ம(க்கா)தக் குப்பை

ம(க்கா)தக் குப்பை

கவிதை கடற்கரை எங்கும்கடவுள் கிடக்கிறார் மடங்கிய கையுடன்மல்லாந்து கிடக்கிறார் உடைந்த கால்கள்ஒதுங்கிக் கிடக்கின்றன கடலும் இரங்கிக்கண்ணீர் வடித்ததுதடவித் தடவித்தானும் ஓய்ந்தது சங்கச் செல்வர்கள்சரித்துப் போட்டபின்தங்க நேரமின்றிசரக்கடிக்கப் போய்விட்டார் துங்கக் கரிமுகத்தோன்சுருண்டு கிடக்கஅங்கவன் கண்கள்ஆகாயம் பார்த்தன மக்காத குப்பைதான்மதவெறி என்பதால்தக்க வைக்காமல்சமுத்திரம் தள்ளியதோ!

தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமா ‘நான் முதல்வன் திட்டம்?’

தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமா ‘நான் முதல்வன் திட்டம்?’

உயர் கல்வித்துறையில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மத்தியில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்துத் தற்போது மிகப்பெரும் விவாதங்கள் நடைபெறுகின்றன. 63 பக்கங்களைக் கொண்ட NHEQF (National higher education qualification frame work) என்று சொல்லக்கூடிய தேசிய கல்விக் கொள்கையின் தகுதி வரைவு அறிக்கையானது, அனைத்து உயர்கல்வி அமைப்புகளையும் ஒற்றை அமைப்பின் கீழ் கொண்டுவந்து HECI (Higher Education Commission of India) எனப்படும் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்துவது அதன் நோக்கமாகவும் உள்ளது.  இதனைப் பிரதிபலிக்கும் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 12

திருப்பூர் எனும் திருப்புமுனை – 12

தொழில் நிறுவனங்களின் நிலை திருப்பூரின் தொழில் வளர்ந்த வரலாறு, இன்றைய சிக்கல் மற்றும் தீர்வுகள் குறித்துப் பேசும் திருப்பூர் எனும் திருப்புமுனை தொடரில், தொழிலின் போக்கு மற்றும் பல்வேறு நிலைகளில் சந்திக்கும் சிக்கல் குறித்துப் பார்த்துவருகிறோம். இந்தப் பகுதியில் தொழில் நிறுவனங்களின் போக்கு குறித்துக் காணலாம். ஒரு பின்னலாடை நிறுவனம் எப்படி உருவாகிறது என்பது குறித்தும் வர்த்தக முறைகள், இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஏற்கனவே சில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். காலங்கள் செல்லச் செல்ல […]

திருப்பூர் எனும் திருப்புமுனை -11

திருப்பூர் எனும் திருப்புமுனை -11

தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஆய்வுமுறை நெருக்கடிகள் கடந்த அத்தியாயத்தில் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆய்வுகள் மற்றும் சர்வதேசச் சான்றிதழ்கள் குறித்துப் பார்த்தோம். பின்னலாடைகளுக்கான தர ஆய்வுகள் மற்றும் அதன் சான்றிதழ்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். பின்னலாடைத் தயாரிப்பு என்பது பல உற்பத்திப் படிநிலைகளைக் கடந்து வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இறக்குமதியாளர்கள் இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்களை வழங்கும்போதே அதற்குரிய தரக்கட்டுப்பாடுகளை உறுதி செய்வர். இதில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமே தங்களின் சொந்தத் தரக் கட்டுப்பட்டுப் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 10 

திருப்பூர் எனும் திருப்புமுனை – 10 

நெருக்கடிகளையும் போராட்டங்களையும் கடந்த பயணம் ஏற்றுமதி நிறுவனங்களின் கட்டமைப்பில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்தப் பகுதியில் காண்போம்.   1980களில் ஏற்றுமதி தொடங்கிய காலத்தின் தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களின் கட்டமைப்பில் தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்தே ஜவுளித் தொழில் பயணிக்கிறது. அன்றைய காலகட்டத்தில் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பில் உருவான இயந்திரங்களே அனைத்து உற்பத்தி நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்தன. 1990களில் தொடங்கிய உலகமயமாக்கல் காரணமாக ஜப்பான், சீனா, கொரியா, ஐரோப்பா, துருக்கி, அமெரிக்க போன்ற நாடுகளிலிருந்து தையல், […]

