காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் விடிந்த காலைப்பொழுதேபெரியார் கைபிடித்த கதிரொளியேசாதியக் கைமுறித்த தமிழ்வேலேதமிழ்க்கொடி யேற்றிய அறிஞனே நாவிரித்தால் தமிழும் ஆங்கிலமும்காவிரியாய்க் கரைபுரளும் நானிலமேபாவிரித்துப் பரணிபாடும் நின்புகழ்நீவிரித்த விரல்வழி தேடியோடும் ஒன்றேகுலம் ஒன்றேதேவன் – உன்வாக்குநன்றேகுலம் நன்மைசெயல் – உன்வாழ்வுகுன்றேயுயர் குணமேகொளல் -உன்வாய்மைநன்றேதமிழ் கொண்டதேவன் – நீயேஅண்ணா இறைவன் எங்குமில்லை என்றாய்இருப்பினுமவன் ஏழை சிரிப்பிலென்றாய்சாதிசமயம் மூடங்க ளென்றாய்சாதிப்போம் வாவாதம்பி யென்றாய் நீதிதேவனையே நீயாரென்று கேட்டாய்நாடாளுமன்ற நர்த்தனம் புரிந்தாய்முதலமைச்சாய் ஆளவும் செய்தாய்முடியாச்சோகம் ஆழ்த்தியே சென்றாய் நீயிருந்த காலம் பரிதியும் சிரித்ததுநீயில்லாக் காலம் புழுதியாகிப் போனதுநீயிருந்த […]

தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

விடுதலைப் போரின் முன்னத்தி ஏராக விளங்கி, தியாகம் என்ற சொல்லுக்குப் பூரண விளக்கமாக வாழ்ந்திருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் இன்று. அவரது அரசியல் பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது தமிழ்த் தொண்டு பற்றிய தகவல்களை அவரது பிறந்தநாள் செய்தியாக சுவடு வழியாகத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். விடுதலைப் போராட்ட வீரராகத் திகழ்ந்த வ. உ. சி.க்கு தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த புலமையும் பற்றும் இருந்தது. 1918இல் மணக்குடவர் எழுதிய அறத்துப்பாலுக்குரிய […]

எப்போதும் தேவைப்படும்  பெரியார்

எப்போதும் தேவைப்படும் பெரியார்

பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை 1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும் குறிப்பாக பின்னாளில் ஏற்பட்ட தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மூடநம்பிக்கைகள், அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றை வேரறுக்க விரும்பிய ஈ.வெ.ரா. அதற்கான சரியான மனிதர் சிங்காரவேலு என்பதைக் கண்டறிந்தார். ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளிலும் அறிஞராகத் திகழ்ந்த சிங்காரவேலுவே அதற்குச் சரியானவர் என நினைத்தார்; மதித்தார். அறிவியல் […]

வில்லிசை நாயகன்

வில்லிசை நாயகன்

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 94. சுப்பு ஆறுமுகம், வில்லிசைக் கச்சேரிகள் மூலம் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியவர். 1928 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் சுப்பு ஆறுமுகம் பிறந்தார். தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். கடந்த 40 […]

காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்

காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்

‘ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது..’ என்று கணீரென்ற உச்சரிப்பில் கம்பீரமான குரலுடன் ஆரம்பித்தது எனில், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சட்டென்று ரேடியோவை நோக்கித் திரும்புவார்கள். செய்திகளைச் செவிமடுப்போர் எண்ணிக்கை அதிகமாகும். காலை 7.15 மணி என்று தெரிந்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராவார்கள். செய்தி முடிந்தவுடன் ரயிலுக்குச் செல்பவர்கள், பஸ் பிடிப்பவர்கள் வீட்டை விட்டுக் கிளம்புவார்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் இடையினில் செல்ல மனம் இடம் தராது. அப்படிப்பட்ட கம்பீர குரலுக்குச் சொந்தக்காரர் சரோஜ் நாராயண் சுவாமி, சென்னையில் […]

மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ

மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ

வாழ்நாள் முழுதும் வரலாற்றைத் தேடியமயிலையின் வானம்பாடிஆழ்ந்த தமிழ்ஞானிஆனால் படிக்கவில்லை பள்ளிதாண்டி கோயில் வரலாறெனில் அதன் கொடி வரலாறாய் விரியும்சமய வரலாறெனில் தத்துவமும் குடைபிடிக்கும்பண்பாட்டைச் சொல்லவந்தால் பயன்பாடும் சேர்ந்துவரும்மொழியின் வரலாறென்றால் மூதறிஞரும் முகமன் சொல்வார் அதனால்தான்பாரதிதாசன் இப்படி அறையலுற்றார் ‘தமிழையே வணிகமாக்கித்தன்வீடு மக்கள் சுற்றம்தமிழிலே பிழைப்பதற்குதலைமுறை தலைமுறைக்குத்தமிழ்முதலாக்கிக் கொண்டபல்கலைத் தலைவன் எல்லாம்தமிழ்ச் சீனி வேங்கடத்தின்கால் தூசும் பெறாதென்பேன்’ மொழிக்கு சமயங்களின் கொடைகளைமுத்தான பலநூல் வழி மொழிந்ததெல்லாம்மொழிச் சரிதம் படிப்போருக்கு முழுநிலவாய்க் கூடவரும் ‘கிறித்துவமும் தமிழும்’ அவர் எழுதிய முதல்நூலாம்பொறிவாயில் […]

நெடுங்கணக்கு – பகுதி 3

நெடுங்கணக்கு – பகுதி 3

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பதில் ‘ஒலி’ என்ற தலைப்பின் கீழ் ‘திராவிட நெடுங்கணக்கு’ என்பதை விளக்கிய கால்டுவெல், மெய் எழுத்துகளின் ஒலி அமைப்பு பற்றியும் விளக்குகிறார். க், ச், ட், த், ப்,ற் ஆகிய வல்லொலி எழுத்துக்களை வல்லினம் என்றும், ங், ஞ், ண், ந்,ம், ன் ஆகிய மூக்கெழுத்துக்களை மெல்லினம் என்றும், ய், ர்,ல்,வ், ழ், ள் ஆகிய அரை உயிர் எழுத்துக்களை இடையினம் என்றும் மெய் எழுத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம். வடக்கே வாழும் திராவிட […]

நெடுங்கணக்கு – பகுதி 2

நெடுங்கணக்கு – பகுதி 2

https://hexamedia.in/p-2022-0605/ நெடுங்கணக்கு பகுதி 1 – ஐ இந்த இணைப்பில் வாசிக்கலாம். தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகள்:தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகளாக கீழ்க்கண்டவற்றை கால்டுவெல் அவர்கள் குறிப்பிடுகிறார் : தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகளைப் போன்றே தமிழும், ‘எ’ மற்றும் ‘ஒ’கரத்தின் குறில், நெடில்களைக் குறிக்க தனித்தனி வடிவெழுத்துக்களைப் பெற்றிருக்கிறது. இந்த குறில், நெடில் வடிவெழுத்துக்களைப் பிரித்துக்காட்டும் குறிகள் முதன்முதலாக பெச்சி பாதிரியாரால் இணைக்கப்பட்டன. ‘ழ்இ’, ‘ல்ழ்இ’ என்ற அரை உயிர்களைக் குறிக்கும் சமஸ்கிருத ஒலிகளை யொத்த ஒலிகளை குறிக்கும் வரிவடிவ […]

நெடுங்கணக்கு

நெடுங்கணக்கு

கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலைப் படிக்க முயல்வது எவ்வளவு கடினமானது என்பதையும் அதனை வாசிக்க எவ்வளவு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன். தோற்றுவாய்ப் பகுதியையும் முதற் பாகத்தையும் இயன்றளவு படித்து முடித்துவிட்டேன். இரண்டாம் பாகம் படிக்கும்போது திணறிவிட்டேன். படித்ததில்சில குறிப்புகள்: துளு மொழி, மலையாள வரிவடிவத்தில் எழுதப்பட்டு வந்தன என்றும் தற்போது மங்களுர், ஜெர்மன் மி­ன் பதிப்பகத்தில் வரும் துளு மொழி நூல்கள் கன்னட வரிவடிவுகளைப் பயன்படுத்துகின்றன என்றும் பிரைகில் என்பவர் […]

சமத்துவத் தலைவர்

சமத்துவத் தலைவர்

பெரியார் பக்கம் 21 புரட்சியாளர் பெரியார் (3) எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி துல்லியமான கருத்து கொண்டிருந்தார் பெரியார். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியே நடத்தியிருப்பதற்கான சான்றுகள் அவர் தரும் முறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழில் எழுத்துகள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துகள் அதிகம். தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இவை இரண்டும் தேவையில்லாதவை. மேலும் இவை கூட்டெழுத்துகளே ஒழிய, தனி எழுத்துகள் அல்ல. அவற்றுக்கு […]