சாபத்தில் பிறந்தவர்கள்

சாபத்தில் பிறந்தவர்கள்

கவிதை: செ. புனித ஜோதி நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர் நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து கொண்டிருக்கிறோம்உடலை நாங்கள்கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்உண்பதற்கும் உடுப்பதற்கும்உறங்குவதற்கும் இடமின்றிபரந்த தேசத்தில் தினம் தினம்அலைக்கழிக்கப்படுகின்றோம்அலைகளாய் நாங்கள்காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்மூச்சுவிடக்கூடஉரிமையற்று இருக்கின்றோம் அத்தனையும்மனிதமற்ற மனங்களின்வன்மத்தில் விளைந்தவிளைச்சல்கள் அவர்களின் ரொட்டித் துண்டுகளில்பழக்கூழ் போலத் தடவித்தடவிஉண்டு மகிழ்கின்றனர்எங்கள் குருதியை காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்அரசியல் ஆதிக்கத்தில்திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்செத்த பிணமாய் ஏனெனில் நாங்கள்திரிசங்கு நேரத்தில் பிறந்தஅகதிகள்

தூரத்தில் இல்லை

தூரத்தில் இல்லை

கவிதை நீ மனிதன்நீதான் இவ்வுலகம்நீதான் அனைத்தும் செய்தாய் நீதான் வெற்று நிலத்தினைப் பசுமை செய்தாய்நீதான் இரும்பை உருக்கி ஆயுதம் செய்தாய்நீதான் அவர்களுக்குக் கொடுவாள் கொடுத்தாய்நீதான் எல்லாமுமாக நின்றாய் ஆனால்நீதான் அடிமைப்பட்டாய் உறுதியான மனத்தை எங்கோ தொலைத்துநீதான் இங்கு கீழானவன் ஆனாய் அதனால்தான் அவர்கள் உன் நிர்வாணம் பார்க்கின்றனர் அது அவர்களது புத்திஅவர்களின் கடவுள்களும் அப்படித்தான் அதனால்தான் உன்னுள் அவர்கள் அதனைத் தேடுகிறார்கள் நீ மறந்துவிட்டாய் நீதான் அவர்களுக்குபுதிய புதிய செருப்புகள் செய்து கொடுத்தாய்அதனையும் அவர்கள் தேய்த்துதூரம் வீசியிருப்பார்கள்  எப்போது நீ அவர்கள் தூக்கி […]

ம(க்கா)தக் குப்பை

ம(க்கா)தக் குப்பை

கவிதை கடற்கரை எங்கும்கடவுள் கிடக்கிறார் மடங்கிய கையுடன்மல்லாந்து கிடக்கிறார் உடைந்த கால்கள்ஒதுங்கிக் கிடக்கின்றன கடலும் இரங்கிக்கண்ணீர் வடித்ததுதடவித் தடவித்தானும் ஓய்ந்தது சங்கச் செல்வர்கள்சரித்துப் போட்டபின்தங்க நேரமின்றிசரக்கடிக்கப் போய்விட்டார் துங்கக் கரிமுகத்தோன்சுருண்டு கிடக்கஅங்கவன் கண்கள்ஆகாயம் பார்த்தன மக்காத குப்பைதான்மதவெறி என்பதால்தக்க வைக்காமல்சமுத்திரம் தள்ளியதோ!

சொல்லணு குண்டுகள்

சொல்லணு குண்டுகள்

கவிதை எங்கள் கவிதை வரிகளேஎங்கள் வெடிகுண்டுத் தொழிற்சாலையிலிருந்துவெளி வருகின்ற அணுகுண்டுக் காவியங்களே நாங்கள் உங்களை வெளியே வீசும்போதுஅன்று யூரோசீமாவில் வீசப்பட்டஐன்ஸ்டீன் உருவாக்கியஅணுகுண்டுகளைப் போல் அழிவுகள்உருவாகப்போவதில்லை அந்த அணுகுண்டுசுரண்டுவோன் சுரண்டப்படுவோன் என்றுஎவரையும் மிச்சம் வைக்காமல்தன் தீ வாயினுள் வைத்துப்பொசுக்கி உண்டு ஜீரணித்துவிட்டது ஆனால், இன்று நீங்களோஏழைகளைச் சுரண்டியதால் தங்கள் வாழ்க்கையைசொர்க்கமாக மாற்றிக்கொண்டிருக்கும்சூழ்ச்சிக்காரர்களின் உல்லாச உப்பரிகைகளைவேரோடு தரைமட்டமாக்கிஇந்நாள் வரையில் சுரண்டப்பட்டுஏழ்மைக் குவியல்களில் வாழ்கின்றமுதுகுத் தண்டுகளுக்குப் புதிய பாதைசமைக்கப் போகின்றீர்கள் இந்த சமுதாய ஜீவநதியைத்தனது நச்சுக் கருத்துக்களால்சாக்கடை நீராக்கி, சகதிக் குளமாக்கிஓட […]

