ஆஷஸ் தொடரும் ஆஸ்திரேலியாவும்
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அனல் பறக்கும் எனில், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போட்டிகளில் தீப்பற்றி எரியும். மக்களுடன் சேர்ந்து அந்தந்த நாட்டின் தலைவர்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவார்கள். ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கிரிக்கெட்டின் தலைமையிடமான லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றபோது, அப்படிப் பல அனல் துளிகள் பறந்தன. இங்கிலாந்தின் பேர்ஸ்டோ அவுட் ஆக்கப்பட்ட விதம் குறித்து, இரு நாட்டுத் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிக்கை […]