பேனா வீரர் பிரேம்சந்த்
வாழ்வாவது மாயம் என்று எழுதியவர்களும் எழுத்தாளர்கள்தான்; வாழ்க்கை வாழ்வதற்கே என்று முழங்கியவர்களும் எழுத்தாளர்கள் தான்; இரண்டும் கெட்டானாக, வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாவோம் என்ற தோரணையிலே வளவளா சித்தாந்தங்களை வழங்கியவர்களும் எழுத்தாளர்கள்தான். இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வாழ்ந்த உலகிலேதான் பிரேம்சந்த் – அன்பு நிலவன் என்ற எழுத்தாளரும் வாழ்ந்தார். மானுடத்தை உயர்த்துவது இலக்கியம்தான் என்று கருதிய இவர், நோய்வாய்ப்பட்ட காலத்தை, வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருந்த காலத்தைத் தவிர மற்ற நேரங்களில், ஒவ்வொரு நாளும் எழுதுவதை ஒரு தவமாகக் […]