ஞானக்கிழவன்

ஞானக்கிழவன்

கவிதை அக்கினிக் குழம்புகள் அள்ளி எடுத்துப்பக்குவ லேகியம் படைத்த கிழவனே புழுத்துக் கிடந்த புழுக்களுக் குள்ளேபுலியின் ரத்தம் புகுத்திய தலைவனே விழித்தால் மரணம் விளையுமென் றஞ்சித்தூங்கிக் கிடந்த வேங்கையை எழுப்பிநகங்களை நீதான் ஞாபகப் படுத்தினாய்முகங்களில் மீசை முளைப்பதைச் சொன்னாய் தள்ளாடும் வயதிலும் சருகான தில்லைநீஓலையாய்த் தானே உபயோக மானாய் இத்தனை சாதனை வித்தைகள் புரியஎத்தனை பரம்பரை இருந்தது உனக்கு? இரணிய மின்னல் எழுந்ததே அதுவும்சித்தரின் நெருப்புச் சித்தாந்தங்களும்மட்டுமா உன்னை மாற்றின? இல்லையே வால்டேர் செய்த வார்த்தைப் புரட்சிகள்டார்வின் […]

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் விடிந்த காலைப்பொழுதேபெரியார் கைபிடித்த கதிரொளியேசாதியக் கைமுறித்த தமிழ்வேலேதமிழ்க்கொடி யேற்றிய அறிஞனே நாவிரித்தால் தமிழும் ஆங்கிலமும்காவிரியாய்க் கரைபுரளும் நானிலமேபாவிரித்துப் பரணிபாடும் நின்புகழ்நீவிரித்த விரல்வழி தேடியோடும் ஒன்றேகுலம் ஒன்றேதேவன் – உன்வாக்குநன்றேகுலம் நன்மைசெயல் – உன்வாழ்வுகுன்றேயுயர் குணமேகொளல் -உன்வாய்மைநன்றேதமிழ் கொண்டதேவன் – நீயேஅண்ணா இறைவன் எங்குமில்லை என்றாய்இருப்பினுமவன் ஏழை சிரிப்பிலென்றாய்சாதிசமயம் மூடங்க ளென்றாய்சாதிப்போம் வாவாதம்பி யென்றாய் நீதிதேவனையே நீயாரென்று கேட்டாய்நாடாளுமன்ற நர்த்தனம் புரிந்தாய்முதலமைச்சாய் ஆளவும் செய்தாய்முடியாச்சோகம் ஆழ்த்தியே சென்றாய் நீயிருந்த காலம் பரிதியும் சிரித்ததுநீயில்லாக் காலம் புழுதியாகிப் போனதுநீயிருந்த […]

தாயே தாதியோ? இதுவே நீதியோ?

தாயே தாதியோ? இதுவே நீதியோ?

கவிதை பெண்ணாய்ப் பிறத்தலே பெருமைமண்ணில் உரைப்பார் உண்மைஉண்மை நிலையோ காண்கில்உதிரம் உறையும் நெஞ்சில் பிறந்த போதினில் கள்ளிப்பால்அருந்தத் தருவார் அன்னையரேபருவம் மலரும் பாவையரைப்பருந்தாய் கொத்தியே சிதைப்பார் விரும்பா உறவாய் விளைந்திடும்கருவையும் சுமப்பார் கனிவுடனேவிதைத்தே எங்கோஓடி மறைந்தான்விதையேற்றே விரும்பி வளர்த்தாள் அப்பனில்லாப் பிள்ளை அழாதவாறேகையுழைத்துக் கனிந்து வளர்த்தாள்தன்மடி மெத்தையாக்கித் தாலாட்டியேதானுறங்காது கனவுகள் வளர்த்தாள் கல்வியில் சிறக்கக் கட்டெறும்பானாள்வாழ்வில் உயர்த்தத் தேய்பிறையானாள்தாயவள் தேய சேயவன் சிறந்தான்சீர்மிகு பட்டம் சிறந்திட உயர்ந்தான் தெய்வம் தானென்றறியாத் தாயவள்தெய்வம் தொழுதே நன்றி உரைத்தாள்முடிந்தது துயரென்று […]

