பொன்னியின் செல்வன் – 30

பொன்னியின் செல்வன் – 30

மதுராந்தகன் கொடிய எண்ணங்களுடன் சேந்தன் அமுதன் குடிசையை நோக்கிச் செல்கையில், பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்துடன், கருத்திருமன் மதுராந்தகனை மறிப்பதுபோலக் குறுக்கிட்டான். தன் கையிலிருந்த குறுவாளை, கருத்திருமனை நோக்கி மதுராந்தகன் ஓங்கினான். உடனே கருத்திருமன், தான் அவனுக்கு எதிரியல்ல என்றும் அவனுக்கு உதவுவதற்காகவே வந்திருப்பதாகவும் கூற, மதுராந்தகன் திகைத்தான். தன்னை மதுராந்தகனின் தந்தையாருடைய உண்மையான ஊழியன் என அறிமுகப் படுத்திக்கொண்ட கருத்திருமன், மதுராந்தகனின் தந்தை யார் என்ற ரகசியத்தை மதுராந்தகனின் காதில் சொன்னான். அவனும் ராஜகுமாரன் எனவும் தன்னுடன் […]

பொன்னியின் செல்வன் – 29

பொன்னியின் செல்வன் – 29

குந்தவை தன் தமையன் கரிகாலனின் இழப்பினாலும் வந்தியத்தேவன் பேரில் அந்தக் கொலைப்பழி விழுந்து கிடப்பதாலும் பெரும் கலக்கத்திலும் வருத்தத்திலும் இருந்தாள். அப்போது வானதி அங்கு வந்து, அவளை ஒரு இளம்பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறினாள். வந்தவள் மணிமேகலைதான். அவள் மிகுந்த சோர்வுடன் வந்து நின்றாள். அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தபோதும் தன் தமையன் அவள் அரண்மனையில்தான் கொலையுண்டான் என்பதால் குந்தவையால் மணிமேகலையின்மீது இரக்கம் கொள்ள இயலவில்லை. ஆனால் வந்தியத்தேவன் – கந்தமாறன் நட்பும் அதனால், கந்தமாறன் தன் […]

பொன்னியின் செல்வன் – 28

பொன்னியின் செல்வன் – 28

கொள்ளிடத்தின் வடகரையில் திருநாரையூரில் தன் மனக்கலக்கம் தீர, நம்பியாண்டர் நம்பியைச் சந்தித்துவிட்டு வந்த செம்பியன் மாதேவியை ஆழ்வார்க்கடியான் சந்தித்து, ஆதித்த கரிகாலன் மறைந்த செய்தியைக் கூறினான். பெரிதும் கலங்கிய பெரிய பிராட்டியிடம்,   இதனால் உள்நாட்டுப் போர் நடக்கும் அபாயம் இருப்பதால் இளைய பிராட்டி குந்தவையுடன் தஞ்சை சென்று அதைத் தடுக்கும் உபாயத்தைச் செய்யுமாறு ஆழ்வார்க்கடியான் கேட்டுக்கொண்டான். செம்பியன் மாதேவி அதைச் செய்வதாக ஒப்புக்கொண்டு ஆதித்தனின் மரணத்தைப் பற்றி விசாரிக்க, வந்தியத்தேவன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் தான் ஒரு ருசுவைத் தேடி […]

பொன்னியின் செல்வன் – 27

பொன்னியின் செல்வன் – 27

காளாமுகனாக வேடமிட்டு வந்திருந்த பெரிய பழுவேட்டரையரால் தாக்கப்பட்டு மயங்கியிருந்த வந்தியத்தேவன், அரைமயக்கத்தில் கண் திறந்து பார்த்தபொழுது, அங்கு காரிருள் அப்பியிருந்தது. கைகளால் துளாவிப் பார்த்தபொழுது, ஒரு திருகுமடல் கத்தி கிடைக்க, அதன் நுனியில் இருந்த பிசுபிசுப்பை உணர்ந்து வந்தியத்தேவன் அதிர்ச்சியுற்றான். தொண்டையில் காளாமுகன் அழுத்திப் பிடித்திருந்த காயத்தால் அவனுக்கு குரலும் வரவில்லை. பெருமுயற்சி செய்து அவன் எழுந்து நடந்தபொழுது எதிலோ தட்டுப்பட்டு விழுந்தவன், குனிந்து தொட்டுப் பார்த்ததும் அதிர்ந்தான். அது ஆதித்த கரிகாலனின் உயிரற்ற உடல் என்பதை […]

