பொன்னியின் செல்வன் – 21

பொன்னியின் செல்வன் – 21

ஆதித்த கரிகாலன் கடம்பூருக்கு வந்த நிமிடம் முதல் எல்லோரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு சம்புவரையரும், பழுவேட்டரையரும் வெகுவாகக் கலங்கிப் போயிருந்தார்கள். அவனிடம் பேசுவதற்கே அவர்கள் பயந்து தயங்கியிருந்த பொழுதில்ஆதித்த கரிகாலனே அவர்களை அழைத்துப் பேச ஆரம்பித்தான்.மதுராந்தகனுக்கு பட்டம் கட்ட சுந்தரசோழர் முடிவெடுத்திருப்பதாகவும், அதைப்பற்றிய சிற்றரசர்களின் அபிப்ராயம் என்னவென தெரிந்து கொண்டு, தான் முடிவெடுக்க இருப்பதாக நயந்து கூறினான். பழுவேட்டரையர் அதை நம்பி விட்டார்.உடனே நந்தினியின் திட்டமான நாட்டை பிரித்து கொடுக்கும் யோசனையைக் கூற கரிகாலன் வெகுண்டான்.‘கிழவர்களாகிய நீங்கள் வேண்டுமானால் பெண்களைப் பங்கு போட்டுக் கொள்வதைப்போல நாட்டை பிரிக்க எண்ணலாம். என்னால் முடியாது. அதனினும் மதுராந்தகனுக்கே எனது உரிமையை விட்டுத் தருகிறேன். பதிலாக வட திசை நோக்கி படை எடுத்துச் செல்ல சைன்யமும் அதற்குண்டான தளவாடங்களையும் அரசர் அனுமதியும் பெற்றுத் தர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?’ எனக்கேட்டான். பழுவேட்டரையர், ‘தஞ்சைக்கு சென்று சக்ரவர்த்தியுடன் பேசிக்கொண்டு’ , என்று சொல்லத் தொடங்கும்போதே நடுவில் இடைமறித்து, தஞ்சையில் சக்ரவர்த்தியை சிறைவைத்திருப்பதாகவும், பழுவேட்டரையர்களின் கைகளில்தான் ஆட்சிப்பொறுப்பும், நிதிமூலங்களும் இருக்கிறது என்பது தனக்குத் தெரியும் என்றும் வேண்டுமானால், இளையராணியிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறுங்கள்’ என எள்ளினான்..பழுவேட்டரையருக்கு கோபம் மிகுந்தும் அடக்கிக் கொண்டு வாளாவிருந்தார். கரிகாலன் தான் இங்கேயே தங்கியிருப்பதாகவும். பழுவேட்டரையர் தஞ்சைக்கு சென்று மதுராந்தகனை அழைத்து வந்து ஆயத்தங்கள் செய்து முடித்தவுடன். தான் தஞ்சைக்கு சென்று பெற்றோரிடம் விடைபெற்று படைகளை அழைத்து செல்வதாகவும் முடிவாகக்கூறினான். அதுவரை வேட்டையாடி பொழுதைக் கழிக்க விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு சம்புவரையரிடம் கேட்டுக்கொண்டு வந்தியத்தேவனை உடன் அழைத்தபடி அங்கிருந்து சென்றான். அனைவரும் திக்பிரமையடைந்திருந்தனர். ஒருவாறு மீண்ட பழுவேட்டரையருக்கு உடனடியாக அங்கிருந்து தஞ்சைக்கு நந்தினியை அழைத்துச் சென்றுவிடுவதுதான் உசிதம் எனத் தோன்றியது. கரிகாலன் மதுராந்தகனை இங்கே அழைத்து வந்தால் கரிகாலன் அவனை ஏதாவது செய்துவிடுவான் என்ற பயமும்இருந்தது. தஞ்சைக்கு பாதுகாப்பாக நந்தினியை அழைத்துச் சென்றுவிட்டு சின்னப் பழுவேட்டரையரை கலந்தாலோசித்து விட்டு மேலே முடிவெடுக்கலாமென நந்தினியிடம் கூறி கிளம்பச் சொல்ல அவள் மறுத்தாள். நந்தினி, சபையில் கரிகாலன் பழுவேட்டரையரை அவமானப் படுத்தியதை மணிமேகலை சொல்லி விட்டதாகக் கூறி அழுதாள். எனவே அவனைப் பழிவாங்க வேண்டுமெனக் கூற, பழுவேட்டரையருக்கு நந்தினி தன்மீது வைத்துள்ள பதிபக்தியை நினைத்து உவகையுற்றார். நந்தினி மறைத்து வைத்த வாளைக் காட்டி தான் இங்கு பாதுகாப்பாக இருக்கப் போவதாகவும் அவர் மட்டும் தஞ்சை செல்லவேண்டுமெனவும் வேண்டிக் கேட்டுக் கொண்டாள். தற்போது அவரோடு கிளம்பினால் கிழவருக்கு நந்தினி மேல் நம்பிக்கையில்லை என்று பேச்சு கிளம்பும் என்றாள். அவருக்கு மனமில்லாத போதும் அவள் சொல்லை மீறாமல் கிளம்பிச் சென்றார். ஆதித்த கரிகாலன் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு வேட்டைக்குக் கிளம்பினான். சம்புவரையருக்கு மணிமேகலையை கரிகாலனுக்கு மணமுடித்தால் நல்லது என்று தோன்ற, கந்தமாறன் அதற்கு எதிராக இருந்தான். நந்தினிக்கும் கரிகாலனுக்கும் இடையில் ஏதோ இருக்க வேண்டும் என்று அவன் மருகி வந்தான். நந்தினியை அழைத்துக் கொண்டு வீரநாராயண ஏரியில் இருந்த சிறிய தீவின் நீராழி மண்டபத்திற்கு மணிமேகலை தன் தோழிகளுடன் பொழுதைக் கழிக்க வந்து சேர்ந்தாள். வேட்டையில் ஆதித்த கரிகாலன் கண்ணில் கண்ட மிருகங்களையெல்லாம் தன் ஆத்திரத்தினால் கொன்று தீர்த்தான். இரு காட்டுப்பன்றிகள் குறுக்கிட அதில் ஒன்றின் மீது கரிகாலன் எய்த அம்பு குறிதவறி விட கந்தமாறன் நகைத்தான். கரிகாலன் அவனிடம் பந்தயமிட்டு அவனையும் பார்த்திபேந்திரனும் ஒரு பன்றியை பிடித்து வருமாறும், தானும் வந்தியத்தேவனும் ஒன்றை பிடிப்பதாகவும் சவால் விட்டான்.