தமிழைத் தோளேந்திக் காத்த எழிற் சுப்பிரமணிய பாரதியார்

தமிழைத் தோளேந்திக் காத்த எழிற் சுப்பிரமணிய பாரதியார்

பாரதியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சீவலப்பேரியில் நன்கு அறிமுகமான, செல்வாக்கு மிக்கவரான, சத்திரம் சுப்பையர் என்ற கடுவாய்ச் சுப்பையர் – பாகீரதி அம்மையார் ஆகியோரின் மகன் சின்னச்சாமியின் (சுந்தரராஜன் என்ற செல்லப் பெயரும் உண்டு) மகன் சுப்பிரமணியன் என்ற பாரதி, கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதி எழுதிக் குவித்திருப்பவை ஏராளம். ஒரு கவிஞனாக, பத்திரிகை ஆசிரியராக, கார்ட்டூனிஸ்ட்டாக, சிறுகதை எழுத்தாளராக, கட்டுரை ஆசிரியராக அவரது பரிமாணங்கள் கணக்கிலடங்கா. […]

சந்திராயன் பயணத்தில்

சந்திராயன் பயணத்தில்

கவிதை கடக்கும் தொலைவுநீண்டதாக இருந்தாலும்சுங்கச் சாவடியில்லாததுதமது பயணத்தில்சுகமாக இருந்ததாய்சந்திராயன் சொன்னான் பள்ளம் மேடானசாலைகள்கூடநிலாவை அடையும் வரைஎங்கும் பார்க்கவில்லையெனஅவன் சொன்னதுஅதிசயமாய் இருந்தது சிறுநீர் கழிக்கஐந்து ரூபாய் வசூலிக்கும்சாலையோர உணவகங்கள்ஒன்றுகூடக் காணவில்லை எனசந்திராயன் சொன்னதுசரித்திர முக்கியத்துவமானது வழியில் காசு வாங்கஒரு கடவுள் கூடஉண்டியல் வைத்திருக்கவில்லைஎனச் சொன்னதுநம்ப முடியாத ஆச்சரியம் அனைத்து ஆவணங்களும்சரியாக இருந்தும்போக்குவரத்து விதி மீறலெனப்போலீஸ் பிடிக்காததைசந்திராயன் சொல்லிச்சிரித்தான் செல்கிற வழிகளில்விண்வெளி இடங்களைவீட்டு மனைகளாக்கிவிலை பேசி விற்கரியல் எஸ்டேட்நிறுவனங்களின்அறிவிப்புப் பலகையைப்பார்க்காததுசந்திராயனுக்கு ஷாக் உற்சாக பானம்அருந்திவிட்டுஉருண்டு புரண்டு கிடக்கும்எந்தப் பரமாத்மாக்களையும்தான் செல்லும் […]