கடவுளும் முரண்களும்

கடவுளும் முரண்களும்

கவிதைகள் பன்னாட்டு நிறுவனத்தில் எனக்குநாளை நேர்முகத் தேர்வு இருக்கிறதுஉனது காணிக்கையான என் முடியைஇன்று இறக்க முடியாது என்றஎன் கோரிக்கைக்குஆயிரம் ரூபாய் நன்கொடைஅளித்தால் போதும் என்றஉன் பூசாரிக்குநான் என்ன பெயர் வைப்பேன்?நீயும்தான் என்ன பெயர் வைப்பாய்? குதர்க்கமாகப் பேசுகிறேன் என்றுநினைக்க வேண்டாம் ஒன்று பிச்சை இடுகிறீர்கள் – அல்லதுபிச்சை எடுக்கிறீர்கள் கடவுளைஉங்களோடு தொழுவதில்கூடஎனக்கு முரண்பாடு இருக்கிறது வேண்டா வெறுப்பாகஒவ்வொரு முறையும்ஏதாவது ஒரு தேய்வத்தின் முன்நிறுத்துகிறார்கள் என்னை அவர்கள் வேண்டுகிறார்கள்எனக்கோ கேள்விகள்தான் பிறக்கின்றன ஒருபோதும்எழுதுகிறவனுக்குக் கடவுள் இல்லை என்றுயார் சொல்வது?அப்படி […]

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் திட்டத்துக்கு நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பலரும் தெரிவித்து வருகின்றனர். கோதுமை ரவா உப்புமாவுடன் காய்கறி, பருப்பு சாம்பார்; சேமியா காய்கறிக் கிச்சடி, வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், சோள காய்கறிக் கிச்சடி, ரவா கேசரி என, திங்கள் முதல் வெள்ளி வரை […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

வசதியான வரையறையைக் கடந்தால் வளர்ச்சி தொடர்ந்து இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து, கருத்துகளைப் பகிரும் நண்பர்களுக்கு நன்றி. பல்வேறு கேள்விகள் மற்றும் விபரங்களைக் கேட்டும், இதுகுறித்து எழுதவில்லையா என்கிற கேள்விகளும் என்னிடம் முன்வைக்கப்படுகின்றன. அனைத்து விவரங்களும் கோர்வையாக வர வேண்டும் என்கிற கவனத்துடன் ஒவ்வொரு தரவுகளையும் எழுதிவருகிறேன். அடுத்தடுத்து வரும் பகுதிகளில் விடுபட்ட ஒவ்வொன்றையும் அவசியம் எழுத விழைகிறேன். செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்திக்கான துணி வகைகள் பல. அவற்றுள் முக்கியமானவை பாலியஸ்டர், நைலான், மொடால், பாம்பூ, […]

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

அண்மைக் காலத்தில் கணினி அறிவியலின் விரிந்து பரந்த நவீனத் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) காணப்படுகிறது. பொதுவாக, மனித நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளை, நுட்பத்துடன் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் பணியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயற்கை நுண்ணறிவு என்பது திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு காணுதல், பன்முகச் சிந்தித்தல், எண்ணங்களை ஆராய்ந்து தெளிதல், கற்றதைச் செயல்படுத்தல் என்பன போன்ற நுண்ணறிவுத் திறன்களை உள்ளீடாகக் […]

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச் செல்வதையே இலக்காகக் கொண்ட, காலத்தால் உருவாக்கப்பட்டவர்தான் தோழர் ஜீவா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தோழர் ஜீவானந்தம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907 ஆகஸ்ட் 21ஆம் தேதி பிறந்தார் ஜீவா. ஜீவாவின் பெற்றோர் பட்டம் பிள்ளையும் உமையம்மையும் அன்றைய ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்கள். பொருளாதார வசதியில் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை -7