அதன்படி துரத்தி வந்தபொழுது, பன்றியைத் தவற விட்டனர். கரிகாலனும் வந்தியத்தேவனும் தனிமையில் எல்லாச் சூழலையும் விவாதித்தனர். வந்தியத்தேவனிடம் நந்தினியை தனியே சந்திப்பதற்கான தன் அச்சத்தை கரிகாலன் வெளிப்படுத்த, வந்தியத்தேவன் நந்தினி அவரின் சகோதரி என்ற உண்மையை அவளிடம் சொல்லுமாறு வற்புறுத்தினான். நந்தினியின் வஞ்சம் குறித்து பேசிய கரிகாலன்நானோ அவளோ இறந்து விடுவது தான் இதற்கான தீர்வு என்றெல்லாம் பேசி கலங்கடித்தான். மணிமேகலையை தான் உடன்பிறவா சகோதரியாக கருதுவதாகவும், கரிகாலன் அவளை மணக்கலாமெனவும் வந்தியத்தேவன் கூறினான். அப்போது சிறுத்தையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த பழைய பன்றியை கண்டு இருவரும் சண்டையிட்டு பன்றியை வென்றனர். அதற்கு எதிர்க்கரையில் பெண்களைப் பார்த்தவுடன் நீரில் குதிரையை விட்டுக்கொண்டு அங்கு சென்றனர். அங்கு பன்றியிடமிருந்து தப்பிய சிறுத்தை பெண்களை நோக்கிப் பாய தயாராய் இருந்தது. கரிகாலன் அம்பை விட சிறுத்தை பெண்களின் மீது பாய்ந்தது. சிறுத்தை, மணிமேகலை, நந்தினி மூவரும் நீரில் விழுந்தனர். பின் எழுந்த மணிமேகலையை நோக்கி சென்ற வந்தியத்தேவனை தடுத்து நந்தினியிடம் அனுப்பிவிட்டு கரிகாலன் அவளை நோக்கி சென்றான். கரிகாலன் தன்னைத் தொட்டு தூக்கியதை மணிமேகலை விரும்பாமல் பேச, அவளுடைய அன்புக்கு வந்தியத்தேவன் பாத்யதை இல்லை எனக் கரிகாலன் கூறி நந்தினியுடன் அவன் குலவிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்ட மணிமேகலை துணுக்குற்றாள். உண்மையில் வந்தியத்தேவன் நந்தினியை காப்பாற்றியவுடன் பயந்து வேகமாக இறக்கிவிட நந்தினி அவன் முதலில் தன்னிடம் வராததையும் தான் அவனுக்கு உதவி செய்ததை மறந்து விட்டதையும் சொல்லி ஏசினாள். அதற்கு பதிலளித்த வந்தியத்தேவனை ஒத்துக்கொள்ளாமல் மறுநாள் நள்ளிரவில் தன்னைத் தனியே சந்திக்குமாறு கூறினாள். அதற்குள் கரிகாலனும் மணிமேகலையும் நெருங்கிவிட பேச்சை நிறுத்திக் கொண்டாள். பின்னர் எதிரே அந்த அடிப்பட்ட சிறுத்தை கரையேறிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனை அதைக் கொன்று வருமாறு அனுப்பிவிட்டு, நந்தினியுடன் தனியே பேச விழைந்தார். மணிமேகலையும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்று விட நந்தினியிடம் அவள் தன் சகோதரி என்ற உண்மையைக் கூறினார். ஒரு கணம் திகைத்த நந்தினி இதைச் சொன்னது வந்தியத்தேவனா? எனக்கேட்க, ஆமோதித்த கரிகாலனை பார்த்துச் சிரித்தாள். இளையபிராட்டி குந்தவை நம்மை மறுபடியும் பிரிப்பதற்காக வந்தியத்தேவன் மூலம் செய்த சூழ்ச்சி என்று சொல்ல, வந்தியத்தேவன் அப்படிப்பட்டவனல்ல என்று கரிகாலன் மறுத்தார். அப்போது வந்தியத்தேவன் தன்மீது ஆசைப்பட்டதாகவும் தான் மறுத்ததால் கரிகாலனைதன்னிடம் அணுகாதவாறு அவன் காவல் இருப்பதாகவும் பழி கூறினாள். முன்பே கடம்பூருக்கு வரும்போது வந்தியத்தேவன் ‘உங்களை விட்டு பிரிய மாட்டேன்’ என்று தன்னிடம் சொன்னதை கரிகாலன் நினைவுற்றான். மேலும் அநிருத்தர் அருள்மொழிவர்மருக்கு பட்டம் சூட்ட நினைப்பதாகவும், மதுராந்தகன் அரசாள தகுதியில்லாதவன் எனவும், ஆழ்வார்க்கடியான் தன்னை மணம்புரிந்து கொண்டு வைணவ பக்தியில் ஈடுபடவேண்டுமென ஆசைப்படுகிறான் என்றெல்லாம் கூறி தன்மீது பரிதாபம் ஏற்படும்படி செய்தாள். மேலும் வந்தியத்தேவன் திரும்பி வரும்போது அவனின் குலமான வாணர்குல பாட்டு ஒன்றை அவன் சொன்னதாகப் பொய் கூறி சொல்லலானாள். வந்தியத்தேவன் அதைத் தான் சொல்லவில்லை என்று மறுக்க, அதை காதில் கொள்ளாமல் அதில் மூவேந்தர்களின் தலையைப் பறித்ததாக வரும் வரிகளைச் சொல்லி காண்பித்தாள். ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவன் மீது வெறுப்பு கொள்ளும் வண்ணம் அனைத்தையும் செய்தவள், ஆதித்த கரிகாலனே ஆட்சிக்கு வரவேண்டும் என்றும், அவன் தஞ்சைக்கு வர அவள் தடையாக இருப்பதாக கருதினால், தான் அங்கிருந்து போய்விடுவதாக கூறி அவனிடம் வருந்தினாள். ஆதித்த கரிகாலன் நந்தினியின் வலையில் முழுதாய் விழுந்தான்.வந்தியத்தேவன் செயலற்று நிற்க, உணவுக்கு அழைக்க வந்த மணிமேகலை அவனை சமாதானப் படுத்த முயற்சி செய்து அவனையே பார்க்க, அவன் இந்த ஏமாற்றத்தை தாங்கவியலாமல் உள்ளக் கொந்தளிப்புடன் இருந்தான். உணவுக்குப் பின் மணிமேகலை பாட அனைவரும் ரசித்துக் கொண்டிருக்கையில் அவளின் பார்வை தன்மீதே இருப்பதைக் கண்ட வந்தியத்தேவன் அவள் மீது பரிதாபம் கொண்டான். அப்போது புயலும் மழையும் சூழ்வதைப்போல தோற்றம்உண்டாக, படகும் கட்டி வைத்திருந்த இடத்திலிருந்து காணாமல் போயிருந்தது. எப்படிப் போவது என்று அனைவரும் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது சம்புவரையர் இரு பெரிய படகுகளை எடுத்துக்கொண்டு வந்து அனைவரையும் அழைத்துச் சென்றார். நான்காம் பாகம் முற்றிற்று.