கடிதங்களுக்கு உயிர் இருந்தது

கடிதங்களுக்கு உயிர் இருந்தது

கவிதை கையால் எழுதப்பட்டகடிதங்கள்காலமாற்றத்தில் கரைந்துவிட்டகாவியங்கள் சகல விஷயங்களும்அஞ்சல் அட்டையிலேயேஎழுதப்பட்டனசங்கேதக் குறியீடுகள்தேவைப்படவில்லை மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்தேகடிதங்கள் எழுதப்பட்டனஒவ்வொருவருக்கும் தனித்தனியாய்உள்பெட்டியில்சொல்ல வேண்டியிருக்கவில்லை மாடு கன்று போட்டது முதல்மாடி வீடு விற்கிற வரைமனம் திறந்துபரிமாறிக்கொள்ளப்பட்டதுதனிப்பட்ட விவகாரம் என்றுஎதுவும் இருக்கவில்லை ஒருவர் சத்தம் போட்டு வாசிக்கஊரே கூடிக் கேட்டதுகடவுச்சொல் போட்டும்கூடஅடுத்தவரிடம் கொடுக்கத் தயங்கும்அலைபேசி அப்போதுஅறிமுகம் ஆகியிருக்கவில்லை மைதாப் பசை ஒட்டியஇன்லாண்ட் கவருக்குள்ஒளித்து வைக்கப்பட்டிருந்தது காதல் வருடக் கணக்கில்கூடகடிதத்துக்காக மட்டுமல்லகாதலுக்காகவும் காத்திருந்தனர்பிக் அப்பும் பிரேக் அப்பும்அறிமுகமாகியிருக்கவில்லை நாய்க்குட்டி முதல்கோழிக்குஞ்சு வரைக்கும்குசலம் விசாரிக்கும்நேசம் இருந்ததுகுடும்பத்தினரிடம் பேசக்கூடஅப்பாயிண்ட்மெண்ட்கேட்கவேண்டியிருக்கவில்லை […]

கதை பேசும் ஓவியம்

கதை பேசும் ஓவியம்

கவிதை வரைபடம் ஒன்றைக் கரம் புகுத்திபடிக்கச் சொல்கிறான்என் அப்புக்குட்டி ஏழுமலை தாண்டிஇரண்டு மலைகளுக்கிடையேஎப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கின்றனவெண்நிலவும் சிவப்புச் சூரியனும் ஓடி வருகிறதுமலையடிவாரம் கடந்தநதியொன்று சலசலப்புடன் பாடும் பறவை இரண்டைத்தாங்கியே நிற்கிறதுஅசை ஒலியெழுப்பியாய்படபடத்த இலை மரப்பச்சை நதி மணலில் கால்த் தடம் பதித்துஅருகில் குடில் சென்றுதிண்ணையில் குரைக்கின்றநாயின் சிறு பாதம் சுற்றுகிறது பின், வானம் பார்த்துஊர்க்குருவிகள்எங்கே போகின்றன கூட்டமாய்?எனக் கேட்டவாறுநண்பருடன் மிகை நயம் பேசும்போதே பெயரற்றுத் தொடரும் என்றேவரைந்துவிடுகிறான் அடிக்குறிப்பை அப்படியென்றால் பேசியதெல்லாம்கோடுகளும் நிறங்களும்கடந்து வந்த எண்ணமும்கற்பனையின் கதைகளுமா? […]

அங்கேயே..

அங்கேயே..

கவிதை இரங்கற்பா எழுதிக்கொண்டிருக்கிறேன்விரைவில் வந்துவிடும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் மலர் மாலைகள்தயார் செய்ய நேரமாகலாம்வேம்பு நிச்சயம் இருக்கும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஆயிரம் முதலைகள்உடனே ஒப்புக்கொண்டுள்ளனபோட்டியில் கலந்துகொள்ளஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் வண்ணக் கோலாட்டம்மிதமாகத் தோன்றலாம்பறை அடித்து விளையாடகுத்தாட்டம் வரும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தள்ளிப் போகுமோகவலை வேண்டவே வேண்டாம்முகச் சவரமும் உடன் செய்வார்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தண்ணீர்ப் பானைக்காகத்தேடி அலைய வேண்டாம்தோளை வலுவாக வைத்துஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் என்ன!வாய்க்கரிசிக்கும் வழியில்லையா? அடடா!சரி, அதையும் நாங்களே தருகிறோம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் முறையாகச் செய்ய […]

