திருப்பூர் எனும் திருப்புமுனை – 20

திருப்பூர் எனும் திருப்புமுனை – 20

தொழிலாளர் மேம்பாடும் திறன் மேம்பாடும் கடந்த அத்தியாயத்தில் திருப்பூரின் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பார்த்தோம். இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பார்ப்போம். சிறு, குறு, நடுத்தரத் தொழில் என்றாலும் உள்நாட்டு உற்பத்தி, அதில் உள்ளாடைகள் உற்பத்தி மற்றும் இதர ஆடைகள் உற்பத்தி, ஏற்றுமதிக்கான உற்பத்தி என, பல்வேறு வகைகளில் இங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வகை உற்பத்தியிலும் இயந்திரங்கள் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும் திறன் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் மாறுபடும் நிலை உள்ளது. […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 19

திருப்பூர் எனும் திருப்புமுனை – 19

தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவர்களின் தேவைகளும் சுயம்புவாக உருவான திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வெற்றிக்குப் பின்னணியில் முக்கியக் காரணமாக இன்றளவும் விளங்குவது தொழிலாளர்களின் உழைப்பு. உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒரு வழக்கம், இங்குள்ள தொழிலாளர்கள் அனைவரும் பணிபுரியும் நிறுவனத்தைத் தங்களின் நிறுவனமாகக் கருதி உரிமையுடன் பணியாற்றும் காரணமே இங்குள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னணியில் உள்ள காரணங்களில் ஒன்று. இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்களின் வரலாற்றுப் பின்னணியில் நிச்சயம் அதன் உரிமையாளர்களும் பங்குதாரர்களும் ஏதேனும் ஒருவகையில் தொழிலாளியாகப் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 18

திருப்பூர் எனும் திருப்புமுனை – 18

வங்கிகள் இணைப்பால் முடங்கும் தொழில் துறை கடந்த அத்தியாயத்தில் தொழில் முனைவோர்கள் தரப்பில் உள்ள தரவுகளைப் பார்த்தோம். இந்த அத்தியாயமும் அதையே பேசுகிறது. திருப்பூரைப் பொறுத்தமட்டில் இங்குள்ள நிறுவனங்கள் அனைத்துமே எல்லாவிதமான பின்னலாடைகளையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதே. அதுவே பலமும் பலவீனமும். ஏனெனில், தொழில் துவஙகிய காலத்தில் எல்லாவிதமான ஆடைகளை உற்பத்தி செய்கிறோம் என்கிற அடிப்படையில் இங்கே வாடிக்கையாளரக்ள் வரத் தொடங்கினர். ஒரு காலகட்டத்தில் பிரத்யோகமாக ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்தன. எல்லாவிதமான […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 17

திருப்பூர் எனும் திருப்புமுனை – 17

தொழில் முனைவோராக எங்கு பெரிய அளவில் தவறுகிறோம்? திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் நிலவும் பல்வேறு சவால் நிலைகளைப் பல அத்தியங்களாகப் பார்த்து வந்தோம். போட்டி உற்பத்தி நாடாக விளங்கும் வங்கதேசச் சவால் குறித்துக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். வங்கதேசம், வியட்நாம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எவ்வாறு இந்தியாவைக் காட்டிலும் தொடர்ந்து ஜவுளித்துறையில் முன்னேறுகின்றனர், நாம் எங்கே பின்தங்கியுள்ளோம் என்பதை விரிவாகப் பார்ப்போம். வங்கதேசம், வியட்நாம் மற்றும் இலங்கையில் பஞ்சு விளைச்சல் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 16

திருப்பூர் எனும் திருப்புமுனை – 16

வங்கதேசச் சவால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து, தொடர்ந்து 15 அத்தியாயங்களாகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் வங்கதேச வடிவில் எழுந்துள்ள நெருக்கடியைக் காண்போம். 30 வருடங்களுக்கு முன் தையல் உற்பத்தி நிலையைத் தவிர்த்து, பெரும் உற்பத்தி அமைப்புகள் மிக மிகக் குறைவு. ஆனால் நாளது தேதியில் பஞ்சு இறக்குமதி செய்து ஆடைகளாக ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தத் துறை அசாதாரணமாக வளர்ந்துள்ளது; தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. வளர்ச்சி குன்றிய […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 15