பொன்னியின் செல்வன். 20

பொன்னியின் செல்வன். 20

நான்காம் பாகம் தொடர்ச்சி.. நாகப்பட்டினத்திலிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கோடியக்கரைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். தன் அத்தைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காகவும் பொன்னியின் செல்வன் மீதான தன் அன்பிற்கு ஏற்பட்டிருக்கும் தடைகளாலும் பூங்குழலி அரச குடும்பத்தினர் மீது பெருங்கோபம் கொண்டிருந்தாள்.சேந்தன் அமுதன் அவளை மணக்கும் ஆசையை வெளியிட்டதற்கும் சரியாக பதில் கூறவில்லை. அப்போது ஊமைராணி மந்தாகினி எதிர்ப்பட்டாள்.. சேந்தன் அமுதனைக் கண்டு சிறிது கலவரப்பட்டாலும் பூங்குழலி எடுத்துச் சொன்னவுடன் ஊமைராணி அவர்களிடம் நெருங்கி வந்தாள். பின், சேந்தன் அமுதனை அழைத்துக் கொண்டு, வீட்டுக்கு சென்று ஊமைராணிக்கு உணவெடுத்துக் கொண்டு வரலாம் என்று கிளம்பினாள். வழி நடுவில் அண்ணி ராக்கம்மாளும் இன்னொரு ஆணும் புதர் மறைவில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தார்கள். பூங்குழலியைப் பார்த்ததும் ராக்கம்மாள் மட்டும் வெளிப்பட்டு ஊமை ராணி பற்றி அறிந்து கொள்ள கேள்விகளால் துளைத்ததற்குச் சமாளித்துப் பூங்குழலி பதில் கூறினாள். பிறகு சேந்தன் அமுதனைத் தஞ்சைக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தாள். உணவெடுத்துக் கொண்டு கிளம்புகையில், அவள் தந்தை தியாகவிடங்கர், தன்னை அரசாங்க காரியங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியது மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. ஊமை ராணி மந்தாகினியுடன் படகில் செல்லும்போது திடீரென சிலர் வந்து பூங்குழலியை கட்டிப் போட்டுவிட்டு ஊமைராணியை பலவந்தமாகக் கூட்டிச் சென்றனர். கடத்தியவர்களில் தலைவனாக இருந்தவன் முன்பு வந்தியத் தேவனுடன் வந்திருந்த பழையாறை வைத்தியர் மகனாகிய பினாகபாணி. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சேந்தன் அமுதன் பூங்குழலியை அவிழ்த்து விட்டுவிட்டு தான் அங்கு திரும்பி வந்த கதையைக் கூறினான். அவளின் அண்ணியை கட்டிப் போட்டு இருந்ததைப் தஞ்சை செல்லும் வழியில் பார்த்ததாகக் கூறி, சந்தேகப்பட்டு பின் தொடர்ந்து வந்ததாகவும், ஊமைராணியைத் தஞ்சை செல்லும் வழியில் காவலர்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறினான். இருவரும் தஞ்சை போகும் சாலையில் ஊமைராணியைத் தேடிச் சென்றனர்.மன்னரின் முன்னிலையில் தன் அத்தைக்கு நியாயம் கேட்கப் போவதாக பூங்குழலி புலம்பிக் கொண்டே வந்தாள். இருட்டும் நேரத்தில் தஞ்சைக்கு அருகே மழைவரத் தொடங்கியதும் இருவரும் ஒரு மண்டபத்தில் ஒதுங்கினர். அருகே மரம் ஒன்று விழுந்து கிடந்தது. பல்லக்கு ஒன்று மண்டபத்தின் முன்பு இறக்கி வைக்கப் பட்டிருந்ததையும். அந்தப் பல்லக்குத் தூக்கி வந்தவர்கள் மேல்தான் மரம் விழுந்திருக்கிறது என்றும் அதனால் பல்லக்கு தூக்கி வந்தவர்கள் கூட்டத்தில் குழப்பம் நிலவியதையும் தூர இருந்தே மின்னல் வெளிச்சத்தில் பார்த்தனர். அங்கிருந்து பல்லக்கை இவர்கள் இருந்த இட த்திற்கே கொண்டு வந்து இறக்கி வைத்தனர். சிறிது நேரம் கழித்து பல்லக்கிலிருந்து ஊமைராணி இறங்கி பூங்குழலியை தனியாக அழைத்து ஏதோ ஊமைபாஷையில் பேசினாள். அந்த இருட்டிலும் அதைப் புரிந்து கொண்ட பூங்குழலி சேந்தன் அமுதனை அழைத்து ஊமைராணி அவளுக்கு பதிலாக பல்லக்கில் தன்னைப் போகச் சொன்னதாகவும், சேந்தன் அமுதன் வீட்டுக்கு ஊமைராணியைக் கூட்டிப் போகச் சொல்லிவிட்டதாகவும் சமிக்ஞையில் சொன்னதாகக் கூறினாள். பயந்து போன சேந்தன் அமுதனை, ஊமைராணியின் ஏற்பாடு சரியாகத்தான் இருக்கும் என்றும் சமாதானப் படுத்திவிட்டு பல்லக்கில் ஏறி அமர்ந்தாள். இந்த நாடகத்தை எல்லாம் இன்னொரு நபரும் மண்டபத்து இருள் மூலையில் இருந்து பார்த்து கொண்டிருந்தது இவர்களுக்கு தெரியாது. ஆழ்வார்க்கடியான் முதன்மந்திரியை மறுநாள் காலையில் சந்தித்து அவரின் கட்டளைப்படி ஆதித்த கரிகாலனை சந்தித்தும் அவனது கடம்பூர் பயணத்தை தடுக்க முடியவில்லை என்பதைத் தெரிவித்தான். அப்போது முதன் மந்திரி, திருமலையால் முடியாது என்று கைவிட்ட காரியமான ஊமைராணியை வைத்தியர் மகன் மூலம் தான் கொண்டு வந்து அந்தப்புரத்தில் தங்க வைத்திருப்பதாகக் கூறி தன்னுடன் வந்து அவருடன் பேச உதவுமாறு ஆழ்வார்க்கடியானைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்தப்புரத்தில் ஊமைராணிக்கு பதிலாக பூங்குழலியைக் கண்டு அதிர்ந்தவர், பூங்குழலியின் துடுக்குப் பேச்சால் கோபமுற்றார். ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதனுடன் ஊமைராணி சென்றதை மண்டபத்தில் தான் மறைந்திருந்து பார்த்ததாகவும், பழுவூர் ஆட்களின் பல்லக்கு என்பதால் தான் தடுக்க முயலாமல் அமைதியாக இருந்து விட்டதாகவும் கூறினான். சேந்தன் அமுதன் குடிசையில்தான் மந்தாகினி இருப்பார் என்றும் திருமலை கூறினான். அப்போது குந்தவையும், வானதியும் வந்தனர். பூங்குழலியைக் கண்டு குந்தவை வெகுவாக ஆச்சரியப்பட்டாள். அநிருத்தர் நடந்ததைக் கூற, ஊமைராணி தஞ்சைக்கு வந்துவிட்டதை அறிந்த குந்தவை உடனே இங்கு அவளைக் கூட்டி வருமாறு பரபரப்புற்றாள். அப்போது ஆழ்வார்க்கடியான் பூங்குழலியால் மட்டுமே அது இயலும் எனச் சொல்ல, ஆழ்வார்க்கடியானையும் பூங்குழலியையும் மந்தாகினியை கூட்டிவர அனுப்பினார் அநிருத்தர். வானதியை தனியே அனுப்பிவிட்டு குந்தவை முதன்மந்திரியிடம் தன் தகப்பனாரைப் பற்றிச் சொல்லி வருந்தினாள். தன் பெரியன்னையைப் பற்றிய உண்மையை தன்னிடம் சொல்லிவிட்டு, அவள் இறந்து விட்டதாக எண்ணி அவர் துயருறுவதைக் கூறி குந்தவை அழுதாள். இதைக் கேட்டு வேதனையுற்ற அநிருத்தர், தன் மீதே குற்றமென்றும், தாம்தான் ஊமைராணியாகிய மந்தாகினி தேவி இறந்து போனார் என்று அரசரிடம் பொய் சொன்னேன் என்றும் கூறி வருந்தினார். மேலும், செம்பியன் மாதேவியின் பாதுகாப்பில், மந்தாகினி சிலநாட்கள் இருந்தபோது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததையும் கூறினார். பேச்சுவாக்கில் அருள்மொழி உயிரோடு இருக்கும் விஷயத்தை குந்தவை சொல்லிவிட அது அனைவருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது என்றும் அநிருத்தர் கூறினார்.