ஆடி மாதம்

ஆடி மாதம்

கவிதை வானமே கூரையெனவாழ்ந்திருந்த சாமிகள்மூன்று பிரகாரங்கள் கொண்டகான்கிரீட் கட்டடத்துக்குள்அடைக்கப்பட்டனர் கோயில்கள் எல்லாம்ஆலயங்கள் ஆகிவிட்டனபேச்சியம்மனுக்கும் முண்டகக்கண்ணிக்கும்கூடஸ்ரீ என்ற முன்னொட்டு சேர்ந்துகொண்டுவிட்டது எல்லாத் தெருக்களிலும்எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார்எல்.ஈ.டி. அலங்காரக் கட் அவுட்டிலிருந்துஅருள்பாலிக்கிறார்கள் அம்மன்கள் முளைப்பாரி சுமந்துவரும்ஆறு பேருக்கு முன்பாகஎட்டுப் பேர் வருகிறார்கள்கொட்டு அடித்தபடி பொங்கல் வைப்பவர்கள் ஒருபக்கம்கூழ் ஊற்றுபவர்கள் மறுபக்கம்பொங்கிப் பெருக்கெடுக்கிறதுநாள் முவழுதும் பக்திப் பரவசம் மாலையில் தொடங்குகிறதுதீ மிதிக்கும் நிகழ்வுஆத்தாவின் சக்தியில் ஐயம் கொண்டுஅருகே நிறுத்தப்படுகிறது ஆம்புலன்ஸ் முன்னிரவில் களை கட்டும்இசைக் கச்சேரியும் ஆடலும் பாடலும்கூடவே, கூழ் வார்த்த களைப்பு […]

நங்கூரம்

நங்கூரம்

கவிதை நீண்ட நெடியஓட்டத்திற்குப் பிறகுநிதானமாய் மெல்லதிரும்பிப்பார்க்கிறேன் எத்தனை தூரம்நதியில் விழுந்த இலையாககாலம் என்னைஇழுத்துக்கொண்டு வந்திருக்கிறது! காலத்துக்கேற்றகதாபாத்திரங்களின்ஒப்பனை கலையாமல் உள்வைத்துத் தைத்தஉணர்வுகளின்சுயம் கசியாமல் விழி பூக்கும் கண்ணீரின்வேர்களின்வலி விழுங்கி உதட்டுப் புன்னகையில்கூடுதலாய்க் கொஞ்சம்ஒளி கூட்டி என் குணம் தெரியாமல்பூச்சாண்டி காட்டிய வாழ்விற்கும்நேசம் போதித்து எஞ்சி நிற்கும்காலப் பெருவெளியில்நங்கூரமாகும் என்னை நினைத்தால்எனக்கே சற்றுபொறாமையாகத்தான் இருக்கிறது

சுத்தமான கடவுள்

சுத்தமான கடவுள்

கவிதை அகல் விளக்கை‘சுத்தமான’ எள் எண்ணையால் ஏற்றினால்சனி சமாதான உடன்படிக்கைக்கு வருவாராம் கடைவீதிகளைச் சலித்தால்தங்க விளக்குகூட கண்முன்னே மின்னுகிறதுமண்விளக்கென வாய் திறந்தால்அதிசயப்பிறவி போல் பார்க்கிறார்கள்எங்கே போனார்கள் மண்பாண்டக் கலைஞர்கள்..?அறுபது மைலுக்கு அப்பால் போனால்‘சுத்தமான’ அகல்விளக்கு கிடைக்குமாம் எள் எண்ணை கேட்டால்எள் படம் போடப்பட்டஎண்ணற்ற பைகள் வரிசையில் கிடந்தனஎங்கே போனார்கள் செக்காட்டுவோர்.?இருபது மைல் கடந்து போனால்‘சுத்தமான’ எண்ணெய் கிடைக்குமாம் திரி கேட்டால்‘சுத்தமான’ பஞ்சுத்திரி கிராமத்தில்தானாம்மறைந்துவிட்டதா பருத்தி உற்பத்தி..? வெறுப்பின் உச்சத்தில்பொறுப்பாய் வீடு வந்துகிண்ணத்தை விளக்காக்கிநீரை எண்ணையென வார்த்துபூவைத் திரியென […]

மனிதத் தொழிற்சாலைகள்

மனிதத் தொழிற்சாலைகள்

மொழிபெயர்ப்புக் கவிதை நாட்கள்… ஒருவேளை அவற்றில் பலவகை இருக்கலாம்ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும், சகோதரி டுமல்ட்? என் கடிதம், நானே செய்த அசைந்தாடும் நாற்காலி, என் வீணை எதுவுமே உனக்குக் கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது உன் வெளிச்சத்தில் என்குடியிருப்பை நிறுவ நான் விரும்பினேன்என்னுடைய ஒளிக்கீற்றுகளின் இருப்பை நீஅடையாளம் காணவில்லை என்கிறாயா? எனில், நிச்சயமாக எங்கோ ஒருதவறு நிகழந்திருக்க வேண்டும் நகரத்தின் பொழுதுபோக்கு மையத்தில்நீச்சல் குளத்தின் அருகேஉன் குழந்தையுடன் நீநடமாடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,ஒருமுறை […]