திருப்பூர் எனும் திருப்புமுனை -7

போட்டி உற்பத்தியாளர்கள் திருப்பூர் பின்னலாடைத் துறையின் தோற்றம் மற்றும் கடந்து வந்த பாதையில் நாம் இந்தப் பகுதியில் பார்க்க இருப்பது, போட்டி உற்பத்தியாளர்கள். அதற்கு முன்பாக, நம் நாட்டில் வேறு எங்கெல்லாம் பின்னலாடை உற்பத்தி நடைபெறுகிறது எனப் பார்ப்போம், சென்னை, கர்நாடகா, மகாராஷ்டிரா, லூதியானா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தேவைகளுக்கான பின்னலாடைகள் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால், திருப்பூர் மட்டுமே 55% அளவுக்கு நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் உற்பத்திக்கான பங்களிப்பைச் செய்கிறது. இந்தியா […]

பவால்

பவால்

திரை விமர்சனம் அஜய் தீட்சித்தின் பிரச்சனை, அவன் லக்னோ பள்ளி ஒன்றின் வரலாற்று ஆசிரியராக இருப்பதோ, தனக்குத் தானேயும் மற்றவர்களிடத்திலும் தன்னைப் பற்றிய போலியான ஒரு பெரிய பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டதோ,  அறிவும் அழகும் கொண்ட நிஷா மனைவியாக வாய்த்ததோ அல்ல. அவளுக்கு வலிப்புக் குறைபாடு இருப்பதை அறிந்து அவளை ஒதுக்க – அது அவர்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தியதும்  மனக் குழப்பத்தில் எம்.எல்.ஏ. விஷ்வாஷ் ரகுவன்சியின் மகன் அதுல் ரகுவன்சியை வகுப்பில் ‘பளா’ரென்று அறைந்ததும்தான்.   […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடைத் தொழில் வளர்ச்சியால் மாநகரமாக விரிவடைந்தது, பின்னலாடைத் தொழிலின் படிநிலைகள், திருப்பூரின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொழிலுக்கான அடிப்படை, முதலீடு மற்றும் அவை தொடர்பான தரவுகளைக் காண்போம். முந்தைய பகுதிகளை வாசிக்கத் தவறியவர்கள் கீழே […]

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

(இறுதிப் பகுதி) 14. அசுவத்தாமா செய்தது கொரில்லா யுத்தமா? கர்ணனின் தூய மனம் பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் சென்ற பகுதியில் பார்த்தோம். அவனது செய்நன்றி அறிதலின் சிறப்பைச் சொல்லும் உபகதை ஒன்றை இப்போது காண்போம். குந்திதேவிதான் தனது தாய் என்று தெரிந்துகொண்ட கர்ணன், குந்திதேவியிடம் கேட்ட இரண்டு வரங்களில் ஒரு வரம் முக்கியமானது. “தாயே, நான் படுகளத்தில் மரணத் தருவாயில் கிடக்கும்போது, நீ என்னை ‘மகனே’ என்று வாயார அழைத்து என்னை உன் மகன் என்று உலகுக்கு […]

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 5 முந்தைய 4 பகுதிகளில் திருப்பூரின் அடிப்படைத் தொழில் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் ஆதரவுக்கும் சமூக ஊடகத் தொடர்புத் தளங்கள் வாயிலாக கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோருக்கும் நன்றிகளும் பேரன்பும். இந்தப்ப பகுதியில் திருப்பூரில் தயாராகும் ஆடைகள் சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன, அங்குள்ள வர்த்தகக் கட்டமைப்பு குறித்தான விவரங்களைக் காண்போம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதிக்குத் தயாராகும் ஆயத்த ஆடைகள், ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகள், […]

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் சிலர், அதே பள்ளி மாணவர் மீதும் அவர் சகோதரி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது சமூகத்தில் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. மாணவர்களிடம் மிக வேகமாகப் பரவிவரும் மது மற்றும் இதர போதைப் பழக்கங்கள், வகுப்பறையிலும் பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் போன்றவற்றைக் குறித்தெல்லாம், இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் பேசுவதும், பின்னர் வழக்கம்போல அடுத்த சம்பவம் நடக்கும்வரை அவற்றையெல்லாம் மறந்துவிட்டு இருப்பதும் நம் சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.  குறிப்பாக, கடந்த […]