குந்தவை மதுராந்தகனுக்கு பட்டம் சூட்ட தந்தை விரும்புகிறார் என்பதையும், தனக்கும் அதில் ஆட்சேபணை இல்லை என்பதையும் கூற,செம்பியன் மாதேவி அதற்கு பெரும் தடையாக இருப்பார் என முதன் மந்திரி கூறினார். ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் ஊமைராணியை கூட்டிக்கொண்டு வரும் வழியில் கோட்டைக்குள் நுழைந்த போது மந்தாகினியை கூட்டத்தில் தவற விட்டு விட்டோம் என்ற செய்தியோடு திரும்பி வந்தனர். பதைபதைத்த குந்தவையிடம், கோட்டைக்குள் வந்த பிறகே காணாமல் போயிருக்கிறார் என்பதால் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு முதன்மந்திரி கிளம்பினார். மந்தாகினி தேவி பூங்குழலியுடன் வந்து கொண்டிருந்தபொழுது, கூட்டத்தில் ரவிதாஸனைப் பார்த்துவிட்டு, அவனைப் பின்தொடர ஆரம்பித்து விட்டார்.. ரவிதாஸனுடன் சோமன்சாம்பவனும் இணைந்து பழுவூர் அரண்மனையை அடைந்தனர். அங்கிருந்த பணிப்பெண்ணிடம் ஆந்தைக் குரல் கொடுத்து வரவழைத்து இளையராணியின் உத்தரவைச் சொல்லி பொக்கிஷ நிலவறையின் சாவியைப் பெற்றுக் கொண்டு உள்நுழைந்தனர். அவர்களுக்குத் தெரியாமலேயே மந்தாகினி தேவியும் உள்ளே நுழைந்து மறைந்து நின்று கொண்டார். பணிப்பெண் கொடுத்த சோற்று மூட்டையை எடுத்துக்கொண்டு எடுத்த காரியம் நிறைவேற மூன்று நாட்கள் ஆகுமென்பதால் இங்கேயே மறைந்திருக்க வேண்டும் என பேசிக்கொண்டார்கள். தீவர்த்தி கொண்டு வந்து கொடுத்த தாதியை ஒரு நாழிகை கழித்து வந்து கதவு திறக்குமாறு ரவிதாஸன் சொல்லிவிட்டு சோமன் சாம்பவனை அழைத்துக் கொண்டு படிகள் வழியாக கீழிறங்கி நிலவறைக்கு கூட்டிச் சென்றான். போகும் வழியில் ஒரு சுவரின் மீது ஏறினால் அங்கிருந்து அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என சோமன் சாம்பவனிடம் விவரித்தான். ரவிதாஸன் சோமன் சாம்பவனிடம் இன்று செவ்வாய். இன்னும் இரு நாட்கள்மறைந்து இருந்துவிட்டு, வெள்ளியன்றுதான், சுந்தரசோழரின் பட்டமகிஷி கோயிலுக்கு செல்லும்போது உன் காரியத்தை முடிக்க வேண்டும். சோழன் குலம் நிர்மூலமாகும் நாள் வெள்ளிக்கிழமைதான்.அதுவரை கவனமாக இரு’ என எச்சரித்து விட்டு ஒரு பாதாள அறையை திறந்து அதனுள் கூட்டிப் போனான். நடுவில் ஒரு இடத்தில் ரவிதாஸன் ஏறிப்பார்த்த இடத்தில் ஊமைராணி ஏறிப்பார்த்தார்.அப்போது பாதாளத் துளையில் இறங்கிய ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் எதிர்பக்கத்தில் ஒரு மூலையில் வந்து நின்றிருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்த போது மறைந்து கொண்டார். ரவிதாஸன் அங்கிருந்து சென்றதும் சோமன் சாம்பவன் திரும்பி வந்து அமர்ந்து கொண்டான். இருட்டும்போது தனியே இருப்பதால் லேசாய் பயந்திருந்தவன் மந்தாகினி ஓ’ வென எழுப்பிய ஓலத்தைக் கண்டு மேலும் பயந்து எதிர்திசையில் ஓடினான். அந்தத் தருணத்தில் அந்த பாதாள திறப்பில் இறங்கிய மந்தாகினி ஒரு சிற்பக் கூடத்தை அடைந்தார். அங்கே பகீரதன் சிலை, பத்துத்தலை ராவணன்சிலை போன்ற சிலைகளெல்லாம் கலையம்சத்துடன் அமைக்கப் பட்டிருந்தது. ராவணன் கைகளுக்கு இடையே இருந்த வழியின் வழியாகத் தான் வந்திருப்பது விலாசமான தோட்டம் என்று அறிந்து கொண்டாள். தோட்டத்தை ஒட்டி தாழவாரங்கள் தெரிந்தன. தாழ்வாரங்களைக் கடந்து செல்கையில் தீப ஒளி ஓரிடத்தில் தெரிய அங்கிருந்து பார்க்கையில் சுந்தரசோழரின் படுக்கையறை தெரிந்தது. எத்தனையோ காலங்களுக்கு பிறகு அவரைக் கண்டதும் மந்தாகினியின் உள்ளம் விம்மியது. முன்பு ரவிதாஸன் இங்கு நின்றுதான் சோமன் சாம்பவனிடம் திட்டத்தை விளக்கியதை நினைத்து ஒரு நிமிடம் மருண்டார். சின்னப் பழுவேட்டரையர் சற்றுமுன் முதன் மந்திரியைப் பற்றி சொல்லிப் போயிருந்த குற்றச்சாட்டுகளை சிந்தித்தவாறு படுத்திருந்தார் சுந்தர சோழர். கூடவே, வேளக்காரப் படையினருக்கும், பழுவூர் படையினருக்கும் ஏற்படும் சச்சரவுகளைப் பற்றியும் யோசித்து குழப்பமான மனநிலையிலிருந்தார்.அநிருத்தர் கோடியக்கரையிலிருந்து ஒரு பெண்ணை கடத்தி வந்ததாகவும் அதற்கு பழுவூர் அரண்மனைப் பல்லக்கை கேட்டதாகவும், குற்றங்களை அடுக்கியிருந்தார் சின்னப் பழுவேட்டரையர். தான் விசாரிப்பதாகக் கூறவும், சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அநிருத்தர் ஆழ்வார்க்கடியானுடனும் பூங்குழலியுடனும் சக்ரவர்த்தியை சந்திக்க வந்திருந்தார்.. மந்தாகினி தேவியை நழுவ விட்டது பற்றி அநிருத்தர் பெரிதும் கலக்கமுற்றிருந்தார். அநிருத்தரைக் கண்டவுடன் சக்ரவர்த்தியின் கோபமும் குமுறலாய் வெடித்தது. அனைவரும் தன்னிடமிருந்து எல்லாவற்றையும் மறைப்பதாக மருகினார். அனைவரையும் சந்தேகப்பட்டார். அநிருத்தர் தடுத்து அத்தனை உண்மைகளையும் கூறுவதாகக் கூறினார். முதலில், அருள்மொழியைக் காப்பாற்றிய பூங்குழலியை அழைத்து உண்மையைச் சொல்லும்படி கூறினார். பூங்குழலி தியாகவிடங்கரின் மகள் என்று தெரிந்துகொண்டு அவள் பயபக்தியுடன் அருள்மொழி வர்மர் பத்திரமாக இருக்கும்செந்தியைக் கூற சந்தரச் சோழர் சிறிது அமைதியுற்றார். ஆனால் தஞ்சையில் வீசிய காற்றும் மழையும் நாகப்பட்டினத்திலும் புயலாக வீசியதாய் கேள்விப்பட்டதில் இளவரசரின் நிலை