பொன்னியின் செல்வன் – 26

பொன்னியின் செல்வன் – 26

ஆதித்த கரிகாலன் உள்ளே நுழைந்தபோது சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே நுழைந்ததால், சற்று முன்பு மணிமேகலை ஒளிந்து கொண்டதன் விளைவாக திரைச்சீலை அசைந்ததை வைத்து யாரோ ஒளிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்துக் கொண்டான்.. நந்தினிக்கு அருகே தரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த வாளை அவள் எடுக்குமுன் குனிந்து, தான் எடுத்தான். அதன் நுனியில் புதிய ரத்தக்கறை இருப்பதைப் பார்த்தான். ‘அவனைப் போன்ற வீரர்களை வரவேற்க இதுவே சரியான முறை’ என நந்தினி கூர்மையாக கூறியதை ரசித்தான். தனது வாளைத் தன்னிடம் கொடுக்குமாறு […]

பொன்னியின் செல்வன் – Ps 25

பொன்னியின் செல்வன் – Ps 25

தஞ்சையில் சக்ரவர்த்தியின் உயிரைக் காக்க தன்னுயிரை விட்ட மாதரசி மந்தாகினி தேவியை நினைத்து அனைவரும் பெருமிதமும், வருத்தமும் கொண்டிருந்த அதே நேரத்தில் கடம்பூரில் நடந்த சம்பவங்களை பார்க்கப் போகிறோம். நந்தினி தனது அறையில் அலங்காரமுடைய கொலை வாளை எடுத்து தீப ஒளியில் அதன் பிரதிபலிப்பில் உவந்து அதை பயன்படுத்தும் வேளை வந்துவிட்டது எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். திடீரென மேலே பார்த்து வீரபாண்டியனின் ஆவிபேசுவதாக நினைத்துக்கொண்டு தான் கொடுத்த சபதத்தை நிறைவேற்றி விடுவதாக கெஞ்சினாள்.அப்போது மணிமேகலை உள்ளே வர […]

பொன்னியின்செல்வன் – 24

பொன்னியின்செல்வன் – 24

இளவரசர் வானதியின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே யானையின் மீதிருந்து இறங்கினார். இன்னமும் அவளுக்கு பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியது நினைவில் இருக்கிறதா என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். பூங்குழலி களைப்பினால் வாடி நின்றிருந்ததைக் கண்டு ‘சமுத்திரகுமாரி’ என அவளை விளித்து, அதுவரை நடந்ததையெல்லாம் இருவரின் வாயிலாகவும் அறிந்து கொண்டார். யானையினாலும், அங்குசத்தினாலும் பாதிப்பு ஏற்படுமென பழுவேட்டரையர் அறிந்திருந்ததைக் கேட்டு ஆச்சர்யப் பட்டவர், மந்தாகினி தனியே ஆபத்தில் சிக்கியிருக்கிறார் என்றறிந்ததும் பதைத்துப் போனார். பூங்குழலி, ‘தன் அத்தை அவருக்கு அந்திமக்காலம் […]

பொன்னியின் செல்வன் – 23

பொன்னியின் செல்வன் – 23

வெகுநேரம் கழித்து கண்விழித்த பழுவேட்டரையர் சோழ நாட்டை எத்தகைய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று சிந்திக்க முயன்றார்.  பெரும்பிரயாசைப்பட்டு தன்னை அந்த மண்டபக் கல்லிலிருந்து  விடுவித்துக் கொண்டவர், வெகுவாக அடிப்பட்டிருந்த போதும் தான் செய்ய வேண்டிய செயல்களை எண்ணி மனதிடத்துடன் எழுந்து நின்றார். அப்போது வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த தூமகேது பிரகாசித்து வானிலிருந்து பெரும் வெளிச்சத்துடன் ஒளிர்ந்து வீழ்ந்தது. துர்ச்சகுனமாக அதைக் கருதியவர்,  முதலில் நாகைக்கும், தஞ்சைக்கும் செய்தியை அனுப்பிவிட்டு ஆதித்த கரிகாலனை காப்பாற்ற தானே முயல வேண்டுமென […]