அத்தியாகிரகம்

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம் துகள்களும்கோரப் பார்வையோடு வெறித்தபடி நடக்கும்கால் நரம்புகளை ஊடுருவி கண் நரம்புகளைச் சிதைக்கும்அத்தியாகிரகத்திற்குஅழைப்பு விடுத்திருக்கின்றன மெளனச் சாணத்தால்கிழவனின் கண்ணாடிச் சில்லுகளைஒருபோதும் ஒற்றி எடுத்திட முடியாது நாடே போற்றிய எழுபத்தைந்துநைந்து போனது வீதியெங்கும் மூவர்ணம்பறக்க-விட்டோம்வீடெங்கும் ஏற்றி வைத்துச்சிறக்க வைத்தோம் அதையின்றுஉயர் வர்ணம் யாரென்றகர்ணத்தில் உடைத்துவிட்டார்கள் கிழவனின் கண்ணாடிச் சில்லுகளின் மீதுமெளனத்தை அடைகாக்க அனுமதித்தால் ஆபரணங்களைப் போலஆடைகளுக்கும்வட்டி கட்ட […]

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆம், கல்விமுறை மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, தற்போதைய கல்விமுறை என்பது, அதன் பொருளை மறந்து, தேர்வுகள், திறன்கள், வேலைவாய்ப்பு எனத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட கடிதம் ஒன்று தமிழ்நாடு தேர்வுகள் துறையிலிருந்து பள்ளிகளுக்கு வந்தது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவித்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

தொழிலாளர் பங்களிப்பு பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்திப் படிநிலைகள் ஆகியவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தத் தொழிலின் அடிநாதமும் வெற்றிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றுமான தொழிலார்களைக் குறித்து இந்தப் பகுதியில் காண்போம். நூற்பாலைகள் அதிகமிருந்த ஊர் திருப்பூர் என்ற தரவை முன்பே பதிவு செய்திருந்தோம். அந்தவகையில், பின்னலாடைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் எளிதாகப் பங்குபெற இயன்ற சூழல் அமைந்தது. ஆடை உற்பத்தியில் பல்வேறு படிநிலைகள் கொண்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் வாய்ப்புகள் அமைந்தன. அதிகப்படியான […]

ஆடி மாதம்

ஆடி மாதம்

கவிதை வானமே கூரையெனவாழ்ந்திருந்த சாமிகள்மூன்று பிரகாரங்கள் கொண்டகான்கிரீட் கட்டடத்துக்குள்அடைக்கப்பட்டனர் கோயில்கள் எல்லாம்ஆலயங்கள் ஆகிவிட்டனபேச்சியம்மனுக்கும் முண்டகக்கண்ணிக்கும்கூடஸ்ரீ என்ற முன்னொட்டு சேர்ந்துகொண்டுவிட்டது எல்லாத் தெருக்களிலும்எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார்எல்.ஈ.டி. அலங்காரக் கட் அவுட்டிலிருந்துஅருள்பாலிக்கிறார்கள் அம்மன்கள் முளைப்பாரி சுமந்துவரும்ஆறு பேருக்கு முன்பாகஎட்டுப் பேர் வருகிறார்கள்கொட்டு அடித்தபடி பொங்கல் வைப்பவர்கள் ஒருபக்கம்கூழ் ஊற்றுபவர்கள் மறுபக்கம்பொங்கிப் பெருக்கெடுக்கிறதுநாள் முவழுதும் பக்திப் பரவசம் மாலையில் தொடங்குகிறதுதீ மிதிக்கும் நிகழ்வுஆத்தாவின் சக்தியில் ஐயம் கொண்டுஅருகே நிறுத்தப்படுகிறது ஆம்புலன்ஸ் முன்னிரவில் களை கட்டும்இசைக் கச்சேரியும் ஆடலும் பாடலும்கூடவே, கூழ் வார்த்த களைப்பு […]