குறித்து சுந்தரச் சோழர் அச்சமும் வருத்தமும் தெரிவித்தார். அநிருத்தர் ஆழ்வார்க்கடியானையும், பூங்குழலியையும் அனுப்பி இளவரசரை வரவழைக்க அனுமதி வழங்குமாறு வேண்டினார். பிறகு ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் பாசுரங்களையும், தேவாரத்தையும் பாட சுந்தரசோழர் ஒருவாறு அமைதியுற்றார். அவரை உறங்க வைத்துவிட்டு அனைவரும் அகன்றனர். சுந்தரசோழருக்கு பூங்குழலியின் முகச் சாயல் எதைஎதையோ நினைவுபடுத்த அவருக்கு பழைய நினைவுகள் உறக்கத்தில் கனவுகளாய் வரத் தொடங்கின. உறக்கமும் விழிப்புமான நிலையில் நிஜமாகவே தன் முன் யாரோ நிற்பதாக உணர்ந்தார். கூர்ந்து பார்க்கையில் அது மந்தாகினி தேவியின் ஆவிதான், வழக்கம் போல வந்து விட்டாள் என்றெண்ணி அலறிக் கொண்டே, பக்கத்திலிருந்த விளக்கை அவர் மேல் எறிந்தார். நிஜத்தில் அங்கே நின்றிருந்த மந்தாகினி மேல் அது

வாழ்வின் பொருள் என்ன?…

வாழ்வின் பொருள் என்ன?…

வழக்கம் போல் பெரிய செவ்வியல் தன்மை கொண்ட நாவல்களைப் படித்து முடித்ததும் மனதில் உண்டாகும் ஆழ்ந்த இனம்புரியாத கனத்துடன்தான் “ஒரு குடும்பம் சிதைகிறது” நாவலை வாசித்துமுடித்த பின்னும், அதன் முன் மௌனித்து அமைதியாக அமர்ந்திருந்தேன். இம்முறை மனது சற்று அதிகமாகவே அலைபாய்ந்தது. அந்த வாழ்க்கை…, அந்த மனிதர்கள்…, நஞ்சம்மா… மனம் ஏகத்துக்கும் விக்கித்துதான் போயிருந்தது. நாவல் அதீத சிந்தனைப் பின்னல்களையும், மன ஆழ விசாரங்களையும், தத்துவத் தேடல்களையும் கொண்டிராவிட்டாலும், அவை அத்தனையையும் வாசிக்கும்மனதிற்குள் உண்டாக்குவதுதான் அவ்வெழுத்தின் மாயம். பைரப்பாவின் எழுத்து பிரமிப்பையும், ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தியது. நிகழ்வுகள், நிகழ்வுகள்…மேலும் மேலும் வாழ்வின் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார் பைரப்பா. இயல்பான அதுவே வாசிக்கும்மனத்தை ஈர்த்து கிஞ்சித்தும் விலகவிடாமல் செய்கிறது. தி, ஜா-வின், அமி-யின், காரந்தின் எழுத்தில் வியக்க/கற்றுக்கொள்ள நுண்மைகள் இருப்பது போல், பைரப்பாவின் எழுத்திலும் அவ்வதிசயம் எங்கு, எப்படி நிகழ்கிறதென்று வியந்துகொண்டேயிருந்தேன். எச்.வி. சுப்ரமணியம் தமிழில் மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். நாவல் வெளியாகி அரை நூற்றாண்டானாலும், “ஒரு குடும்பம் சிதைகிறது” எக்காலத்திற்குமான செவ்வியல் நாவல். முக்குணங்களில் “தமஸ்”-ஐப் பற்றி அதிகம் படித்திருக்கிறேன்;பெரியவர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறேன். முதல் முறையாக தமஸே முழு மனித வடிவம் கொண்ட பாத்திரமாக “சென்னிகராய”ரை இந்நாவலில்தான் சந்தித்தேன். உணவிலும், உறக்கத்திலும் மட்டுமே பெரு விருப்பு கொண்ட ஒரு சுயநல ஜென்மம்.அம்மா, தம்பி, மனைவி, மகன்/மகள் யாருமே அவருக்கு அடுத்த பட்சம்தான். “நாவலில் சென்னிகராயரின் உணவுகள்” என்ற தலைப்பிலேயே ஒரு நீள்கட்டுரை எழுதலாம். நாவல் தலைப்பின் தன்மை/பிரதிபலிப்புகள், முதல் அத்தியாயத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகத்திலேயே துவங்கி விடுகிறது. வசைகளும், சாபங்களும் பல கதாபாத்திரங்களின் வாயிலாக நாவல் முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. எதிர்மறைகளின்பெரும்பான்மையில், நேர்மறை மூச்சுத் திணறுகிறது. வாழ்க்கைச் சக்கரத்தில், கதாபாத்திரங்களின் மரணங்கள் கூட வெகு இயல்பாக, சாதாரணமாக நாவலில் வந்து செல்கின்றன. பூ உதிர்கிறது; பிஞ்சு உதிர்கிறது; காய் உதிர்கிறது; கனி உதிர்கிறது. நல்லனவும்,நேர்மையும் இப்பூமியில் கஷ்ட ஜீவிதத்தில் குறை ஆயுளோடு அல்லலுற, தகிடுதத்தங்களும், ஏமாற்றும் தன்மையும், எதிரும் நீண்ட ஆயுளுடன் சிரிப்போடு பிழைக்கின்றன. காலம் தன் போக்கில் சுழன்று கொண்டிருக்கிறது. * 1920/30-களின் காலகட்டம். மைசூர் சமஸ்தானம், தும்கூர் ஜில்லா, திப்டூர் தாலுகா, கம்பனகெரே பிர்க்காவில் ராமஸந்திர கிராமத்தின் கணக்குப்பிள்ளை ராமண்ணாவிற்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு வருகிறாள் பதின் வயது கங்கம்மா.ஊரில் ஒரு சிவன் கோயிலும், ஆஞ்சநேயர் கோயிலும், இரு அம்மன் தேவதைகளும் (கிராம தேவதை காளம்மன், ப்ளேக் தேவதை சுங்கலம்மா) உண்டு. இரண்டு/மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊர் ப்ளேக் நோய் பரவலால் அவதிப்படும்;பிளேக் நோய் அறிகுறிகள் தென்பட்டதும் ஊர் மொத்த ஜனமும் ஊரைக் காலிசெய்து ஊருக்கு வெளியே கொட்டகை போட்டு தங்கிவிட்டு, பிளேக் முடிந்ததும் ஊருக்குள் வருவார்கள். ராமண்ணாவிற்கும் கங்கம்மாவிற்கும் முப்பது/முப்பத்தைந்து வயது வித்தியாசம். அவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவன் சென்னிகராயன்; இளையவன் அப்பண்ணய்யா. கங்கம்மாவின் இருபத்து ஐந்தாவது வயதில் ராமண்ணா இறக்கும்போது சென்னிகராயனுக்கு 9 வயது; அப்பண்ணய்யாவிற்கு 7 வயது. சட்டப்படி கிராமத்தின் கணக்குப்பிள்ளை வேலை, தந்தை இறப்புக்குப் பின் மூத்த மகனுக்கு வரவேண்டும். சென்னிகராயனுக்கு அப்போது 18 வயது ஆகவில்லையென்பதால் தற்காலிகமாக மணியக்காரர் மைத்துனன் சிவே கவுடன் அந்த வேலையைப் பார்த்து வருகிறான். பையன்கள் இருவருக்கும் படிப்பில் நாட்டமில்லை. கங்கம்மா மூர்க்க குணம் படைத்தவள். எப்போதும் வசைகளும், சாபங்களும், கெட்ட வார்த்தைகளுமே அவள் நாவில் நடமாடும். அவளின் வளர்ப்பு இரண்டு மகன்களிடமும் பிரதிபலிக்கிறது. படிக்க பள்ளிக்கூடம் செல்லச் சொல்லும் அம்மாவின் மீது கோபம் கொண்டு சொந்த வீட்டின் ஓட்டுக் கூரையையே இரவில் உலக்கையால் சேதப்படுத்துகிறார்கள். சென்னிகராயன் சோம்பேறி; சுயநலமி; போஜனப் பிரியன். அப்பண்ணய்யா அவனளவிற்கு இல்லையென்றாலும் அவனும் மூடன்தான்.