சொன்னவண்ணம் செய்த பெருமாள்
தாய்மொழி தின நாடகம் காட்சி 1 காலம்: ஆறாம் நூற்றாண்டில் ஒரு மாசி மாதம்தினம்: மகம்இடம்: திருவெஃகா விண்ணகரம்நேரம்: காலைபாத்திரங்கள்: சீதையம்மை, திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன், கோயில் பட்டர் திருக்கோயிலைச் சுத்தம் செய்து வரும் சீதையம்மை அன்றும் சுத்தம் செய்து திரும்பிக்கொண்டிருக்கும் நேரம். எதிரே திருமழிசை ஆழ்வாரின் சீடன் வருகிறான். சீதையம்மை: வணக்கம் ஐயா. கணிகண்ணன்: வணக்கம் அம்மையே, ஏன் சோர்ந்தாற்போல் வருகிறீர்கள்? சீதையம்மை: வயதாகிவிட்டதல்லவா. இந்தப் பெருமாளுக்கு இன்னும் எத்தனை நாள் நான் சேவை செய்யக் […]