வீடு இழத்தல்

பழைய வீட்டின்

லட்சுமிமூலையில்

தகரஸ்டாண்டில் வைத்து

தினந்தோறும் துடைத்து

சூடம் காட்டி

வெள்ளிக் கிழமைகளில்

பூச்சரம் சார்த்தி

புதுவீடுகட்ட

பூமி பூசை நாளில்

என்னையே வணங்கி நின்றாய்.

வீட்டை இடிக்கையில்

எங்கள் சாமியென்று

வேலியோரம்

பத்திரப்படுத்தினாய்.

வேலிமாற்றி

மதில்சுவராகும்போது

தெருமுக்கில்

விநாயகர் மேடையோரம்

இடம் பெயர்த்தாய்.

வீடுகட்டி முடிந்து

புரோகிதன் பட்டியலிட்ட

புதுச்சாமிப் படமொன்றுடன்

புதுவீட்டில் நீ குடியேற

கைதொழ நாதியற்றுப்போன

சாமியானேன் நான்

தெருமுனையில்.

உனக்கென்ன ராசா …

புது வீடு புதுச் சாமி.

வீடிழந்தவன் நான்தானே.?

பழைய சாமிக்கு

இருக்காதா மனவலி!!!???