அக்காலத்தில் பெண்கள் வயதுக்கு வருமுன்னே திருமணம் செய்கிறார்கள் (மகள்கள் பெரியவளாகும் வரை திருமணம் நடக்கவில்லையென்றால் அம்மாக்கள் கவலைப்படுகிறார்கள்); பின்னர் மணப்பெண் பெரியவளானதும் சீர்வரிசையோடு புக்ககம் வருவது வழக்கம்.நாகலாபுரம் கிராமத்தின் புரோகிதர் கண்டி ஜோசியரின் மகள் பனிரெண்டு வயது நஞ்சம்மாவிற்கும், பதினெட்டு வயது சென்னிகராயருக்கும் திருமணம் நடக்கிறது. கிராமத்தின் கணக்குப் பிள்ளை வேலையை திருப்பித் தர மறுக்கும் சிவலிங்கனிடமிருந்து,அவனை மிரட்டி அந்த வேலையை சென்னிகராயனுக்கு வாங்கித் தருகிறார் கண்டி ஜோசியர். வருடங்கள் உருண்டோடுகின்றன. சென்னிகராயனுக்கு கணக்குப் பிள்ளை வேலையை சரியாகச் செய்யத் தெரியவில்லை. நஞ்சம்மாதான் பார்த்துக் கொள்கிறாள். மாமியாரின் குணத்தினாலும், கணவனின் விட்டேற்றித் தனத்தினாலும் நஞ்சம்மா புகுந்த வீட்டில்சிரமங்களை அனுபவிக்கிறாள். அவ்வீட்டை கட்டிக் காக்கும் பொறுப்பு அவள் தலை மேல் விழுகிறது. தாய் மகன்களின் நடவடிக்கைகளால் அவ்வீட்டின் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் கைவிட்டுப் போவதை நஞ்சம்மா எவ்வளவு முயன்றும் தடுக்க முடிவதில்லை.நஞ்சம்மாவின் வீடெதிரில் இருக்கும் கோயிலில் வசிக்கும் பிரம்மச்சாரி பெரியவர் மாதேவய்யாவும், குருபரஹள்ளி குண்டே கவுடரும் அவர் மனைவி லக்கம்மாவும் நஞ்சம்மாவிற்கு ஆதரவாய் உதவிகள் செய்கிறார்கள். கடூர் வட்டம் நுக்கிகெரே கிராமத்தின் சியாம பட்டரின் மகள் சாதம்மாவை மணக்கிறான் இளையவன் அப்பண்ணய்யா. நஞ்சம்மாவின் பிறந்த வீட்டில் அவள் பாட்டி அக்கம்மாவும் (கண்டி ஜோசியரின் அம்மா), அண்ணன் கான்ஸ்டபிள் கல்லேசனும் வசிக்கிறார்கள்.கல்லேசனுக்கு, கண்டி ஜோசியர் ஹாசனைச் சேர்ந்த கமலாவைத் திருமணம் செய்து வைக்கிறார். கமலாவிற்கு கல்லேசனையும், நாகலாபுரம் கிராமத்தையும் பிடிப்பதில்லை. கால ஓட்டத்தில் நஞ்சம்மாவிற்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் பார்வதி, அடுத்தது ராமண்ணா (படிப்பிலும், சாமர்த்தியத்திலும் கெட்டி), மூன்றாவது விஸ்வநாதன் (விசுவன்). சாதம்மாவிற்கு இரண்டு குழந்தைகள்; மூத்தவள் ஜெயலட்சுமி, அடுத்து ராமகிருஷ்ணன்.கிராமத்தில் இன்னும் பல கதாபாத்திரங்கள்; வீட்டுத் திண்ணையில் கடை வைத்து நடத்தும் சென்ன செட்டி, அவர் மகன் கிரியன், கிரியனின் மனைவி நரசம்மா (மூவருக்குமான ஒரு அட்டகாசமான பஞ்சாயத்துக் காட்சி நாவலில் வருகிறது!). ஊருக்குள் பகட்டாகத்திரியும், கடன் வாங்கிச் சூதாடும் ரேவண்ண செட்டி, அவன் மனைவி சர்வக்கா. குடும்பத்தை நிலைநிறுத்த, குழந்தைகளை வைத்துக்கொண்டு நஞ்சம்மா எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறாள். பட்டினி கிடக்கிறாள்; கணவனின் கணக்குப்பிள்ளை வேலைகளைச் செய்கிறாள்; அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது, எப்படி காலம்தள்ளுவது என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறாள். புரச இலை தைத்து விற்கிறாள்; பஞ்சகாலத்தில் ஏரிப் படுகையில் தாமரைக் கிழங்கு தோண்டி உணவுக்குப் பயன்படுத்துகிறாள். அவள் சிரமப்பட்டு எழுந்து நிற்க முயலும் ஒவ்வொரு முறையும் விதிஅவளைக் கீழே தள்ளுகிறது. * நாவலில் எனக்கு மிகப் பிடித்த பகுதி, நஞ்சம்மா மகன் விஸ்வனுடன் மேற்கொள்ளும் சிருங்கேரிப் பயணம். மனம் நெகிழ்ந்து கண் நிறைந்த காட்சி, தினமும் பத்து மைல்கள் நடந்து பள்ளிக்குச் சென்று வரும் ராமண்ணா, ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில்இருட்டக் காத்திருந்து வீட்டில் பசியோடிருக்கும் எல்லோருக்கும் சேர்த்து பலாக்காய் திருடிக் கொண்டு வரும் காட்சி. மனதைக் கலங்கடித்த பகுதி அம்மா பிளேக்கினால் இறந்து பல மாதங்களான பின்னும், இன்னும் அதை நம்ப முடியாமல், மாதேவய்யாவுடன் ஊர்விட்டுக் கிளம்பும் கடைசிக் காட்சியில், தன் வீட்டிற்குள் போய் எல்லா இடங்களிலும் “அம்மா…அம்மா” என்று விஸ்வன் அழைக்கும் காட்சி. திருமணம் முடிந்து முதலிரவு கூட நடக்காத குழந்தை பார்வதியை பிளேக்கிற்குப் பறிகொடுத்து, அவளை மயானத்தில் எரித்து விட்டு வருவதற்குள் மகன் ராமண்ணாவும் பிளேக் காய்ச்சலினால் இறக்க மனம் நிலைகுலையும் நஞ்சம்மா அன்றிரவில் தற்கொலைசெய்துகொள்ள ஊர்க் கிணற்றின் விளிம்புச் சுவற்றின் மேல் ஏறி நிற்கிறாள்…அவள் மனம் அக்கிராமத்திற்கு அவள் மணம் முடித்து வந்த நாளிலிருந்து இப்போது வரையிலான அவளின் துயரங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறது… கூட்டுக் குடும்பங்கள் சிதைதலுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.. இல்லாமையும் வறுமையும் பிரதானமாக இருக்கும் என்ற புரிதலை நாவல் நம்மில் இறக்குகிறதோ.. வெங்கி “ஒரு குடும்பம் சிதைகிறது” – எஸ். எல். பைரப்பாகன்னட மூலம் – “Griha Bhanga”தமிழில்: எச். வி. சுப்ரமணியம்நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

பொன்னியின் செல்வன் – 19

பொன்னியின் செல்வன் – 19