திருப்பூர் எனும் திருப்புமுனை – 15

சாயத்தொழில் காப்பாற்றப்பட வேண்டும் திருப்பூர் எனும் திருப்புமுனை தொடரின் இந்தப் பகுதியில் வங்கதேசம் குறித்து எழுதுவதாகவே திட்டம். சாய ஆலைப் பிரச்சனை குறித்து மேலும் விவரமாக எழுதவேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, மேலும் சில தரவுகளை இந்தப் பகுதியில் பதிவு செய்கிறேன். துணிகளுக்குச் சாயமிட வேதியியல், கனிமங்கள், உலோகங்கள், தாதுக்கள் உள்ளிட்ட கலவைகளுடன் கூடிய டைஸ் மற்றும் கெமிக்கல்ஸ் உபயோகப்படுத்தப்படும். தண்ணீர் அதிகம் தேவைப்படும் உற்பத்தி நிலை இது. துணிகளுக்குச் சாயம் ஏற்றிய பிறகு வெளியேற்றப்படும் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 13

திருப்பூர் எனும் திருப்புமுனை – 13

மெத்தனப் போக்கில் மத்திய மாநில அரசுகள் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை உள்ளடக்கியது. பல்லடம் தாலூகாவின் கீழ் ஒரு கிராமமாக அறியப்பட்ட திருப்பூர், நாளது தேதியில் ஒரு மாவட்டத்தின் தலைநகராக, மாநகராட்சியாக உயர்ந்துள்ளதென்றால் அதற்கான முக்கியக் காரணம் பின்னலாடைத் தொழில் வளர்ச்சி. மாநில அரசிற்கும் சரி, மத்திய அரசிற்கும் சரி, வரி வருவாயினை ஈட்டித் தரும் முதன்மை மாவட்டங்களில் ஒன்று திருப்பூர். கூடுதலாக, அந்நியச் செலாவணியைக் கணிசமாக ஈட்டித் தருவதிலும் திருப்பூர் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை -11

திருப்பூர் எனும் திருப்புமுனை -11

தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஆய்வுமுறை நெருக்கடிகள் கடந்த அத்தியாயத்தில் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆய்வுகள் மற்றும் சர்வதேசச் சான்றிதழ்கள் குறித்துப் பார்த்தோம். பின்னலாடைகளுக்கான தர ஆய்வுகள் மற்றும் அதன் சான்றிதழ்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். பின்னலாடைத் தயாரிப்பு என்பது பல உற்பத்திப் படிநிலைகளைக் கடந்து வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இறக்குமதியாளர்கள் இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்களை வழங்கும்போதே அதற்குரிய தரக்கட்டுப்பாடுகளை உறுதி செய்வர். இதில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமே தங்களின் சொந்தத் தரக் கட்டுப்பட்டுப் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

வசதியான வரையறையைக் கடந்தால் வளர்ச்சி தொடர்ந்து இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து, கருத்துகளைப் பகிரும் நண்பர்களுக்கு நன்றி. பல்வேறு கேள்விகள் மற்றும் விபரங்களைக் கேட்டும், இதுகுறித்து எழுதவில்லையா என்கிற கேள்விகளும் என்னிடம் முன்வைக்கப்படுகின்றன. அனைத்து விவரங்களும் கோர்வையாக வர வேண்டும் என்கிற கவனத்துடன் ஒவ்வொரு தரவுகளையும் எழுதிவருகிறேன். அடுத்தடுத்து வரும் பகுதிகளில் விடுபட்ட ஒவ்வொன்றையும் அவசியம் எழுத விழைகிறேன். செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்திக்கான துணி வகைகள் பல. அவற்றுள் முக்கியமானவை பாலியஸ்டர், நைலான், மொடால், பாம்பூ, […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 8

திருப்பூர் எனும் திருப்புமுனை – 8

கடினக் காலங்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் இதுவரை திருப்பூரில் பின்னலாடைத் தொழிலின் தோற்றம், உள்கட்டமைப்பு, கடந்துவந்த பாதை, தொழிலாளர்கள், பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்த்தோம். இனி இந்தத் தொழிலில் உள்ள பிரச்சனைகளைக் குறித்துக் காண்போம். 1980களில் துவங்கிய ஏற்றுமதி 1984இல் 9 கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து படிப்படியாக வளர்ந்து, இன்று 37 ,500 கோடி ரூபாய் என்ற அளவினை எட்டி உள்ளது. ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் இங்கு […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடைத் தொழில் வளர்ச்சியால் மாநகரமாக விரிவடைந்தது, பின்னலாடைத் தொழிலின் படிநிலைகள், திருப்பூரின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொழிலுக்கான அடிப்படை, முதலீடு மற்றும் அவை தொடர்பான தரவுகளைக் காண்போம். முந்தைய பகுதிகளை வாசிக்கத் தவறியவர்கள் கீழே […]