பொன்னியின் செல்வன் – 22

பொன்னியின் செல்வன் – 22

நாகப்பட்டினத்து சூடாமணி விஹாரத்தில் தங்கியிருந்த பொன்னியின் செல்வனுக்கு ஜூரம் குணமாகிவிட்ட பொழுதும் அங்கு மறைந்திருப்பது அசெளகர்யமாய் இருந்தது. எனவே அங்கிருந்த தலைமை பிஷூவிடம், புத்த சமயம் பற்றியும் அவர் சென்று வந்த நாடுகள் பற்றியும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது இளவரசரை புத்த பிட்ஷூகள் சேர்ந்து விஹாரத்தில் மறைத்து வைத்திருந்து புத்த சமயத்துக்கு அவரை மாற்ற முயற்சி செய்வதாக வதந்தி பரவி வருவதாக பிட்ஷூ வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்.அப்போது மக்கள் விஹாரத்தை சூழ்ந்து கொண்டு இளவரசரை வெளியே […]

பொன்னியின் செல்வன் – 21

பொன்னியின் செல்வன் – 21

ஆதித்த கரிகாலன் கடம்பூருக்கு வந்த நிமிடம் முதல் எல்லோரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு சம்புவரையரும், பழுவேட்டரையரும் வெகுவாகக் கலங்கிப் போயிருந்தார்கள். அவனிடம் பேசுவதற்கே அவர்கள் பயந்து தயங்கியிருந்த பொழுதில்ஆதித்த கரிகாலனே அவர்களை அழைத்துப் பேச ஆரம்பித்தான்.மதுராந்தகனுக்கு பட்டம் கட்ட சுந்தரசோழர் முடிவெடுத்திருப்பதாகவும், அதைப்பற்றிய சிற்றரசர்களின் அபிப்ராயம் என்னவென தெரிந்து கொண்டு, தான் முடிவெடுக்க இருப்பதாக நயந்து கூறினான். பழுவேட்டரையர் அதை நம்பி விட்டார்.உடனே நந்தினியின் திட்டமான நாட்டை பிரித்து கொடுக்கும் யோசனையைக் கூற கரிகாலன் வெகுண்டான்.‘கிழவர்களாகிய […]

பொன்னியின் செல்வன். 20

பொன்னியின் செல்வன். 20

நான்காம் பாகம் தொடர்ச்சி.. நாகப்பட்டினத்திலிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கோடியக்கரைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். தன் அத்தைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காகவும் பொன்னியின் செல்வன் மீதான தன் அன்பிற்கு ஏற்பட்டிருக்கும் தடைகளாலும் பூங்குழலி அரச குடும்பத்தினர் மீது பெருங்கோபம் கொண்டிருந்தாள்.சேந்தன் அமுதன் அவளை மணக்கும் ஆசையை வெளியிட்டதற்கும் சரியாக பதில் கூறவில்லை. அப்போது ஊமைராணி மந்தாகினி எதிர்ப்பட்டாள்.. சேந்தன் அமுதனைக் கண்டு சிறிது கலவரப்பட்டாலும் பூங்குழலி எடுத்துச் சொன்னவுடன் ஊமைராணி அவர்களிடம் நெருங்கி வந்தாள். பின், சேந்தன் அமுதனை […]