நான்காம் பாகம் – மணிமகுடம் நந்தினியின் முடங்கலைக் காட்டி, கந்தன்மாறன் ஆதித்த கரிகாலனை பார்த்திபேந்திரன் தூண்டுதலோடு கடம்பூருக்கு விருந்தாளியாக அழைத்து வந்துகொண்டிருந்தான்.நந்தினியை ஒரு தடவை சந்தித்துவிடுவது அவளைப் பற்றிய பல புதிர்களுக்குப் பதில்கள் தேட உதவலாம் என்பதால் ஆதித்த கரிகாலனும் சம்மதித்து இந்தப் பயணத்திற்கு உடன்பட்டான். கெடில நதியின் துறையில் கரிகாலனின் பாட்டனாரான மிலாடுடையார் அவனைத் தனியே அழைத்து இந்தப் பயணத்தை நிறுத்த இறுதியாக ஒரு முயற்சி செய்தார். கரிகாலன் உடன்படாததால், ‘வள்ளுவர் கூற்றின்படி தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் ஆயுதம் மறைந்திருக்கும். நண்பர்கள் போலச் சூழ்ந்திருக்கும் எதிரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்’ என்று அறிவுரைகள் கூறிவிட்டு, தான் திருக்கோவலூர் சென்று வெண்ணாற்றங்கரைக்குப் படையுடன் திரும்பிவருவதாகச் சொல்லி வருத்தமுடன் விடைபெற்றார். வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் அந்த மழைக்கால கொள்ளிட நீர்ப்பெருக்கில் தங்கள் உடைமைகள் அனைத்தையும் தவறவிட்டுவிட்டார்கள். மேற்கொண்டு செல்லக் குதிரையில்லாமல் கடம்பூருக்கு அருகில் நடந்தே வந்து சேர்ந்தனர். ஆதித்த கரிகாலர் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை எனத் தெரிந்துகொண்டார்கள். கோட்டையின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஐயனார் கோவில் ஒன்றைக் கண்டதும் இரவை அங்கேயே தங்கிக் கழித்துவிடலாம் என்று கோவிலை நெருங்கினார்கள். அப்போது அங்கிருந்த மண் குதிரைகளில் ஒன்று நகர்ந்தது. அதன் பிலத்தில் இருந்து, கடம்பூர் மாளிகையின் சேவகனும் ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்தவனுமான இடும்பன் காரி எழுந்து வருவதைப் பார்த்து இருவரும் ஒருபுறம் மறைந்துகொண்டனர்.அவன் கோவிலுக்குள் விளக்கேற்றி வைத்ததைப் பார்த்ததும் இங்கே யாரேனும் வருவார்கள் என ஆழ்வார்க்கடியான் கூறினான். வந்தியத்தேவன் வழக்கம்போல ஆர்வம் உந்த, அந்தப் பிலத் துவாரத்தில் இறங்கிப் பார்ப்பதாகக் கூறி அந்தத் துவாரத்துக்குள் சட்டெனப் புகுந்துவிட்டான். புகுந்த சற்று நேரத்தில் அந்தச் சுரங்க வழியை வெளியிலிருந்து இடும்பன் அடைத்துவிடவே சுரங்க வழி இருள் வழியாக மாறிவிட்டது. வெகுதூரம் சென்றபிறகு அந்த வழி சம்புவரையரின் அரண்மனையில் உள்ள ஒரு மண்டபத்தில் முடிந்தது. சுற்றிலும் காட்டு மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உருவங்கள் அந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு வல்லவரையன் முதலில் மிரண்டாலும் அது வேட்டை மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உருவங்களையும் ஆயுதங்களையும் சேர்த்து வைக்கும் மண்டபம் என்பதை அறிந்துகொண்டான். அங்கிருந்த யானை உருவம் ஒன்றின் தந்தத்தைத் தன்போக்கில் திருகியதும் சுவரில் ஒரு துவாரம் தெரிந்தது. அதில் எட்டிப்பார்க்க, ஒரு அழகிய பெண்ணின் முகத்தோடு முத்தமிடுவது போன்ற தோற்றத்தில் தன் முகமும் தெரிய, வந்தியத்தேவன் அதிர்ந்து போய்ச் சிலையாய் நின்றான். அந்தப் பெண் சிறிதாய் ‘கூ’வெனக் கூவினாள். இவன் பயந்து யானை மீதிருந்து கையை எடுக்க, துவாரம் பழையபடி மூடிக்கொண்டது. கந்தன்மாறனின் தங்கையான மணிமேகலைதான் அந்தப் பெண் என்று வந்தியத் தேவனுக்குத் தெரிந்துவிட்டது. மணிமேகலை கள்ளம் கபடு தெரியாமல் வளர்ந்த பெண். வந்தியத்தேவனைப் பற்றி அவளிடம் பெரிதாகப் பேசி அவன் மீது ஆசையை வளர்த்துவிட்டவன் கந்தமாறனே. பிறகு அவனே அரசியல் அழுத்தங்களில் சிக்கி வந்தியத்தேவன் நாடோடி என்றும் தன்னை முதுகில் குத்திய துரோகி என்றும் கூறி அவனை மறந்துவிடுமாறு கூறி வந்தான். பின்பு மதுராந்தகருக்கு அவளை மணம் செய்து வைப்பதாகப் பேசினார்கள். இப்போதோ விருந்தாளியாக வரப்போகும் இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு மணிமேகலையை மணமுடிக்கப் போவதாக கூறத் தொடங்கினார்கள் இந்தப் பேச்சுகளெல்லாம் முன்பொருமுறை கந்தன் மாறன் அந்தப்புரத்திற்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்திய வாலிபனின் உருவத்தைத் தன் நெஞ்சில் பதிந்து வைத்துக்கொண்ட மணிமேகலைக்குப் பிடிக்கவில்லை. அவள் இந்தத் திட்டங்களை மறுத்து வந்தாள். பழுவேட்டரையரும் இளையராணியும் வரப்போவதாகவும் சிற்றரசர்கள் அனைவரும் சேர்ந்து, வரவிருக்கும் ஆதித்த கரிகாலனிடம் சமரசப் பேச்சு நடத்தப் போவதாகவும் அரண்மனையில் பேசிக்கொண்டார்கள். நந்தினி தங்குவதற்காக வேட்டை மண்டபத்தை அடுத்த அறையைத் தயார் செய்துகொண்டிருந்தபோதுதான் யானைமுகக் கதவைத் திறந்துகொண்டு அந்த அறைக்குள் தலைகாட்டிய வந்தியத் தேவனின் முகத்தை ஆடியில் பிம்பமாகத் தெரிந்த தன் முகத்தை முத்தமிடுவது போலான நெருக்கத்தில் பார்த்துக் கூவிவிட்டாள் மணிமேகலை. உடனே அந்த முகமும் மறைந்துபோய்விட்டது. தொடர்ந்து வேட்டை மண்டபத்தில் சந்தடிகள் கேட்டன. தன் தோழி சந்திரமதியை அழைத்து விளக்கு எடுத்துவருமாறு மணிமேகலை பணித்துவிட்டு உள்ளே நுழைய முயன்றாள். வந்தியத்தேவன் வேட்டை மண்டபத்தில் இருந்து வெளிவர யோசித்துக்கொண்டிருக்கும் போது, இடும்பன் காரி ஒரு முதலையை வைத்து மூடியிருந்த ரகசிய வழியைத் திறந்துகொண்டு மேலே வருவதைப் பார்த்தான். உடனே வந்தியத்தேவன் ஒரு குரங்கின் பின் ஒளிந்துகொண்டான். மணிமேகலை உள்ளே வருவதைப் பார்த்தவுடன் இடும்பன் காரி விலங்குகளைத் துடைப்பதுபோல நடித்தான். மணிமேகலை விசாரித்ததற்கு, தான் இங்கு வெகுநேரமாக இருப்பதாக இடும்பன்காரி கூற மணிமேகலை கதவைத் திறந்தபடி வெளியே சென்றுவிட்டாள். அப்போது இடும்பன்காரியைத் தொடர்ந்து பின்னே வருபவர்களின் பேச்சுச் சத்தமும் கேட்க, வந்தியத்தேவன் அந்தக் குரங்கு பொம்மையை இடும்பன்காரியின் மேல் தள்ளி அந்தத் துவாரத்தில் விழுமாறு செய்துவிட்டு யானையின் தந்தத்தைத் திருகி அந்தச் சிறிய துவாரத்தின் வழியே வெளியேற முயன்றான். இடுப்பு வரை வந்தாலும் பாதிக்குமேல் வெளியே போக முடியாமல் தவித்தவனுக்கு மணிமேகலை கை கொடுத்து அறைக்குள் இறக்கிவிட்டாள். வந்தியத்தேவனிடம், ‘தன்னை முதுகில் குத்திய சிநேகத் துரோகி’ என்ற கந்தமாறனின் குற்றச்சாட்டை மணிமேகலை விசாரித்தாள். வந்தியத்தேவன் அதை மறுத்து, கந்தமாறனின் முன்னிலையில் இதைக் கேட்குமாறு