அக்கா-மவ

அக்கா-மவ

க(வி)தை ஆறு வயசிருக்கும்அக்காவை அயித்தான்மேளம் கொட்டி தாலி கட்டயில.. அயித்தான் கைபிடிச்சி அக்கா போகயிலே‘அக்கா’ன்னு ஓடிப்போயி அவ கால கட்டிக்கிட்டேன்கண்ணுல தேக்கிவைச்ச மடை ஒடைச்சிஅக்கா சேலைய நான் நனைச்சேன் ஆத்தா மூக்கைச் சிந்தி அப்பால வீசிப்போட்டுஅக்கா காலவுடு; வாக்கப்பட்டு போறா அவவாடா ராசான்னு கை புடிச்சி வலிச்சிட்டா.. ஆத்தா கைய வுடு அக்காகூட போறேன்னுஅழுது புரண்டு மல்லுக்கட்டி நாந்திமிர.. திலும்பி திலும்பி பாத்து தெருவெறங்கி போன அக்காசட்டுனு ஓடியாந்து குனிஞ்சி முத்தமிட்டுசீரு பானையோடே கண்ணுல கரைஞ்சி போனா.. […]

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

நா. முத்துக்குமார் பிறந்தநாள் நினைவுக் கவிதை சிறகு முளைத்த சிறிய காலங்களில்வான் உயரப் பறந்த உன்னைஇன்னும் பாடலில்தான் தேடுகிறோம்பறவையே எங்கு இருக்கிறாய்? கணையாழியில் ‘தூர்’எழுதிசுஜாதா காதல் கொண்டுமென்பூவாய் மேல் வந்தபறவையே நீ எங்கு இருக்கிறாய்? அம்மையை எழுதி எழுதிஅப்பனுக்குப் பிள்ளையாகி‘ஆனந்த யாழை’ மீட்டியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘அணில் ஆடும் முன்றிலில்’மகனுக்குக் கடிதம் எழுதிவிட்டுஅத்தைகளின் உலகம் போனபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘தெய்வங்கள் எல்லாம்தோற்றே போகும்’தான்உன் மகன் உனக்கு எழுத என்ன செய்வான்?வார்த்தைகளையாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்பறவையே நீ […]

வலிகள்

வலிகள்

கவிதைகள் பிரிவு மிகவும் ரசித்துத்தான்எழுதிக்கொண்டிருக்கிறேன்நம் பிரிவையும் இணைந்திருந்தஇனிப்புத் தருணம் பரிசளித்தஅதே அடிவயிற்றுச் சில்லிடல்இதிலும் நேர்கிறது இதயம் படபடக்கஉடலெங்கும் அதிவேகமாய்ஓடிய புதுக்குருதிஇப்போதும் பாய்கிறது சொற்களற்றுத் தடுமாறிகண்களால் மட்டும்பேச முடிந்தது போலவேஇப்போதும் நடக்கிறது மழைநாளின் சிறு தூறல்நாம் ஒன்றென உறுதி சொல்லிஆசிர்வதித்தது போன்றேநாம் வேறுவேறெனச் சொல்லவும்சாரலை அனுப்பியுள்ளது இயற்கை எனக்குள் இறங்கிய உன்னையும்உனக்குள் புதைந்த என்னையும் மட்டுமேகாணவில்லை என்பதைத் தவிரபிரிவுக்கும் இணைவிற்கும்பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லைதானே? கற்கள் காலம் வாழ்வை அகழ்ந்தெடுத்துசந்தோஷங்களை சலித்துப்பிரித்தெடுக்க முயல்கிறதுஒரு கூட்டம் வறண்ட எண்ணங்களைக்குழைத்தெடுக்கவெனஎப்போதாவது வரமாய் வாய்க்கிறதுஒரு […]