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 5 முந்தைய 4 பகுதிகளில் திருப்பூரின் அடிப்படைத் தொழில் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் ஆதரவுக்கும் சமூக ஊடகத் தொடர்புத் தளங்கள் வாயிலாக கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோருக்கும் நன்றிகளும் பேரன்பும். இந்தப்ப பகுதியில் திருப்பூரில் தயாராகும் ஆடைகள் சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன, அங்குள்ள வர்த்தகக் கட்டமைப்பு குறித்தான விவரங்களைக் காண்போம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதிக்குத் தயாராகும் ஆயத்த ஆடைகள், ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகள், […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

தொழிலாளர் பங்களிப்பு பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்திப் படிநிலைகள் ஆகியவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தத் தொழிலின் அடிநாதமும் வெற்றிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றுமான தொழிலார்களைக் குறித்து இந்தப் பகுதியில் காண்போம். நூற்பாலைகள் அதிகமிருந்த ஊர் திருப்பூர் என்ற தரவை முன்பே பதிவு செய்திருந்தோம். அந்தவகையில், பின்னலாடைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் எளிதாகப் பங்குபெற இயன்ற சூழல் அமைந்தது. ஆடை உற்பத்தியில் பல்வேறு படிநிலைகள் கொண்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் வாய்ப்புகள் அமைந்தன. அதிகப்படியான […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

பொதுவாக உலகெங்கிலும் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்கு வாடிக்கையாளர்களால் கொடுக்கப்பட்ட ஆர்டருக்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்ய, தங்களின் தேவைக்கேற்ற தர வரையறைக்குள் துணி தயாரிக்கும் ஆலைகளிடம் துணிகளை ஆர்டர் செய்து பெற்று, ஆடைகளைத் தயாரித்து அனுப்புவர். திருப்பூரைப் பொறுத்தமட்டில், இங்கு துணி தயாரிப்பு நிறுவனம் என்பது கிடையாது (அண்மைக் காலங்களில் உருவாகி வருகிறது). ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தேவைகளுக்கேற்ப நூலை மொத்தமாக நூற்பாலைகளிலிருந்து கொள்முதல் செய்து, அதனைப் பல்வேறு படிநிலை சார்பு நிறுவனங்களுக்கு […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் உள்வாங்கி, உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்வோம். பொதுவாகவே, கொங்கு மண்டலப் பகுதி என்பது மழை மறைவுப் பிரேதேசம் ஆகும். இந்தப் பகுதியின் நீராதாரம் நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளையும் பருவமழையையும் மட்டுமே சார்ந்துள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் விவசாயம், பருவமழை சார்ந்த விவசாயம் என்பதால், பொருளீட்டலுக்கான தேடல் கொங்குப் பகுதிகளில் இயற்கையாகவே அதிகம். இதன் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை

திருப்பூர் எனும் திருப்புமுனை

திணறுகிறது திருப்பூர், திண்டாடுகிறது திருப்பூர், இனி பின்னலாடைத் தொழில் அழிந்துவிடும் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே இந்தச் சமூகத்தின் பேசுபொருளாக இருந்துவருகின்றன. உண்மை நிலவரம் என்ன? உள்ளபடியே இத்தொழில் அழிந்துவிடுமா? திருப்பூரின் எதிர்காலம் என்னவாகும்? ஊடங்கங்களிலும் பொதுமக்களிடமும் பரவும் செய்திகளுக்கும் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் தரவுகளை உள்ளடக்கிய அவதானிப்பை விடையாகப் பகிர்கிறார், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளரும் ஈஸ்டர்ன் குளோபல் க்ளோத்திங் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் தலைமைச் செயல் […]

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

உங்கள் மகன் மெக்கானிக்கல் என்ஜினியரென வைத்துக்கொள்வோம். அல்லது ஏதோ ஒரு பட்டதாரி. படித்து முடித்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் வெறுமனே கையை பிசைந்தபடி இருக்கும் சூழலில், மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கான கடிதம் வருகிறது. மகிழ்கிறீர்கள்; வேண்டிக்கொள்கிறீர்கள்; கனவு காண்கிறீர்கள்; இனி எல்லாம் சுகமேயென ஆனந்தக்கண்ணீரை துடைத்துக் கொள்கிறீர்கள். நேர்முகத்தேர்வில், “எட்டுமாதம் மட்டுமே பணிக்காலம், மாதம் 15000 சம்பளம், எட்டு மாதம் கழித்து நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் சம்மதமா?”யென வினவுகிறார்கள். உங்கள் மகனின் […]