கூறினான். கந்தமாறன் ஆதித்த கரிகாலனை அழைத்துவரப் போயிருப்பதாகவும் அவர்கள் வரும்வரை ஆயுத சாலையில் மறைந்திருக்குமாறும் மணிமேகலை கூறினாள். இதற்குள் வேட்டை மண்டபத்தில் நடமாட்டம் அதிகமாகக் கேட்க, அங்கிருந்த வாத்தியக் கருவிகள் வைத்திருக்கும் யாழ் களஞ்சியத்தில் மறைந்திருக்குமாறு சொல்லிவிட்டு மணிமேகலை வேட்டை மண்டபத்துக்குள் சென்றாள். அதற்குள் மணிமேகலையின் தோழி அறைக்குள் வந்து விடவே, வந்தியத்தேவன் யாழ் களஞ்சியப் படிகளில் ஏறத்தொடங்கினான். முடிவில் மேன்மாடத்திற்கு வந்துவிட்டான். முந்தைய முறை வந்தியத்தேவன் வந்தபோது, தான் படுத்திருந்த மேல் மச்சு அதுதான் என்று அறிந்துகொண்டு நிம்மதி அடைந்தான். அங்கிருந்த நிலா மாடத்திலிருந்து பார்க்கையில் கடம்பூர் அரண்மனை வாசலில் பெரிய பழுவேட்டரையரை ராஜோபசாரத்துடன் வரவேற்பது தெரிந்தது. மதிலைத் தாண்டிவிடுவோம் என்றெண்ணி ஒரு மூங்கில் கழியைப் பிடித்து ஏறி கோட்டை மதிலை விட்டு இறங்கியபோது தேவராளன் தன் நாயுடன் அவனைத் தாக்கத் தயாராய் இருக்க, வந்தியத்தேவன் அவன் மீதே குதிக்க, ஆழ்வார்க்கடியானும் உதவிக்கு வர, இருவரும் சேர்ந்து நாயையும் அவனையும் காட்டுக் கொடிகளால் கட்டிப்போட்டனர். மதிலின் ஓரமாகவே இருவரும் வெளியேறினார்கள். அச்சமயம் அங்கு வந்த கடம்பூர் வீரர்களின் குதிரைகளைப் பறித்துக்கொண்டு விரைந்தனர். ஆதித்த கரிகாலர் கோட்டையை நெருங்குவதற்கு முன்னமே அந்த வழியில் சென்று அவரைச் சந்தித்தார்கள். ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனைக் கண்டதும் மகிழ்ந்ததைக் கண்டு பார்த்திபேந்திரனும் கந்தமாறனும் அசூயை அடைந்தார்கள். கந்தமாறன் தன் முதுகில் குத்தியவன் எனக் குற்றம் சாட்ட, வந்தியத்தேவன் தானே அவனைக் காப்பாற்றியதாகவும் அவன் முதலில் எதற்காக பொக்கிஷ அறைச் சுரங்கத்தின் வழியே வந்தான் எனவும் யாரைக்கூட்டி வந்தான் என்பதையும் சொல்லுமாறு கேட்க கந்தமாறன் மெளனம் சாதித்தான். உடனே பார்த்திபேந்திரன், வந்தியத்தேவனுக்காகத்தான் இளவரசர் அருள்மொழி கடலில் குதித்ததாகவும் இப்பொழுது இவன் மட்டும் தப்பி வந்தது எப்படி என்று கேட்குமாறு குற்றஞ்சாட்டினான். வந்தியத்தேவன் அவனை முந்திக்கொண்டு, பார்த்திபேந்திரன் எப்படித் தனியாகக் கடலில் குதிக்க இளவரசரை அனுமதிக்கலாம் என்று திருப்பிக் கேட்க, ஆதித்த கரிகாலர் பெரிதாகச் சிரித்தார். ஒரு தருணத்தில் தன் கையிலிருந்த வேலால் கந்தமாறன் வந்தியத்தேவனைத் தாக்க முயல அந்த வேலைக் கரிகாலர் பிடுங்கித் தன் இரும்பையொத்த கரங்களால் முறித்துப் போட்டார். வியப்பாகப் பார்த்த அனைவரிடமும், தன் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளக் காரணம் இளையராணியின் மோகன சக்திதான் எனவும் தனக்கு அதைப் பற்றித் தெரியும் என்பதால் இத்துடன் இந்தப் பேச்சை நிறுத்துமாறும் கூறினார். ஆழ்வார்க்கடியானை முன்பே பார்த்திருப்பதாகக் கூறி விசாரிக்க, வீரபாண்டியன் இருக்கும் இடத்தைத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது மறைவிடத்திலிருந்து ஆதித்த கரிகாலருக்கு அந்த இடத்தைச் சொன்னது தானே எனக் கூறினான் திருமலை.ஆவேசமடைந்த ஆதித்த கரிகாலர் அவனை வெட்ட வர, வந்தியத் தேவன் குறுக்கிட்டு, அவன் முதன்மந்திரியின் தூதன் எனவும் அவருக்கு சேதி கொண்டுவந்திருப்பதாகவும் கூறினான். அமைதியடைந்த கரிகாலன் அவர்களைக் குதிரையில் தன்னுடன் இருபக்கமும் வருமாறு கூறி அவர்களுடன், நடந்த செய்திகளை எல்லாம் கேட்டவாறே பயணத்தைத் தொடர்ந்தார். பழுவூர் இளையராணியைச் சந்தித்த மணிமேகலைக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது. நந்தினியும் பாசத்தை அவள்மீது சொரிந்து, தன்னை அக்காவென அழைக்கும்படிக் கூறினாள். அவளை முழுமையாக நம்பிய மணிமேகலை அவளிடம் மனதைத் திறந்தாள். வந்தியத்தேவனே அவள் மனதில் குடிகொண்டுள்ளவன் என்பதைக் கூறினாள். மேலும் வந்தியத்தேவனை இந்த அறையில் பார்த்ததையும் இடும்பன் காரியை விசாரிக்க உள்ளே செல்கையில் அவன் காணாமல் போய்விட்டதையும் சொல்லி, தனது காதல் வெற்றி பெற அவளுக்கு உதவியாய் இருக்கவேண்டுமென நந்தினியைக் கேட்டுக்கொண்டாள். ஆதித்த கரிகாலர் தன் பரிவாரங்களுடன் வர சம்புவரையரும் பழுவேட்டரையரும் மாளிகை வாசலில் அவர்களை எதிர்கொண்டழைத்து வரவேற்றார்கள். சுற்றியுள்ள ஊர்களில் இருந்தெல்லாம் மக்களின் கூட்டம் குவிந்திருந்தது. ஆதித்த கரிகாலன் அவர்களிடம் இளவரசனாகப் பேசினான். ஆதித்த கரிகாலன் மாளிகைக்குள் வந்ததிலிருந்தே ஒருவாறு நிலையழிந்ததாகக் காணப்பட்டான். பழுவேட்டரையரையும் சம்புவரையரையும் சொற்களால் குத்திக்காட்டிப் பேசினான். அனைவரும் அவனை சமாதானப் படுத்தும் வழிதெரியாது நிற்கையில், பார்த்திபேந்திரன் தான் பார்த்துக் கொள்வதாகக் கூற, அவனையும் சதியில் கூட்டு சேர்ந்து விட்டாயா எனக்கேட்டு அதிர வைத்தான் கரிகாலன். நந்தினியைக் கண்டு வணங்கி பழுவூர் பெரிய பாட்டிக்கு வணக்கமெனச் சொல்ல, அவளின் கூரிய பார்வையைத் தாங்காமல் தாண்டிச் சென்றான். சம்புவரையரிடம் தன் தாத்தா இரவில் தூங்கினால் பகைவர்கள் சூழ்வர் என்று சொல்லி எச்சரித்து அனுப்பியிருப்பதைச் சொல்லி சிரித்தான். பழுவேட்டரையரிடம், அவர் மூடுபல்லக்கில் மதுராந்தகனைக் கூட்டி வந்ததைச் சொல்லி எள்ளி நகையாடியதைப் பார்த்தவர்கள் அனைவரும் அவனது நடவடிக்கையைக் கண்டு நடுங்கினர். அவனை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். சம்புவரையரையும், பழுவேட்டரையரையும் தன் சொற்களால் வதைத்தான். பின் சிற்றரசர்கள் கூட்டம் நடக்கப் போவதை அறிந்துகொண்டு எல்லோரிடமும் ஆலோசனை செய்து விடலாம் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.