பொன்னியின் செல்வன் – 19

பொன்னியின் செல்வன் – 19

நான்காம் பாகம் – மணிமகுடம் நந்தினியின் முடங்கலைக் காட்டி, கந்தன்மாறன் ஆதித்த கரிகாலனை பார்த்திபேந்திரன் தூண்டுதலோடு கடம்பூருக்கு விருந்தாளியாக அழைத்து வந்துகொண்டிருந்தான்.நந்தினியை ஒரு தடவை சந்தித்துவிடுவது அவளைப் பற்றிய பல புதிர்களுக்குப் பதில்கள் தேட உதவலாம் என்பதால் ஆதித்த கரிகாலனும் சம்மதித்து இந்தப் பயணத்திற்கு உடன்பட்டான். கெடில நதியின் துறையில் கரிகாலனின் பாட்டனாரான மிலாடுடையார் அவனைத் தனியே அழைத்து இந்தப் பயணத்தை நிறுத்த இறுதியாக ஒரு முயற்சி செய்தார். கரிகாலன் உடன்படாததால், ‘வள்ளுவர் கூற்றின்படி தொழுத கையிலும் […]

பொன்னியின் செல்வன் – 18

பொன்னியின் செல்வன் – 18

குழந்தைச் சக்கரவர்த்தியை சிம்மாசனம் போல ஒன்றில் அமரச் செய்து நந்தினி நடத்திய நாடகம் முடிந்தது.‘ஆதித்த கரிகாலனை பழி முடிக்க வேண்டுமெனில் அவனது கடம்பூர் வருகையைத் தடுக்கச் செல்லும் வந்தியத்தேவனை தடுக்க வேண்டும்..அவனை நாங்கள் பிடித்து வைத்திருக்கிறோம்’ என்று ரவிதாசன் நந்தினியிடம் சொல்லி வந்தியத் தேவனை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.நந்தினியும் அவன் தங்களோடு சேர்ந்து விடும்படி மீண்டும் கூறினாள்..வந்தியத் தேவன் மறுக்கவே ரவிதாசன் அவனை கொன்று விடலாம் என்றான்..நந்தினியோ அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போய் விடலாம் […]

பொன்னியின் செல்வன் 17

பொன்னியின் செல்வன் 17

வானதியை அனுப்பிவிட்டு பழையாறை சிறைச்சாலைக்குச் சென்று வந்தியத்தேவனைச் சந்தித்தாள் குந்தவை. சற்றும் தயங்காமல் தன் மனதை அவனிடம் திறந்து காட்டினாள். அந்தஸ்து பேதத்தைச் சொல்லித் தயங்கிய வந்தியத்தேவனிடம் தன் கரங்களை நீட்டினாள். உணர்ச்சி மேலிட  அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் வந்தியத்தேவன். எதிர்ப்பேதும் இல்லாமல் அவனது கரங்களோடு தன் கரங்களைப்  பிணைத்துக்கொண்டவள்,  “உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒருநாளும் பற்றாது” என உறுதிமொழி கூறியதில் அவன் தன்னைமறந்து […]

பொன்னியின் செல்வன் 16

பொன்னியின் செல்வன் 16

பழையாறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வந்தியத்தேவன் தனது குதிரையின் காலில் அடிப்பட்டிருந்ததை அறிந்தான். அராபியர்கள்போல் அதன் குளம்புகளில் லாடம் அடிக்கலாம் என்று கருதி ஒரு கொல்லுப்பட்டறையை அணுகினான். அந்தக் கொல்லன் மீன் முத்திரை பதிக்கப்பட்ட அபூர்வமான வாள் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தான். அந்த மீன் முத்திரையை அழிக்கும் வேலை அதுவென்று வந்தியத்தேவன் புரிந்துகொண்டான். கொல்லன் தான் செய்துகொண்டிருக்கும் பணியை முடித்துவிட்டு லாடம் செய்துதருவதாகக் கூறினான். வந்தியத்தேவன் பெரிதும் களைத்திருந்தபடியால் ஓரமாய்ப் படுத்து உறங்கலானான். உறக்கத்தில் பல்வேறு கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டு […]

