான ப்ரெளன் கலர் மூலம்
அடர்த்தியான நிறம் கொண்ட சிறுநீர்
பொதுவான உடல் சோர்வு
2.Hepatocellular jaundice
அதாவது, கல்லீரலினால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலை ஆனது கல்லீரலில் உள்ள நோய் மற்றும் குறைபாடு களினால் ஏற்படும். ஹெபாடிட்டிஸ் எனப்படும் கல்லீரல் தொற்று, சிர்ஹோசிஸ் எனப்படும் கல்லீரல் நோய் போன்ற வற்றால் கல்லீரலின் செயல்பாடு குறைந்து விடுகிறது.
இதன் காரணமாக இணையமற்ற பிலீருபின் இணையான பிலீருபின் ஆவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் இதன் அளவு அதிகரித்து மஞ்சள் காமாலையை கொடுக்கிறது.
இதன் அறிகுறிகள்:
1. அடர் நிறம் கொண்ட சிறுநீர்.
2. #வெளுமை நிற மலம்
3. உடல் சோர்வு
4.வயிற்று வலி
3.Obstructive மஞ்சள் காமாலை
இந்த வகை மஞ்சள் காமாலை நோயானது, பித்தப்பையில் ஏற்படும், பித்த கல்லினால் உண்டாகும் அமைப்பினால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.
இதன் அறிகுறிகள் :
1. மஞ்சள் நிற உடல்
2. அடர்த்தியான நிறம் கொண்ட சிறுநீர்
3. வெளுமை நிற மலம்
4. உடல்அரிப்பு
5. காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி, வயிற்று வலி
தொடரும்…
Comments (0)