பொன்னியின் செல்வன் – 15

பொன்னியின் செல்வன் – 15

மூன்றாம் பாகம் – கொலை வாள் நாகப்பட்டின புத்த பிட்சுகள் சுந்தர சோழரைச் சந்திக்க வந்தபொழுது, ‘இலங்கை அரசுரிமையை அத்தீவின் புத்த சங்கம் ஒன்று இளவரசர் அருள்மொழி வர்மருக்குக் கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறியதைச் சாதகமாக்கி, பெரிய பழுவேட்டரையர் இளவரசரைக் கைது செய்யும் ஆணையை வாங்கியிருந்தார். அரசரும் அருள்மொழியிடம், ‘மதுராந்தகருக்கே பட்டத்தைக் கொடுத்து விடலாம்’ என்ற தன் விருப்பத்தை நேரில் சொல்லி ஏற்கச் செய்யலாம் என்ற காரணத்தினால்தான் அதற்குச் சம்மதித்தார். அருள்மொழிக்கு மக்களின் ஆதரவு அதிகமாய் இருந்ததால் […]

பொன்னியின் செல்வன் – 14

பொன்னியின் செல்வன் – 14

மண்டபத்திலிருந்து அருள்மொழி வர்மன் குழுவினர் வெளியேறி நடந்தனர். வழியிலேயே பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் பெரிய வேளாரும் சைன்யத்துடன் வந்து கொண்டிருந்தனர். பூங்குழலியும் அவர்களுடன் வந்திருந்தாள். அனைவரும் சாலையோரமிருந்த மண்டபத்திற்குச் சென்று பேசலாமென முடிவெடுத்தனர். போகும் வழியில், பூங்குழலி உதவி கேட்டது வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வர இளவரசரிடம், “சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?” எனக் கேட்க, அவர் “சரிவர நினைவில்லை” என பதிலளித்தார். வந்தியத்தேவன் பூங்குழலியைத் திரும்பி பார்க்க, அவள் தன் வழக்கத்திற்கு மாறாக நாணத்துடன் கடைக்கண்களால் இளவரசரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்டு […]

பொன்னியின் செல்வன் – 13

பொன்னியின் செல்வன் – 13

சின்ன பழுவேட்டரையரிடம் பாதாளச் சிறையின் சாவியைப் பெற்றுக்கொண்ட குந்தவை, வானதியை அழைத்துக்கொண்டு வைத்தியர் மகனைக் காணச் சென்றாள். பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கச்சாலையின் பின்புறமாகப் பாதாளச் சிறைச்சாலை இருந்ததால் அதற்கான கட்டுக்காவலும் அதிகமாக இருந்தது. அங்கு சென்றபோது சேந்தன் அமுதன் தேவாரப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் யார் என்பதையும், அவன் வந்தியத்தேவனுக்குச் செய்த உதவியையும் பற்றி குந்தவை தெரிந்து கொண்டாள். வைத்தியர் மகனைப் பழுவூர் இளையராணியின் ஆட்கள் அழைத்துப் போனதையும், வந்தியத்தேவன் காவலர்களிடம் இருந்து […]

பொன்னியின் செல்வன் – 12

பொன்னியின் செல்வன் – 12

இலங்கையில் நிலைமை அவ்வாறிருக்க, பழையாறையிலிருந்து குந்தவையும் வானதியும் தஞ்சைக்குக் கிளம்பினார்கள்.  நாட்டில் அரசியல் சூழ்ச்சி நடைபெறுவதை வந்தியத்தேவன் மூலம் கேட்டதிலிருந்து, உடல்நலம் சரியில்லாத தன் தந்தையுடன், சகோதரர்களும் அருகே இல்லாத சூழ்நிலையில், தான் அங்கே இருப்பதுதான் நியாயம் என குந்தவைக்குத் தோன்றிவிட்டது. செல்லும் வழியில் வானதி, அருள்மொழிக்கு ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயர் வந்த காரணத்தைக் குந்தவையிடம் கேட்க, அவள் சொல்லலானாள். ‘”ருள்மொழிவர்மன் குழந்தையாக இருக்கையில் படகில் குடும்பத்துடன் பொன்னி நதியில் செல்கையில், தவறி நதியில் விழுந்து […]

பொன்னியின் செல்வன் – 11

பொன்னியின் செல்வன் – 11

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.மறுநாள், தியாகவிடங்கக் கரையரை […]